
Types of foods that asthma patients should eat
ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆஸ்துமா அல்லது மூச்சுத் திணறல் வருவதற்கு முக்கிய காரணம் ஒன்று பரம்பரை வியாதி அல்லது சுற்றுச்சூழலில் இருக்கும் தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலை கழிவுகள், போன்ற மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் இந்த நோய்கள் வருகிறது.
அப்போது மூச்சு சிறுகுழல் அதிகமாக சுருங்கி உள் சவ்வு வீங்கி விடுகிறது வீங்கிய மூச்சுக்குழலில் நீர் வெளியாகி சுருங்கிப்போன மூச்சுப்பாதையை முற்றிலும் அடைத்து விடுவதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடுகிறது.
சிலருக்கு இது பரம்பரை காரணமாக வரலாம் ஆஸ்துமா உள்ளவர்கள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
குடைமிளகாய்
நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க சிவப்பு குடைமிளகாய் பெரிதும் உதவுகிறது மேலும் இதில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது,ஆஸ்துமா நோயுள்ளவர்கள் தங்களுடைய உணவில் அதிக அளவில் சிவப்பு குடைமிளகாய் சேர்த்துக்கொண்டால் நல்லதாக அமையும்.
பாகற்காய்
மூச்சுத்திணறல் அதிகம் உள்ளவர்கள் பாகற்காய் ஜூஸ் அடிக்கடி குடித்து வந்தால் இதனை சரிசெய்யலாம் பாகற்காய் உடம்பில் சர்க்கரையின் அளவைக் குறைப்பது மட்டுமில்லாமல் ஆஸ்துமாவையும் பெரிதளவில் குணப்படுத்துகிறது.
வைட்டமின் சி பழங்கள்
நுரையீரலில் அதிக வீக்கம் மற்றும் அலர்ஜி குணப்படுத்துவதற்கு வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக ஆரஞ்சு பழம், கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் மாம்பழம், போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது நுரையீரலில் ஒவ்வாமை குணப்படுத்துவதற்கு கொய்யாப்பழம் சிறந்ததாக அமையும்.
மெக்னீசியம் நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்
உங்கள் சுவாசக் குழாயில் உள்ள சளியை நீக்குவதற்கு உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த மிளகாயை சேர்த்துக் கொள்வது நல்லதாக அமையும்.
நுரையீரல் மற்றும் சுவாசக் குழாயில் உள்ள ஒவ்வாமையை குணப்படுத்த அதிமதுரம் பெரிதும் உதவுகிறது.
மெக்னீசியம் அதிகம் நிறைந்த உணவுகளாக இருக்கும் மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம்.
மூச்சுத்திணறல் அதிகம் உள்ளவர்கள் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது, பால் சம்பந்தமான பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பால் நெஞ்சில் கபத்தை ஏற்படுத்தும் மியூக்கஸ் என்னும் வெளியிடுவதால் ஆஸ்துமாவை அதிகப்படுத்திவிடும்.
ஆஸ்துமா உள்ள நபர்கள் பால் குடிப்பதால் நெஞ்சடைப்பு, சளி, மூச்சு விடுவதில் சிரமம், போன்றவற்றை அதிகளவில் சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது.
முட்டை, கோதுமை, சோயாபீன்ஸ், போன்ற உணவுகளில் நன்மை தரக்கூடிய புரதச்சத்து இருந்தாலும் ஒரு சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும், எனவே ஆஸ்துமா உள்ளவர்கள் இதுபோன்ற உணவுகளை தவிர்த்தால் நல்லது.
வாழைப்பழம், பப்பாளி, போன்ற பழங்கள் குளிர்ச்சி நிறைந்தது என்பதால் இந்த வகையான பழங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
அரிசி, காபி, தேநீர், மதுபானம், சர்க்கரை, மாட்டிறைச்சி, போன்ற எளிதில் செரிமானம் அடையாத உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நட்ஸ், ஸ்னாக்ஸ் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மைதாவில் செய்யப்பட்ட பரோட்டா, ரொட்டி, போன்ற உணவுகளையும் ஆஸ்துமா நபர்கள் சாப்பிடுவதால் மூச்சுத்திணறல் அதிகமாகிவிடும்.
மாமிச உணவுகள் மற்றும் வைட்டமின் டி நிறைந்த பால் சம்பந்தமான உணவுகளை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படவில்லை என்றாலும் சாப்பிடலாம் இல்லையேனில் அலர்ஜி ஏற்பட்டால் இது போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Click here to view our YouTube channel
ஆஸ்துமா உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை மட்டும் சாப்பிடுவது சிறந்ததாக அமையும்.
Murungai keerai powder for hair health in tamil
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ள கேரட்டில் மூச்சுத்திணறல் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கிறது.