Schemes

நமது அரசு நடைமுறைப்படுத்தும் உயிரை காக்கும்  3 இன்சூரன்ஸ் திட்டங்கள்..!Top 3 indian govt insurance scheme in tamil

Top 3 indian govt insurance scheme in tamil

Top 3 indian govt insurance scheme in tamil

நமது அரசு நடைமுறைப்படுத்தும் உயிரை காக்கும்  3 இன்சூரன்ஸ் திட்டங்கள்..!

ஏழை எளிய நடுத்தர மற்றும் குறிப்பாக மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு பயன்பெறும் வகையில் நமது அரசு மூன்று வகையான தனி சிறந்த இன்சூரன்ஸ் திட்டங்களை நடத்துகிறது.

ஆனால் இதைப் பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரிவதில்லை மேலும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மக்களை அதிக அளவில் கவர்வதற்கு பல்வேறு வகையில் விளம்பரங்களை செய்து தங்கள் பக்கம் இழுத்துக்  கொள்கிறது.

ஆனால் நமது அரசு  நடத்தும் இன்சூரன்ஸ் திட்டங்களில் மிகக் குறைந்த அளவே முதலீடு செய்தால் போதும் மேலும் இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் உங்களுடைய எதிர்காலத்திற்கு.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா..!

பிரதமர் நரேந்திர மோடி 2015ஆம் ஆண்டு இந்த திட்டத்தினை பிரதம மந்திரி ஜீவன ஜோதி பீமா யோஜனா திட்டத்துடன் இணைத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அரசு  இந்த திட்டத்தினை கொண்டு வந்த நோக்கமானது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டாலோ அல்லது நிரந்தரமாக உடல் ஊனம் ஏற்பட்டாலோ காப்பீடு வழங்கப்படும்.

இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் மூலம் தனி நபர் ஒருவருக்கு விபத்து மூலம்  இறப்பு ஏற்பட்டால் 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.

மேலும் நிரந்தரமாக உடல் ஊனம் ஏற்பட்டாலும் 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் மற்றும் உடல் ஊனம் ஏற்பட்டால் 1 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது உள்ள நபர்கள் வரை இணைந்து கொள்ளலாம் மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நீங்கள் கட்டாயம் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.

உங்கள் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகி இதற்கான விண்ணப்பத்தைப் பெற்று கணக்கைத் தொடங்கலாம்.

ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டம் பற்றிய முழு விவரங்கள்..!

இந்த திட்டம் கிராமப்புறங்களில் நிலமற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் 18 வயது முதல் 59 வயதுவரை உள்ள நபர்கள் இணைந்து கொள்ளலாம் மேலும் வருடத்திற்கு 200 ரூபாய்  இன்சுரன்ஸ் பணமாக செலுத்தினால் போதும்.

இதில் குடும்பத் தலைவராக இருக்க வேண்டும் அல்லது குடும்பத்தில் பணம் சம்பாதிக்கக்கூடிய நபர் அல்லது ஒரு நபர் மட்டுமே.

இந்த  திட்டத்தில் இணைய முடியும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நிலமற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் இணைந்த நபர் இயற்கையாக இறந்தால் அவருடைய நாமினிக்கு ரூபாய் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

விபத்து காரணமாக உடல் ஊனம் ஏற்பட்டு அல்லது உடலில் உள் உறுப்பு செயல்படாமல் போனால் அல்லது மரணம் ஏற்பட்டால்.

அவருடைய குடும்பம் அல்லது நாமினிக்கு ரூபாய் 75 ஆயிரம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம்..!

இந்த திட்டத்தின் மூலம் 1350 வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும் மேலும் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகை பெற முடியும்.

ஏழை எளிய மக்கள் அதிகமாக மருத்துவமனைக்கு செலவு செய்கிறார்கள் இதனை கருத்தில் கொண்டு நமது அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு நமது அரசு நடைமுறைப்படுத்தும் https://pmjay.gov.in/ என்ற இணையதளம் மூலம் நீங்கள் தகுதியானவரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்திற்கு நீங்கள் 30 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் போதும் இணையதளம் மூலம் நீங்கள் தகுதியானவரா என்பதை சரி பார்க்கும் போது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

What is really happening in Manipur

How to message on WhatsApp without saving number

Tasmac case in Madras High Court 2023

How to apply for change of patta through online

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
0