
Top 5 most important causes of heart attack
எச்சரிக்கை மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிதீத 5 முக்கிய காரணங்களை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளார்கள்..!
சிறு வயது இளைஞர்கள் கூட மாரடைப்பில் உயிரிழக்கும் சம்பவங்கள் இப்பொழுது வேகமாக அதிகரித்து வருகிறது.
இருதய நாளங்களில் சில வகையான அடைப்பு காரணமாக இதயத்திற்கு போதுமான ரத்தம் கிடைக்காத போது மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்க கூடிய பல காரணிகள் இருக்கிறது அவற்றை பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம் அந்த ஆபத்து காரணிகள் என்னென்ன என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
மாரடைப்பு ஏற்படுவது இன்றைக்கு மிகவும் சாதாரணமான ஒரு செயலாக மாறிவிட்டது சிறு வயது இளைஞர்கள் கூட மாரடைப்பில் உயிரிழப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களை மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள்.
இன்றைய அதி நவீன உலகத்தில் திடீரென்று உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
பிரபல சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், விளையாட்டு துறை வீரர்கள், ராணுவ வீரர்கள், போன்றவர்கள் திடீரென்று உயிரிழக்கும் சம்பவம் நாம் நேரில் பார்த்திருப்போம்.
இது போன்ற நபர்கள் ஏன் உயிரிழக்கிறார்கள் என்பதை கண்டறிய மருத்துவர்கள் பல்வேறு கட்ட தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதில் மாரடைப்பு என்பது மிக முக்கிய காரணியாக இருக்கிறது, அமைதியான மாரடைப்பு போன்றவை உயிரை பறிக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
மருத்துவர்கள் பல்வேறு விதமான சிகிச்சைகள் மேற்கொண்டாலும் இதனைப் பற்றி பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்வது மிக அவசியம்.
உங்களுடைய இருதயத்தை பற்றி முழுமையான தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,இருதயம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் உடம்பில் வெளிப்படுத்தும் அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த அளவிற்கு நீங்கள் தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு தோன்றும் சில அறிகுறிகளை வைத்து.
அதற்கு எளிதாக நீங்கள் சிகிச்சை பெற்று நீங்கள் உங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் பல மடங்கு அதிகரிப்பு
கொலஸ்ட்ரால் அதிகரிப்பு மாரடைப்பு அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது,ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் இதனை எளிமையாக கட்டுப்படுத்தலாம்.
தேவைப்பட்டால் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று உடற்பயிற்சி மேற்கொண்டு கொலஸ்ட்ராலை மெல்ல மெல்ல குறைக்கலாம், இதற்கு சரியான உணவு முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நீரிழிவு நோய் முக்கிய காரணம்
கட்டுப்பாடற்ற நீரிழிவு உங்கள் இதயத்தை சேதப்படுத்தும் 60 வயதிற்கு மேல் சர்க்கரை நோயினால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை 68% அதிகமாக உள்ளது.
உடல் பருமன் பல மடங்கு அதிகரிப்பு
உடல் பருமன் பல மடங்கு அதிகரிப்பதால் கொலஸ்ட்ரால் பிபி மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் பல மடங்கு அதிகரிக்கும்.
ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் கொழுப்பை குறைக்கலாம்.
அதிகரிப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, தியானம், யோகா, நகைச்சுவை, மகிழ்ச்சி, இசை கேட்பது, போன்றவற்றின் மூலம்.
உங்களுடைய ரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம் இதன் மூலம் உடல் எடை கூடுவதையும் குறைக்கலாம்.
புகைப்பிடிப்பதால் மாரடைப்பு நிச்சயம்
மாரடைப்பு ஏற்படும் ஒவ்வொரு 5ல் ஒருவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்குமானால் மாரடைப்பு வாய்ப்புகள் இரண்டு முதல் நான்கு மாத அதிகம்.
இரவில் வெகு நேரம் கண் விழித்து இருப்பது
சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி வெளியிட்டிருக்கும் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் இரவில் வெகு நேரம் கண் விழித்து கணினி அல்லது தொலைபேசி முன்புக்கான.
வேலை பார்ப்பது போன்ற பழக்க வழக்கங்களால் மாரடைப்பு மிக விரைவில் இளைஞர்களுக்கு ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
indian govt insurance scheme in tamil
Kisan Vikas Patra scheme details 2023
tn rs 1000 rupees scheme need 6 documents