Uncategorized

Top 5 big dangers of Indian Expressway in tamil

Top 5 big dangers of Indian Expressway in tamil

Top 5 big dangers of Indian Expressway in tamil

இந்தியாவின் விரைவு சாலைகளில் மறைந்திருக்கும் கொடுமையான ஆபத்துக்கள் இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்..!

இந்தியன் அரசு சில ஆண்டுகளாகவே நாட்டில் விரைவு சாலைகளின் (Express Road) எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள் பற்றி யாரும் உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.

நாட்டில் வாகனங்களின் விரைவான போக்குவரத்திற்காக நாடு முழுவதும் பல்வேறு விரைவு சாலைகள் (Express Road) அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள விரைவு சாலைகளில் (Express Road) பயணம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பல மடங்கு அதிகரித்து வருகிறது.

மற்ற சாலைகளுடன் ஒப்பிடும்போது விரைவு சாலைகளில் (Express Road) வாகனங்களை இயக்குவது முற்றிலும் வித்தியாசமானது.

அத்துடன் மற்ற சாதாரண சாலைகளுடன் ஒப்பிடும் பொழுது விரைவு சாலைகளில் (Express Road) பல்வேறு கொடுமையான ஆபத்துகள் மறைந்துள்ளன.

எனவே இந்தியாவின் விரைவு சாலைகளில் (Express Road) மறைந்துள்ள ஆபத்துக்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

விரைவு சாலைகளில் (Express Road) நீங்கள் கவனமுடன் பயணிக்க இந்த தொகுப்பு கண்டிப்பாக உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

Top 5 big dangers of Indian Expressway in tamil

டயர் வெடிக்கும் ஆபத்து

இந்தியாவின் விரைவு சாலைகளில் டயர் வெடிப்பு சம்பவத்தால் விபத்து என்பது அடிக்கடி நிகழ்கிறது.

இதனால் பல உயிர்கள் பரிதாபமாக போயுள்ளன, இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா.

இந்தியாவின் புதிய விரைவு சாலையில் பெரும்பாலும் கான்கிரீட் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளன, தார்சாலையுடன் (Tarmac) ஒப்பிடும் பொழுது. இது நீண்ட வருடங்கள் நீடித்து உழைக்கும்.

அதுமட்டுமில்லாமல் பருவநிலை மாற்றத்திற்கும், இது சாதகமாக இருக்கும் மழை வெள்ளம் மற்றும் அதிகப்படியான வெப்பம் என எந்த சூழ்நிலையிலும் இந்த சாலை எப்பொழுதும் உறுதியுடன் இருக்கும்.

அத்துடன் இதனை பராமரிப்பது மிக எளிது ஆனால் உலர்ந்த சூழ்நிலைகளில் தார் சாலைகளை காட்டிலும் கான்கிரீட் சாலைகளில் டயர் உராய்வு அதிகமாக நடக்கிறது.

அதிகப்படியான உராய்வு காரணமாக டயர்கள் மிக வேகமாக சூடேறி விடும் இதனால் சில சமயங்களில் டயர் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவிடுகிறது.

ஆனால் இதற்கு நீங்கள் அச்சப்பட வேண்டாம் டயர்கள் மிக மோசமான நிலையில் இருந்தால் மட்டுமே இது நடக்கும், புதிய டயர்கள் அல்லது நல்ல நிலையில் டயர் இருந்தால் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதில்லை.

Top 5 big dangers of Indian Expressway in tamil

எண்ணெய் கசிவு அல்லது ஆயில் கசிவு

எந்த சாலையாக இருந்தாலும் எண்ணெய் கசிவு என்பது மிகவும் ஆபத்தானது தான் ஆனால் விரைவுச்சாலை என்றால் ஆபத்து பல மடங்கு அதில் இருக்கிறது.

காரணம் வாகனங்கள் அதிவேகத்தில் வருவது மற்றும் கான்கிரீட் மேற்பரப்பு ஆகியவைதான், இதற்கு காரணம் சரி சாலைகளில் எண்ணெய் கசிவு காணப்படுவது தெரியுமா.

பல்வேறு சமயங்களில் கனரக வாகனங்கள் அல்லது இரண்டு சக்கர வாகனங்களில் இருந்து எண்ணெய் கசிந்து சாலையில் படர்ந்து விடுகிறது.

இது தவிர அடிக்கடி நிகழும் விபத்து காரணமாக சாலையில் எண்ணெய் கசிவு படிந்து விடுகிறது.

விரைவுச் சாலைகளில் பயணிப்பவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் நபர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது, இல்லாவிட்டால் விபத்தில் சிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

பெட்ரோல் பங்க் நிலையம் பற்றாக்குறை

இந்தியாவில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள விரைவுத் சாலைகளில் காணப்படும் மற்றொரு முக்கியமான பிரச்சினை என்றால் பெட்ரோல் பங்க் பற்றாக்குறைதான்.

எனவே விரைவுத் சாலைகளில் உங்கள் பயணத்தை நீங்கள் தொடங்குவதற்கு முன்பாக நன்கு திட்டமிட்டு கொள்ளுங்கள் கூடுமானவரை உங்கள் வாகனங்களில் எரிபொருளை நிரப்பிக் கொள்ளுங்கள்.

கொள்ளை சம்பவம் நடக்கலாம்

நகர்புற எல்லையில் இருந்து தான் விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, எனவே சில இடங்களில் மிகவும் அபாயகரமான பகுதிகளின் ஊடாக செல்கின்றன.

விரைவுச் சாலைகள் பெரும்பாலும் உள்ளூரை சேர்ந்த ஆட்கள் பயன்படுத்துவது கிடையாது, வெளியூர் நபர்கள் தான் விரைவுச் சாலைகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

இது கொள்ளையர்களுக்கு சாதகமான ஒரு விஷயம் சில இடங்களில் உள்ளூர் மக்களே கொள்ளையர்களாக மாறி விடுகிறார்கள்.

சாலைகளில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது, உங்கள் வாகனத்தை நிறுத்தி கொள்ளையடிப்பதற்காக கொள்ளையர்கள்.

பல்வேறு விஷயங்களை செய்வார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், எக்காரணத்தைக் கொண்டும் தனிமையான அடர்ந்த இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

தூக்கம் தானாக வந்து விடும்

வாகனம் ஓட்டும்போது டிரைவருக்கு தூக்கம் வருவது என்பது ஆபத்தான ஒரு செயல் ஆனால் விரைவுச் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது.

தூக்கம் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

வழக்கமான சாலைகளில் அடிக்கடி வளைவுகள், பள்ளி பகுதி, ரயில் தண்டவாளங்கள், மருத்துவமனை பகுதிகள், ஸ்பீட் பிரேக் போன்றவை வரும்.

ஆனால் விரைவுச் சாலைகள் பெரும்பாலும் வளைவுகள் இல்லாமல் தான் கட்டமைக்கப்படுகிறது அதாவது அவை மிக நேராகவே இருக்கும்.

இரத்தப் புற்றுநோய் அறிகுறிகள் என்ன…?

எனவே விரைவுச் சாலைகளில் நீங்கள் வாகனங்களை இயக்கும்போது உங்களுக்கு அலுப்பு ஏற்படும் சுவாரஸ்யம் இல்லாமல் போர் அடிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டு விடும்.

இதன் காரணமாக உங்களுக்கு விரைவில் தூக்கம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது அல்லது உங்களை அறியாமலேயே நீங்கள் தூங்கி விடுவீர்கள்.

TN food safety department advice for public 2022

அப்படியே தூங்கி விட்டால் அதன் பின் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும், இனிவரும் காலங்களில் விரைவுச் சாலைகளில் நீங்கள் பயணம் செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருங்கள்.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0