செய்திகள்

குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் எண்ணிக்கை 10,748 TNPSC group 4 vacancy has been increased 2023

TNPSC group 4 vacancy has been increased 2023

TNPSC group 4 vacancy has been increased 2023

குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தியது TNPSC..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் எண்ணிக்கை 10,748 தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது,இதை பற்றி முழுமையான தகவல்கள் இங்கே காணலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4,குரூப்-2,குரூப்-A2,குரூப்1 ஆகியவற்றில் அடங்கிய பணியிடங்களுக்கான போட்டி தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

பெரும் நோய் தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகள் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.

2022 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வுக்காக அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது,இதில் 18 லட்சத்திற்கு அதிகமான இளைஞர்கள் தேர்வு எழுதினார்கள்.

இந்த தேர்வின் மூலம் 7 ஆயிரத்திற்கு அதிகமான காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என தகவல்கள் வெளியிடப்பட்டது,பின்னர் காலிப்பணியிடங்களின் 10,117 எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

குரூப்-4 தேர்வு முடிவு கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியானது சான்றிதழ் சரிபார்ப்பு அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது, இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு நடைபெறாது என டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு அடுத்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வு வாய்ப்பு கிடைக்கும்.

இதனால் கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 உயர்த்தப்பட்டுள்ளது,என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக கூடுதலாக 631 நபர்களுக்கு குரூப் 4 வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த செய்தியை தமிழ்நாடு தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது,அதே சமயம் இன்னும் இந்த பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு முறைகேடுகள்

இறுதியாக வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தேர்வு எழுதிய நபர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அரசியல் கட்சி தலைவர்களும் இதே கருத்தை உறுதி செய்கிறார்கள் ஏனெனில் தேர்வு எழுதிய நபர்கள் தங்கள் எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் அதற்கு தலைகீழாக இருந்ததால் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான நபர்கள்.

இன்னும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையத்தை TNPSC நோக்கி கேள்விகளை சமூக வலைத்தளம் மூலமும் தபால் மூலமும் கேட்டு வருகிறார்கள்.

இப்பொழுது 2023 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வுகள் நடைபெறாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது இளைஞர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் நோய் தொற்று காரணமாக போட்டி தேர்வு நடத்தப்படவில்லை.

இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதன் பிறகு ஆண்டுதோறும் போட்டி தரும் நடத்தப்படும் என எதிர்பார்த்த இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது.

மறுபடியும் போட்டித் தேர்வு வருகின்ற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

ரூ 1000 உரிமைத் தொகை இப்படித்தான் கிடைக்குமா

புதிய ரேஷன் கார்டு வாங்கப்போகிறீர்களா?

செட்டிநாடு முட்டை கிரேவி மசாலா செய்வது

சருமத்தை இயற்கையாக பளபளப்பாக மாற்றுவது

What is your reaction?

Excited
3
Happy
6
In Love
0
Not Sure
3
Silly
0