
Tomato Price Continues to Rise in The Country
தாறுமாறாக எகிறி அடிக்கும் தக்காளி விலை நீங்கள் எதிர் பார்க்காத பாதிப்பு கடுமையாக இருக்கும் எப்போது விலை குறையும்..!
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளதால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
விலை எப்பொழுது குறையும் என்பது குறித்து வியாபாரிகள் என்ன தகவல் சொல்கிறார்கள் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
நமது நாட்டில் சமையலில் தக்காளியை தவிர்க்கவே முடியாது, பெரும்பாலான உணவுப் பொருட்கள் தக்காளி இல்லாமல் சமைக்க முடியாது,சைவம் அசைவம் என எதுவாக இருந்தாலும் தக்காளி கட்டாயம் தேவை.
இதனால் தக்காளி விலையும் முக்கியம் தக்காளி விலை உயர்வது நடுத்தர ஏழை எளிய மக்கள் வரை சமையலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த சூழலில் தக்காளி விலை சில காலமாகவே தொடர்ந்து கணிசமான முறையில் உயர்ந்து வந்து இப்பொழுது ஏழை எளிய நடுத்தர மக்கள் தொட முடியாத இடத்தில் இருக்கிறது.
மெல்ல மெல்ல அதிகரிக்கும் விலை
இந்த சூழலில் தான் சில நாட்களாக தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது,தக்காளி வரத்து குறையும் நிலையில் அதன் விலை தாறுமாறாக உயர்கிறது.
சில நாட்களில் தக்காளி விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது சில நாட்களுக்கு முன்பு வரை ரூபாய் 40க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இப்பொழுது ரூபாய் 100 கடந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாகவே தக்காளி விலை 100 ரூபாய் கடந்து விற்பனை செய்து வருகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் தினசரி 1200 டன் தக்காளி வரும் சூழ்நிலையில் இருப்பினும் பல்வேறு சூழ்நிலை காரணமாக இப்போது கோயம்பேடு மார்க்கெட் 600 முதல் 700 டன் தக்காளி மட்டுமே வருகிறது.
சில நாட்களில் தக்காளி விலை அதிகரிக்க இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.
கோடைக்காலம், பாசன நீர் பற்றாக்குறை, கடும் வெயில், உள்ளிட்ட பல்வேறு விவசாய பின்னணி காரணமாக உற்பத்தி திடீரென்று ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஓசூர், போன்ற தக்காளி உற்பத்தி செய்யும் இடங்களில் குறைந்துள்ளதால் விலை என்பது இப்பொழுது 100ஐ கடந்துள்ளது.
100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல முக்கிய மெட்ரோ நகரங்களிலும்,தொழிற்சாலை இருக்கக்கூடிய இடங்களிலும் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய இடங்களிலும் தக்காளி விலை இப்பொழுது உச்சத்தில் இருக்கிறது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விலை 100 ரூபாய் கடந்து விட்டது,இது பல லட்சம் குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் தக்காளி விலை இப்பொழுது அடிப்படை ரூபாய் 80 முதல் அதிகபட்சமாக ரூபாய் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதிக வெப்பம் மற்றும் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இதுவே தக்காளி உற்பத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விலை கிடுகிடுவென உச்சம் தொட்டுள்ளது தக்காளி விலை என்பது குடும்பங்களுக்கு மட்டுமின்றி நாட்டிற்கே சிக்கல்தான்.
தக்காளி விலையால் நாட்டிற்கு என்ன பிரச்சனை என்று யோசிக்கிறீர்களா இதைப்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் ஏற்பட முக்கிய காரணம்
கடந்த சில மாதங்களாக பண வீக்கம் தொடர்ந்து நம் நாட்டில் குறைந்து வருகிறது இந்த சூழலில் தக்காளி விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
இது பணவிக்கத்திலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது பசிபிக் பெருங்கடலில் எல் நினோ காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்தும் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எல் நினோ (El Nino) காரணமாக திடீரென்று இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் பருவ மலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட போகிறது என்பது உண்மையான விஷயம்.
கடந்த 2017 – 2018 போன்ற வருடங்களில் எல் நினோ (El Nino) காரணமாக தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது அப்போது காய்கறிகளின் விலை உச்சகட்டத்தில் இருந்தது.
இப்பொழுது எல் நினோ (El Nino) பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ளதால் இனி வரும் காலங்களில்.
தமிழகம்,இந்தியா மற்றும் உலகில் பருவமழை எப்படி இருக்க போகிறது என்று கணிக்க முடியாமல் வல்லுனர்கள் தினரி வருகிறார்கள்.
நம் நாட்டில் பல மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில நாட்களில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது,தக்காளி விலை இந்த மாதம் முழுக்க இந்த அளவில் இருக்கும் என்று வியாபாரிகள் கணித்துள்ளார்கள்.
இதற்கிடையே மக்களுக்கு உதவும் வகையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி இப்பொழுது ரூபாய் 68க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தக்காளி மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் வேறு சில காய்கறி விளையும் உச்சகட்டத்தில் இருக்கிறது.
ஒரு கிலோ பீன்ஸ் ரூபாய் 70, கேரட் ரூபாய் 45, சாம்பார் வெங்காயம் ரூபாய் 40, பாகற்காய் ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு
TN rs 1000 scheme ration card list details
தலை முடி உதிர்வதை 7 நாட்களில் தடுப்பது எப்படி
Tamil Nadu ITI Colleges courses list