
Two women were sacrificed in Kerala
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழக பெண் செய்தியைப் படிக்கும்போது கண்கலங்கிய பொதுமக்கள் நடந்தது என்ன..!
56 துண்டுகளாக ரோஸ்லின் 5 துண்டுகளாக பத்மா குங்குமம் பூசப்பட்டு புதைக்கப்பட்ட உடல்கள் நடுங்கவைக்கும் கேரளா நரபலி சம்பவம்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தமிழக பெண் உள்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில்.
மீட்கப்பட்ட முதலாவது உடலானது 56துண்டுகளாக போட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா இவர் சில ஆண்டுகளாக கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த வாரம் கடவந்தீரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார் கடந்த மாதம் 26ஆம் தேதி லாட்டரி விற்பனைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், அதுபோல் கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்.
செல்போன் மூலம் கிடைத்த துப்பு
காணாமல் போன இரண்டு பெண்களின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கடைசியாக அருகே திருவல்லா என்ற இடத்தில் இருவரும் காணாமல் போனது தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த முகமது சபி என்பவர் கைது செய்யப்பட்டார்.
நரபலி கொடுக்கப்பட்டது
நரபலி கொடுக்கப்பட்ட பெண் தமிழகத்தை சேர்ந்த பெண் தர்மபுரி மாவட்டத்தில் எர்ரபட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கன் என்பவரின் மனைவியார்.
இருவரும் தோட்ட வேலைக்காக கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ரங்கன் சொந்த ஊருக்கு திரும்ப பத்மா மட்டும் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார்.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர்கள்
முகமது சபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் எந்த தகவலையும் முழுமையாக தெரிவிக்கவில்லை.
முதலில் ரோஸ்லின் உடல் கண்டெடுக்கப்பட்டது அவரது உடல் 56 துண்டுகளாக கூறு போடப்பட்டு இருந்தது.
அதேபோல் இரண்டாவது கிடைத்த பத்மாவின் உடன் 5 துண்டுகளாக கூறு போடப்பட்டு இருந்தது.
குங்குமம் வைக்கப்பட்டிருந்தது
உடல்கள் போடப்பட்ட பைகளின் குங்குமம் தடவி இருந்தது ஒரு கல் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 8 மற்றும் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 5 முதல் 6 மணிக்குள் நடந்திருக்கிறது.
பத்மாவையும், ரோஸ்லிவையும் முகமது சபிக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தெரியும்.
கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்படுகிறது.
கேரளா முதல்வர் வெளியிட்ட அறிக்கை
இதுகுறித்து கேரள முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாகரிகமான காலத்தில் இப்படி ஒரு முட்டாள்தனமான செயல் களுக்கு இங்கு இடம் இல்லை.
வருமானம் அதிகரித்தாலும் சேமிப்பு இல்லை எங்கே நடக்கும் தவறு எப்படி சமாளிப்பது..!
குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனைகள் பாயும் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு, நிச்சயம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என தெரிவித்தார்.
How to get new 5G sim card and how to change 4 G to 5G
இந்த செய்தி இப்பொழுது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.