
top 9 health benefits list in vasambu
வசம்பு மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நமது இணையதளத்தில் அதிசயம் மிகுந்த வசம்பு மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
பொதுவாக வசம்பினை நமது தமிழ் கலாச்சார பழக்க வழக்கங்களில் குழந்தைகளுக்கு தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள்.
பொதுவாக நமது முன்னோர்கள் குழந்தைகளுக்கு மருத்துவ பொருளாக அதிக அளவில் பயன்படுத்தியது வசம்பு, இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது இன்றுவரை.
வசம்பு ஒரு மிகச் சிறந்த மூலிகைப் பொருள் என்பதினால் சித்த வைத்திய முறைகளில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது, இப்பொழுது இந்த மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தொற்று நோய் குணமாக
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பல்வேறு வகையான தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படுகிறது.
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், நீங்கள் கவனமாக இருந்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கை சந்தோஷமாகவும் செல்வ செழிப்புடன் இருக்கும் இதனை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதோடு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசம்பை நன்கு பொடி செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள் பின் அவற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான தொற்று நோய்களும் குணமாகும்.
இதனை நீங்கள் காலை மற்றும் மாலை ஏதேனும் ஒரு வேளையில் செய்து வரலாம்.
ஜலதோஷம் மற்றும் மூக்கடைப்பு நீங்க
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மழை மற்றும் குளிர் காலங்களில் சளி, இருமல், மூக்கடைப்பு, மூக்கில் சளி வருதல், போன்ற பல்வேறு பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.
இது ஒரு சாதாரண விஷயம் தான், இந்த பிரச்சனைகளுக்கு எளிய வீட்டு வைத்தியமாக நீங்கள் வசம்பு பயன்படுத்தலாம்.
அதாவது 1/4 வசம்பு தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஜலதோஷம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் எளிதில் குணமாகிவிடும்.
பொடுகு தொல்லை நீங்க
சித்த மருத்துவம் என்றாலே அதில் பல வகையான மூலிகைகள் இடம் பெற்றுவிடும் அவற்றில் ஒன்று வசம்பு பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உங்களுக்கு பொடுகு தொல்லை நீங்க, சித்த மருத்துவ முறையில் அதிக அளவு வசம்பு பயன்படுத்தலாம் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள் சிறிதளவு இடித்த வசம்பு மற்றும் சிறிதளவு வேப்பிலை ஆகியவற்றை இடித்து தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைக்கவும்.
பின் எண்ணெய் நன்றாக ஆறியதும் வடிகட்டி தலைக்கு பயன்படுத்தலாம் இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் பொடுகு தொல்லை முற்றிலும் குணமடைந்து விடும்.
கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்
வசம்பு இயற்கையாகவே அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதனால் கைக்குழந்தை வைத்திருப்பவர்களின் வீட்டில் அங்காங்கே வசம்பு பொடியை தூவி விடுவதன் மூலம் வீட்டில் எந்த ஒரு கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பை தடுத்து விடலாம்.
அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் கைகளில் வசம்பு வளையல் போன்று கட்டி விடுவார்கள் நம் முன்னோர்கள், இன்றும் அதன் பயன்பாடு தமிழ் கலாச்சாரத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.
இதனால் குழந்தைகளுக்கு அதிக அளவில் உடல் உபாதைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
பூச்சி கடிக்கு சிறந்த மருந்து பொருளாக இருக்கிறது
பொதுவாக நாம் வசிக்கும் வீட்டின் தோட்டம் மற்றும் வீட்டின் சுற்று சுவர் இடுக்குகளில் நச்சுத்தன்மை வாய்ந்த பூரான், தேள்,வண்டுகள், இருக்கும் இவை சில சமயங்களில் நம்மை கடித்து நம் உடலில் விஷத்தை பரப்பி விடும்.
பூச்சிக்கடி விஷம் உங்கள் உடலில் பரவாமல் இருக்க வேண்டும் என்றால் உடனடியாக நீங்கள் சிறிதளவு வசம்புப் பொடி செய்து கடிக்கப்பட்ட இடத்தில் அழுத்தி வைப்பதன் மூலம் அல்லது கொதிக்க வைத்த நீரில் வசம்பை சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடலில் பூச்சிகளினால் பரவக் கூடிய விஷம் முற்றிலும் முறிந்துவிடும்.
மனநிலை பாதிப்பு அல்லது காக்காய் வலிப்பு
வசம்பு, பெருங்காயம், திரிகடுகு, அதிமதுரம், கடுக்காய், தோல் கருப்பு உப்பு, ஆகியவற்றில் சிறிதளவு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்,பின் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் பொடி கலந்து.
காலை மற்றும் மாலை என இருவேளைகளில் காக்கை வலிப்பு பிரச்சனை இருக்கும் நபர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் குணமாகும்.
அதேபோல் மனநிலை பாதிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர அவர்களுக்கு சித்தம் தெளிவாகும்.
திக்குவாய் சரியாக
பொதுவாக ஒரு சில நபர்கள் பேசும்போது திக்கிக் கொண்டே பேசுவார்கள் இந்த திக்குவாய் என்பது நாக்கு மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படக் கூடிய சிறிய பாதிப்பினால் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும்.
இதற்கு ஒரு சிறந்த மருத்துவ பொருளாக வசம்பு இருக்கிறது திக்குவாய் பிரச்சனையை குணப்படுத்த சரியான மருத்துவ முறை மற்றும் பேச்சுப் பயிற்சி பழகும் காலங்களில் வசம்பை நன்கு பொடி செய்து தேன் விட்டுக் குழைத்து.
திக்குவாய் பாதிப்பு கொண்டவர்கள் நாவில் தடவி வந்தால் நோய் முற்றிலும் குணமடைய வாய்ப்புகள் இருக்கிறது.
கீல்வாதம் குணமாக
உங்கள் உடலில் வாதம் அதிகரிக்கும்போது உடலின் மூட்டுப் பகுதிகள் அனைத்தும் விரைத்துகொண்டு அதிக வலியை ஏற்படுத்தி விடும்.
இந்த பிரச்சனைகளில் கீல்வாதம் அதிக பிரச்சனைகளை கொடுக்கக் கூடிய நோய் என்று மருத்துவம் சொல்கிறது.
வசம்பு மற்றும் காசிக்கட்டி இரண்டையும் சிறிதளவு எடுத்து சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து மூட்டு பகுதியில் தடவி வந்தால் கீல் வாதம் போன்ற வாதம் சார்ந்த பிரச்சனைகள் குணமடைந்து விடும்.
வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகள் சரியாக
நீங்கள் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும் போது வாந்தி மற்றும் குமட்டல் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும்.
சுயதொழில் பிஸ்கட் தயாரிக்கும் முறை தெரிந்து கொள்ளுங்கள்
அதுபோல் சிலருக்கு வாகனத்தில் பயணம் செய்யும்போது வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
Types of foods that asthma patients should eat
அந்த சமயத்தில் நீங்கள் வசம்பை நன்கு பொடி செய்து வாயில் போட்டு சிறிதளவு இதமான வெந்நீரை அருந்தினால் வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்து விடலாம்.