
Top 10 vastu herbal plants in tamil
அதிர்ஷ்டம் தரும் வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்..!
உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகளைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
ஒவ்வொரு செடியிலும் எண்ணற்ற மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது, அதனுடைய முக்கியத்துவம் யாருக்குத் தெரிகின்றதோ இல்லையோ.
பெரும்பாலான நபர்கள் வீட்டில் செடிகள் வளர்ப்பது இப்போது குறைந்து விட்டது, அதற்கு காரணம் பணம், வேலைப்பளு, வாழ்க்கை முறை மாற்றம், என்று பலவகை சொல்லலாம்.
செடிகள் வளர்ப்பினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும், அந்த வகையில் இப்போது நீங்கள் குடியிருக்கும் இல்லங்களில், வாஸ்து முறைப்படி என்னென்ன செடிகளை வளர்க்கலாம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
வீட்டில் வளர்க்கக்கூடிய மூங்கில் செடி நன்மைகள்
வாஸ்து முறையான மூங்கில் செடியை வீட்டில் வளர்த்து வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும்.
மேலும் மூங்கில் செடி உங்கள் வீட்டில் செல்வ செழிப்பை அதிகப்படுத்தும், என்று நம்முடைய பண்டைய கால நூல்கள் தெரிவிக்கிறது.
கற்றாழை செடி நன்மைகள்
கற்றாழையில் எண்ணற்ற நன்மைகளும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
கற்றாழை செடியை வீட்டில் வளர்த்து வந்தால், வாஸ்து ரீதியான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும், என்று பழைய கால மரபுகள் தெரிவிக்கிறது.
செம்பருத்தி செடி
தலைமுடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த செடி இதுதான், மேலும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கண்டிப்பாக இந்த செம்பருத்தி செடியை வீட்டில் வளர்த்து வர செவ்வாய் தோஷம் நீங்கும்.
மணிபிளான்ட் செடி
மணிபிளான்ட் செடி வீட்டில் வளர்த்து வந்தால் வீட்டில் கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் சிணுங்கி செடியில் முட்கள் இருப்பதால் வீட்டில் சிலர் வளர்க்க கூடாது என்று தெரிவிப்பார்கள்.
ஆனால் இந்த செடியை வீட்டில் வளர்த்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்,என்று வாஸ்து சாஸ்திரம்மானது தெரிவிக்கிறது.
துளசி செடி நன்மைகள்
முக்கியமாக அனைவருடைய வீட்டில் இருக்க வேண்டிய சரிதான் இந்த துளசி செடியானது மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகிறது.
துளசியை வீட்டில் வளர்க்கலாம், துளசி சாப்பிட்டு வருவதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கும்.
சங்கு பூ செடி
சங்குப் பூ செடியில் இரண்டு வகைகள் இருக்கிறது ஒன்று நீல நிறமும் மற்றும் வெள்ளை நிறமும் சேர்ந்தவை சங்குப்பூ என்பது வீட்டில் மிகவும் அழகு சேர்க்க கூடிய பூவாகும்.
நீலம், வெள்ளை நிறம், கொண்ட சங்குப் பூ சிவன் மற்றும் விநாயகப் பெருமானுக்கு உகந்த மலர்யாகும்.
இதனால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகமாகும்.
வாடா மல்லி செடி
மலர் வகைகளில் வாடாமல் இருக்கும் தன்மை கொண்ட பூ வாடாமல்லி என்பது அனைவரும் அறிந்தது.
வாஸ்து ரீதியாக வாடா மல்லி செடி வீட்டில் வளர்த்து வந்தால், நேர்மறை எண்ணங்கள் அதிகமாக மனதில் தோன்றும், என்று வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.
கோழிக்கொண்டை செடி
வாஸ்து சாஸ்திரம் படி வீட்டில் வளர்க்க வேண்டிய முக்கிய செடிகளில் ஒன்று.
இந்த கோழிக்கொண்டை வாடாமல்லி போன்ற இந்த செடியும் வாடாத நிலை கொண்டவை, கோழிக்கொண்டை செடியை வீட்டில் வளர்த்து வர.
வீட்டு பூஜை அறையில் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் மாலைகளுக்கு இந்த பூவினை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
What are the low BP symptoms in tamil
பொன்னரளி செடி
மஞ்சள் நிறம் கொண்ட பொன்னரளி செடிப்பூ செடியை வளர்த்து வந்தால், வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி செல்வ செழிப்பாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.