Uncategorized

Top 10 richest states of 2022 in India in tamil

Top 10 richest states of 2022 in India in tamil

Top 10 richest states of 2022 in India in tamil

இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்களில் தென் மாநிலங்கள் எத்தனை உள்ளது வட மாநிலங்களின் நிலை என்ன..!

இந்த உலகில் பன்முகத்தன்மை கொண்ட ஒரே நாடு என்றால் அது இந்தியா தான், இந்தியாவில் பல்வேறு வகையான மொழி, கலாச்சாரம், சமயம், என்று பன்முகத் தன்மையோடு இந்திய உள்ளது.

இந்தியாவில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியல் இப்பொழுது பட்டியலிடப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் மற்றும் அவற்றின் வலிமை என்ன, அந்த மாநிலங்களுக்கு எப்படி வருவாய் வருகிறது, என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

மகாராஷ்டிரா

இந்தியாவின் பணக்கார மாநிலம் என்றால் அது மகாராஷ்டிரா தான் அதன் தலைநகரம் மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக விளங்குகிறது.

மகாராஷ்டிராவின் ஜிடிபி 35.81 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, மகாராஷ்டிராவின் மக்கள்தொகையில் சுமார் 45% நகரப்பகுதியில் வசிக்கிறார்கள்.

உற்பத்தி சர்வதேச வர்த்தகம், வெகுஜன ஊடகம், விண்வெளி தொழில்நுட்பம், பெட்ரோலியம், ஆடை ஆபரணம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் மகாராஷ்டிரா பக்க பலமாக உள்ளது.

மகாராஷ்டிராவின் வருவாயில் விவசாயம் மட்டும் சுமார் 51%, தொழில்துறை 9% ,சேவைகள் துறை 40%, வருவாய் கொடுக்கிறது.

தமிழ்நாடு

இந்தியாவின் 2வது மிகப்பெரிய பணக்கார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது, மாநிலத்தில் 50 சதவீத மக்கள் நகர்பகுதியில் வசிக்கிறார்கள், தமிழ்நாட்டின் தற்போதைய ஜிடிபி 24.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மாநிலத்தின் ஜிடிபியில் 45% சேவைத்றையும், 34% உற்பத்தித் துறையும், 27% விவசாயத் துறையும் பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன பாகங்கள் பொறியியல் மருந்துகள், ஆடை ஜவுளி பொருட்கள், தோல் பொருட்கள்,ரசாயனங்கள், வணிகங்கள், முக்கிய பலமாக இருக்கிறது.

குஜராத்

குஜராத்தின் ஜிடிபி 22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இந்த மாநிலத்தின் முக்கிய பல விவசாய மற்றும் தொழில்துறை புகையிலை, பருத்தி ஆடைகள் மற்றும் பாதாம் உற்பத்தித் துறையில் குஜராத் முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில் தயாரிக்கப்படுகிறது, மாநிலத்தின் மொத்த ஜிடிபியில் விவசாயம் 18% தொழில்துறை 45% சேவைகள் துறை 35% இருக்கிறது.

கர்நாடகா

கர்நாடகாவில் ஜிடிபி 18.66 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இந்தியாவின் மென்பொருள் உற்பத்தி இடமாக கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூரு உருவாகியுள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், இந்தியா டெலிபோன் இன்டஸ்ட்ரி,மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன.

ஜிடிபியில் ஐடி, வேளாண், விண்வெளியில், ஜவுளி மற்றும் ஆடை, உயிரிய தொழில்நுட்பம், மற்றும் கனரக வாகனம், பொறியியல் தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

மாநிலத்தில் சேவை துறையில் 64% விவசாயத்துறை 10% தொழில்துறை 26%.

உத்திரபிரதேசம்

உத்திரப் பிரதேசத்தின் ஜிடிபி 15.80 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட நகரங்கள் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இருக்கிறது.

கைத்தறி, கைவினை பொருட்கள் மற்றும் விவசாயம் ஆகியவை மாநில மக்களுக்கு வருமானம் அளிக்கிறது.

மாநிலத்தில் சேவை துறையில் 50%, விவசாயத்துறையில் 24%, தொழில்துறை 26% இருக்கிறது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தின் ஜிடிபி 13.14 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது, விவசாய மற்றும் நடுத்தர தொழில் மேற்கு வங்கத்தின் பொருளாதாரத்திற்கு முக்கிய முதுகெலும்பாக இருக்கிறது.

மாநிலத்தில் சேவை துறையில் 53%, விவசாயத்துறை 21%, தொழில்துறை 26 சதவீதமாக இருக்கிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தின் மொத்த ஜிடிபி 10.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது,கனிம வளம் நிறைந்த மாநிலம்  பொருளாதாரம், விவசாயம், சுரங்கம் மற்றும் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

மாநிலத்தில் தங்கம், வெள்ளி,பளிங்கு கற்கள், சுண்ணாம்பு கற்கள், ராக் பாஸ்பேட், தாமிரம் மற்றும் லிக்னைட் படிவுகள் நிறைந்துள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தி செய்யும் மாநிலமாக இருக்கிறது.

ராஜஸ்தான் அதன் வரலாற்றுப் பாரம்பரியம் காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய நகரமாக மாறியுள்ளது.

மாநிலத்தின் ஜிடிபியில் சேவை துறையில் 47%, விவசாயத்துறை 44%, தொழில்துறை 8 சதவீதமாக, இருக்கிறது.

ஆந்திர பிரதேசம்

ஆந்திரப் பிரதேசத்தின் மொத்த ஜிடிபி 9.73 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது இங்கு 62 சதவீத மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்.

தொழில் தொடங்குவதில் இந்தியாவின் சிறந்த மாநிலம் ஆந்திரப் பிரதேசம் என உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்த மாநிலம் இந்தியாவில் 70 சதவீத இறால் உற்பத்தி செய்கிறது, மாநிலத்தின் ஜிடிபியில் சேவைத்துறை 47%, விவசாயத்துறை 44%, தொழில்துறை 8 சதவீதமாக இருக்கிறது.

தெலுங்கானா

தெலுங்கானாவின் ஜிடிபி 10.49 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இங்கு இரண்டு பெரிய நதிகளான கிருஷ்ணா மற்றும் கோதாவரி உள்ளதால் அதிக அளவிலான பாசன வசதி இருக்கிறது.

ஐடி சேவைகள் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது இம்மாநிலம்.

மாநிலத்தில் சேவைத் துறையில் 26 சதவீதம், விவசாயத்துறை 55சதவீதம், தொழில்துறை 17 சதவீதமாக, இருக்கிறது.

மத்திய பிரதேசம்

2021-2022 நிதியாண்டில் மத்திய பிரதேசத்தின் ஜிடிபி 11.32 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது, நாட்டிலே வைரம் உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் என்றால் அது மத்திய பிரதேசம்.

மாநிலத்தின் சிடிபி சேவை துறையில் 37% விவசாயத்துறை 62%  தொழில்துறை 5 சதவீதமாக இருக்கிறது.

கேரளா

கேரளாவின் ஜிடிபி 8.76 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இந்த மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு முக்கிய வருவாய் சேவைத் துறையில் இருந்துதான் கிடைக்கிறது.

கேரளாவில் சுமார் 85% இயற்கை ரப்பரும், 97% கருப்பு மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது.

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை 10 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

மாநிலத்தின் ஜிடிபியில் சேவைதுறையில் 63%, விவசாயத்துறை 8%, தொழில்துறை 25 சதவீதமாக இருக்கிறது.

டெல்லி

டெல்லியில் ஜிடிபி 7.98 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, மக்கள் வேலை செய்வதற்கு டெல்லி முதல் தேர்வு, பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக டெல்லியில் குடியேறுகிறார்கள்.

உங்களுடைய மூளை ஆரோக்கியமாக வேலை செய்யும்..!

நாட்டின் தலைநகரான டெல்லியில் பல முன்னணி நிறுவனங்களின் தலைமை செயலகம் இயங்குகிறது.

Flowers and its medicinal properties in tamil

இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் டெல்லி 12 இடத்தில் உள்ளது,மாநிலத்தின் ஜிடிபி சேவை துறையில் 86%, தொழில்துறை 12 சதவீதமாக மற்றும் விவசாயத்துறை 2% உள்ளது.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0