
Top 6 habits will increase wealth in tamil
புராணங்கள் இதிகாசங்களின் படி நீங்கள் காலை தூங்கி எழுந்தவுடன் இந்த செயல்களை செய்தால் உங்களுடைய வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும் நேர்மையான எண்ணம் அதிகரிக்கும்.
மனிதர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அல்லது துதிஷ்டம் நம்மளுடைய இல்லத்தை தேடி வருவது நம்மளுடைய செயல்பாடுகளின் அடிப்படையில் சிந்தனையில் அடிப்படையில் நிர்ணயிக்கபடுகிறது.
காலையில் எழுந்தவுடன் சோம்பேறித்தனத்தை பார்க்காமல் நாம் செய்யும் சில செயல்கள் நம் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரும் என்று கூறப்படுகிறது.
அதிகாலையில் நல்ல அதிர்ஷ்டத்தை தூண்டும் செயல்களை நீங்கள் செய்தால் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பொருளாதாரத்தில் முன்னேற்றத்துடன் இருக்கலாம்.
காலையில் நீங்கள் செய்ய வேண்டிய அதிர்ஷ்டத்தை தரக்கூடிய செயல்களைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
வீட்டை சுத்தம் செய்வது
அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்வது நம்மளுடைய மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.
காலையில் உங்களுடைய சமையலறை,படுக்கையறை,தோட்டம், போன்றவற்றை சுத்தம் செய்வதன் மூலம் ஆரோக்கியமான குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தை நீங்கள் கொண்டு வரலாம்.
மூலிகை பூச்செடிகளைப் பராமரிப்பது
மா,வாழை,மாதுளை,தென்னை மரம்,கொய்யாமரம்,துளசி செடி, செம்பருத்தி செடி, மல்லிகை செடி, கரும்பு, மஞ்சள், மிளகாய் செடி, குப்பைமேனி, கீழாநெல்லி, கறிவேப்பிலை, முருங்கை மரம் போன்ற மரம் மற்றும் செடிகளை.
வீட்டில் வளர்ப்பதால் நேர்மறையான எண்ணங்கள் அதிகமாக உங்கள் வீட்டில் இருக்கும்.
இந்த மூலிகையிலிருந்து வெளிப்படும் சுத்தமான ஆக்சிஜன் உங்கள் வீட்டை சுற்றி எப்பொழுதும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
இதனால் இது போன்ற செடி மரங்களை நீங்கள் நன்றாக பராமரிக்க வேண்டும் அதிகாலையில்.
நேர்மறையான எண்ணத்தை தூண்ட
நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்கான முதல் பொதுவான மற்றும் பாரம்பரிய முறை சூரிய நமஸ்காரம் என்று நம்மளுடைய முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது அதிகாலையில் சூரியனுக்கு அளிக்கும் மரியாதை,மந்திரம் கூடிய யோக பயிற்சி, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கிறது.
அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளியல்
அதிகாலை குளிர்ந்த நீரில் முழு உடல் குளியலுக்கு தியானம் செய்த புத்துணர்ச்சி கிடைக்கும்,உங்கள் மனமும் உடலும் அமைதியாக இருக்கும்.
நாளின் சிறந்த தொடக்கத்தில் இது உதவுகிறது,அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்த பின் பிரார்த்தனை செய்வது மக்களின் பொதுவான வழிமுறையாகும்.
மனதிற்கு பிடித்த இசை
அதிகாலை உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் பாடலை நீங்கள் சிறிது நேரம் அமைதியாக கேட்கலாம்,இதன் மூலம் உங்களுடைய இறை சக்தி அதிகரிக்கும்.
தெய்வங்களை வழிபடும் நேரமும் அதிகரிக்கும்,உங்களுக்குள் நேர்மறையான எண்ணங்கள் பல மடங்கு அதிகரிக்கும்,இது உங்களுக்கு தேவையான செல்வவளத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
அம்மன் வழிபாடு செய்யலாம்
நீங்கள் வேலை செய்யும் இடம்,வணிக வளாகம்,குடியிருப்பு இடங்களில் மகாலட்சுமி தேவியை வழிபாடும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
மந்திரங்களுடன் பிரார்த்தனை செய்வது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் தரம்.
வியாழன் செல்வத்திற்கு அதிர்ஷ்டத்தை தரும்,இந்த நாளில் லட்சுமி தேவி வழிபட நீங்கள் தொடங்கலாம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்