
Tuticorin Sterlite firing investigation report submitted
தலை மார்பு குறிவைத்து 13 பேர் மீது துப்பாக்கி சூடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு அறிக்கை முழு தகவல்கள்..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு மிருகத்தனமானது விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது.
தமிழக அரசு விரிவாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 நபர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து.
விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
காவல்துறையினர் எந்தவித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கி சூட்டை ஆரம்பித்தது விளைவாக.
மதிப்பில்லாத உயிர்களை சுட்டுக்கொன்றதாக அருணா ஜெகதீசன் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த 2018ஆம் ஆண்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
போராட்டம் 100வது நாளை கடந்தபோது போராட்டக்காரர்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி.
அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 நபர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும்.
போராட்டக்காரர்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கம் இன்றி மறைவிடங்களில் இருந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
3000 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள் தூத்துக்குடியில் உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி.
பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் அநியாயமான துப்பாக்கி சூட்டில் மாணவிகள் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் சிலர் கை கால்களை இழந்து வாழ்நாள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர்.
துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்.
விசாரணை ஆணையம் தனது முழுமையான 3000 பக்க விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகளை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
காவல்துறையினர் சொல்வது முழுக்க முழுக்க பொய்
அந்த அறிக்கையில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பொது மக்களின் போராட்டம் தொடர்பாக எவ்வித முன்யோசனை இல்லாமல்.
தவறான முடிவுகளை மேற்கொண்டார் தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் காவல் துறையினர் எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதின் விளைவாக மதிப்பில்லாத உயிர்களை சுட்டுக் கொன்றதாகவும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் போராட்டக்காரர்கள் தீ வைக்கப்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும்.
காவல்துறையினர் கூறுவது தவறானது போராட்டக்காரர்களை தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் குறிவைத்து 13 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறையினர்.
மருத்துவ காளான் வளர்ப்பு தொழில் வீட்டிலிருந்து 4 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்..!
நடவடிக்கை மிருகத்தனமானது என்று அந்த அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவான நடவடிக்கை தேவை
மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தங்களது பொறுப்புகளை தட்டிக் கழித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ்.
Newly constructed road Quality in tiruvannamalai
தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் உட்பட 17 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்ற விசாரணை ஆணையத்தின் பரிந்துரை மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.