
Udhayanidhi reply For those who protested against
உதயநிதி படத்தை செருப்பால் அடிக்கும் காணொளி காட்சியை பதிவிட்ட வலதுசாரிகள் அதுக்கு உதயநிதி கொடுத்த பதிலடி என்ன..!
சனாதன பேச்சு குறித்து அமைச்சர் உதயநிதி படத்தை செருப்பால் அடித்து சில சமூக விரோதிகள் பகிர்ந்த காணொளி காட்சி அதற்கு அவர் கொடுத்துள்ள பதிலடி என்ன.
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம் சார்பில் சனதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உதயநிதி பேசிய பேச்சுதான் பெரும் சர்ச்சையாக கிளம்பியது,அந்த மாநாட்டில் பேசிய அமைச்ச உதயநிதி தலைப்பிலே இந்த மாநாடு மிக சிறப்பாக அமைந்துள்ளது.
சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சரியாக சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டீர்கள்.
நாம் சில விஷயங்களை ஒழித்தாக வேண்டும் எதிர்ப்பதுடன் நிறுத்த முடியாது உதாரணமாக கொசு,டெங்கு,மலேரியா,கொரோனா வைரஸ்,ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது.
அவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் அதுபோலத்தான் இந்த சனாதனமும் என்று சொல்லாமல்,சனாதனத்தை எதிர்ப்பதோடு நாம் நிறுத்தி விடக்கூடாது.
அதை நாம் முழுமையாக ஒழிக்கவேண்டும் அதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்று அவர் தெரிவித்தார்.
உதயநிதி இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையாக கிளம்பியது குறிப்பாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.
இந்த வீடியோவை பகிர்ந்த பாஜகவின் தேசிய ஐடி வின் பொறுப்பாளர் நம் நாட்டில் சனாதான தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை ஒழிக்க உதயநிதி அழைப்பு விடுத்தார்.
என்பது போல பதிவிட்டார் அதன் பிறகு இந்த வீடியோ கடுமையான தாக்கத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.
கடுமையான எதிர்ப்பு வட இந்தியாவிலிருந்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் இந்த பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
மேலும் பாஜகவின் அஸ்வகந்தமண் என்பவர் உதயநிதி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் பிரபலமான வழக்கறிஞர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது புகார் அளித்தார் இப்படி உதயநிதி பேச்சுக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது.
உதயநிதி வெளியிட்ட முக்கிய செய்தி
இப்படி உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது வட இந்தியாவில் இருப்பினும் உதயநிதி தனது கருத்தில் உறுதியாக இருக்கிறார்.
எத்தனை வழக்குகளை போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆங்காங்கே உதயநிதிக்கு எதிராக சிலர் கருத்துக்களை தெரிவித்தார்கள் அப்படி போராட்டத்தின் போது.
ஒரு வீடியோவில் உதயநிதியின் புகைப்படத்தை செருப்பால் சிலர் அடிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
அதனை பார்த்த உதயநிதி அதற்கு நக்கலாக சிரிப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டு பதில் அடி கொடுத்துள்ளார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
1000 ரூபாய் திட்டத்திற்கான தகுதி பட்டியல் தயார்..!
உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்து விட்டதா..!