Uncategorized

Top 7 Foods That Help Enhance Hair Growth

Top 7 Foods That Help Enhance Hair Growth

Top 7 Foods That Help Enhance Hair Growth

முடி அடர்த்தியாக வளர என்ன உணவு சாப்பிட வேண்டும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

இன்றைய காலகட்டங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஒரு முதன்மையான பிரச்சனை என்றால் அது முடி சார்ந்த பிரச்சனைதான்.

தலைமுடி உதிர்வு, முடி நரைத்துப் போவது, பொடுகுத்தொல்லை, தலை முடி வளராமல் இருப்பது, அதிகப்படியான முடி கொட்டுதல், போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக  இருக்கலாம் அதேபோல் இரும்புச்சத்து, துத்தநாகம், கொழுப்பு சத்து, புரதச் சத்துக்கள், மற்றும் வைட்டமின் சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

இந்தக் கட்டுரையில் எந்த ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் அந்த ஊட்டச்சத்துக்கள் எல்லாம் எந்த உணவுகளில் உள்ளது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

இதை பின்பற்றினால் உங்களுடைய தலைமுடி வளர்ச்சி சரியாக இருக்கும் அது மட்டுமில்லாமல் முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு நீங்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டியதில்லை.

வைட்டமின் ஏ ஊட்டச்சத்து (Vitamin A Nutrition)

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன ஊட்டச்சத்து சாப்பிட வேண்டும் தலை முடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ ஊட்டச்சத்து பெரிதும் உதவுகிறது.

வைட்டமின் சத்துக்கள் பப்பாளி, கேரட், அத்திப்பழம், ஆப்ரிகாட் ட்ரை ப்ரூட்ஸ், போன்றவற்றில் அதிக அளவில் நிறைந்துள்ளது இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் தலைமுடி வளர்ச்சியை நீங்கள் எளிதாக அதிகரிக்கலாம்.

வைட்டமின் பி5 (Vitamin B5)

தலைமுடி வளர்ச்சிக்கு வைட்டமின் பி5 ஊட்டச்சத்து மிகவும் அவசியம், இந்த வைட்டமின் பி5 சத்துக்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காலிஃப்ளவர், முட்டை, காளான், போன்ற உணவுகளில் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இந்த உணவுகளை அதிக அளவு தினமும் சாப்பிடுவதால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

வைட்டமின் சி (Vitamin C)

வைட்டமின் சி உணவுகளை அதிக அளவு சாப்பிடுவதால் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கலாம் மேலும் இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு இருப்பதால் உங்களுக்கு எந்த ஒரு நோய் அண்டாமல் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த வைட்டமின் ஊட்டச்சத்துக்கள் நெல்லிக்காய், முலாம்பழம், கொய்யாப்பழம், ஆரஞ்சு பழம், எலுமிச்சை,ஸ்ட்ராபெர்ரி, போன்ற பழங்களில் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இந்தப் பழங்களை தினமும் நீங்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் உடலுக்கு இயற்கையாகவே வைட்டமின் சி சத்துக்கள் அதிகரித்துவிடும், இதனால் கூந்தலின் வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் அடர்த்தியாக வளர ஆரம்பித்துவிடும்.

வைட்டமின் ஈ (Vitamin E)

அவகோடா, ஆப்ரிகாட், பாதாம், சூரியகாந்தி விதைகள், வேர்கடலை, போன்றவற்றில் அதிக அளவு வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

எனவே இவற்றையெல்லாம் தினமும் சாப்பிட்டு வந்தால் முடி சார்ந்த பிரச்சனைகளை முழுமையாக தவிர்த்து விடலாம்.

புரோட்டீன் உணவு வகைகள்

புரோட்டின் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் கூந்தலின் வளர்ச்சி ஆரோக்கியமான முறையில் மேம்படுத்தலாம் புரோட்டின் முடியின் வேர் பகுதிக்கு வலு சேர்க்கிறது.

எனவே நீங்கள் சாப்பிடும் உணவுகளில் முட்டை வெள்ளைக்கரு, சிக்கன், பருப்பு வகைகள், பசும் பால், பன்னீர், கீரை, பீன்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வேர்க்கடலை, போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இவற்றில் உள்ள புரதச்சத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் அது மட்டுமில்லாமல் உங்கள் உடலின் சதை வளர்ச்சியும் அதிகரிக்கும்.

இரும்புச்சத்து விவரங்கள்

முடி உதிர்வு பிரச்சினைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது உடலில் இரும்புச்சத்து குறைபாடுதான் எனவே முடி அடர்த்தியாக நீளமாக வளர இரும்புசத்து இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது எப்பொழுதும்.

இந்த இரும்பு சத்துக்கள் பச்சை காய்கறிகளில் அதிக அளவில் நிறைந்துள்ளது முட்டைக்கோஸ், பீன்ஸ், கீரைகள், பச்சை பட்டாணி, ப்ரோகோலி, மாட்டிறைச்சி,ஆட்டு இறைச்சி போன்ற உணவுகளில் அதிகம் நிறைந்துள்ளது.

எனவே இவற்றையெல்லாம் அன்றாட உணவுகளில் நீங்கள் சேர்த்து வந்தால் உங்களுடைய தலை முடி சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

பெண்கள் வீட்டில் செய்யக்கூடிய அருமையான சுயதொழில் வாய்ப்புகள்..!

ஒமேகா-3 ஊட்டச்சத்து விவரங்கள்

தலைமுடி ஆரோக்கியமாக வளர எப்பொழுதும் omega-3 ஊட்டச்சத்து மிகவும் அவசியம் இந்த சத்துக்கள் மீன், வால்நட்ஸ், ஆளிவிதை, பாதாம், போன்றவற்றில் அதிக அளவில் நிறைந்துள்ளது.

top 7 health benefits of wild rice in tamil

இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிடுவதால் முடி சார்ந்த பிரச்சனைகளை முழுமையாக தவிர்த்து விடலாம்.

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
0