
Ukraine vs russia war what are the decisions India
பொக்ரான் அணுகுண்டு சோதனையை எதிர்த்து பாகிஸ்தானுக்கு பீரங்கி வழங்கி உதவி செய்த உக்ரைன் ஒரு பிளாஷ்பேக்..!
பொக்ரான் அணுகுண்டு சோதனையை எதிர்த்து காஷ்மீர் உள் விவகாரத்தில் கடுமையான கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு பல அணு ஆயுதங்கள் கொடுத்து.
உள்ளிட்ட பல காரணங்களால் தான் உக்ரைன் மீதான போரில் இந்திய ரஷ்ய உடன் கை கோர்ப்பது நல்லது என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா 3வது நாளாக தொடர்ந்து கடுமையான போர் புரிந்து வருகிறது.
உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் போரை நிறுத்துவதாக ரஷ்யா வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உக்ரைன் நாடு இன்னும் எந்த விதமான தகவல்களையும் வெளியிடவில்லை.
இதற்கிடையே ரஷ்யாவுடன் நல்ல நல்லுறவை பேணும் இந்தியா இதில் தலையிடவேண்டும் ரஷியாவின் போர் தொடுக்கும் நடவடிக்கையை கைவிட கோரி.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பேசவேண்டும், என உக்ரைன் தூதர் இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்.
இந்தியா எப்பொழுதும் நடுநிலை
இதையடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் பேசிய போது அது எதிரொலித்தது.
அதாவது ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இருக்கும் போரை நிறுத்துங்கள் பிரச்சனையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என வலியுறுத்தினார்.
இதன்மூலம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.
ஐநா சபை தீர்மானம் தோல்வி
மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய நாட்டிற்கு எதிராக தீர்மானத்தில் இந்தியா பங்கேற்கவில்லை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை தனக்கு சாதகமாக முறியடித்தது ரஷ்யா.
இதனால் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது, இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இந்தியா இருப்பதை காட்டுகிறது, என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
இதற்கான காரணம் என்ன
இந்த விவகாரத்தில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் பலவகை இருக்கிறது, நம் நாட்டினுடைய வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் அது நன்றாக தெரியும்.
அதாவது உக்ரைன் நாடு இந்தியாவிற்கு எப்போதும் எதிராகவே பேசி வருகிறது, இந்தியாவின் தேவையில்லாத விவரங்களில் மூக்கை நுழைத்து, கண்டனம் தெரிவிப்பது.
இது வாடிக்கையாக வைத்துள்ளது, இந்தியாவுக்கு எதிரான செயல்பாட்டுக்கு பொக்ரான் சோதனை ,காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கு கண்டனம்.
பாகிஸ்தானிற்கு பீரங்கி கொடுத்து உதவியது என பல்வேறு விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அணுகுண்டு சோதனைக்கு கடுமையான எதிர்ப்பு
இந்தியாவில் கடந்த 1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தார் அப்போது ஆபரேஷன் சக்தி என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்தியா மேற்கொண்டது.
இதை உக்ரைன் கடுமையாக எதிர்த்தது, இந்தியா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
இது மட்டுமின்றி உக்ரேன் உள்பட 25 நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தது அப்பொழுது தனது முழு ஆதரவை உக்ரைன் தெரிவித்தது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது
இதையடுத்து அணுகுண்டு சோதனைகளை இந்தியா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூறியதோடு.
ஒருங்கிணைந்த அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கட்டாயப்படுத்தியது.
அத்துடன் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் குறித்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு ஆணையிட்டது.
ஆனால் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்கள் இந்தியாவுக்கு கைகொடுத்தன.
ஆயினும் கூட உக்ரைன் மற்றும் பிற நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் இந்தியாவின் வளர்ச்சியை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு
இந்தியா ரஷ்யாவில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது ஆனால் உக்ரைன் பாக்கிஸ்தானுக்கு தனது ஆயுதங்களை வழங்கி வருகிறது.
உக்ரைன் நாடு பாகிஸ்தானுக்கு 1.6 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியுள்ளது ஆயுத கொள்முதலில் உக்ரைனின் பெரிய வாடிக்கையாளராக பாகிஸ்தான் இருந்தது.
இதற்கிடையே பாகிஸ்தான்,சீனா, உறவு வலுவான நிலையில் ஏற்பட்ட பிறகு உக்ரைன் நாட்டில் இருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்யும் ஆயுதத்தின் அளவு சற்று குறைந்துள்ளது.
மேலும் காஷ்மீர் உள் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், எப்பொழுதும் தனது நிலைப்பாட்டை தெரிவித்தது உக்ரைன்.
இந்தியாவுக்கு ஏற்படும் அழுத்தம்
அணு ஆயுத சோதனை இந்தியாவுக்கான பயங்கரவாத அச்சுறுத்தல் இந்தியாவுடன் உக்ரைன் எப்போதும் நிற்கவில்லை மாறாக இந்தியாவுக்கு எதிராக தனது நிலைப்பாட்டை தெரிவித்தது.
ஆனால் இன்று அதே உக்ரைன் நாடு இந்தப் போரில் இந்தியா முதலில் வந்து உதவ வேண்டும் என்று தெரிவிக்கிறது.
இது தவிர ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா. ஐரோப்பிய நாடுகள். இந்தியாவிற்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகிறது.
வாய் பேசாத நாடுகள் ஏன்
உக்ரைன் மீதான போரில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இந்திய தங்களுக்கு உதவ வேண்டும் என்று வெளிப்படையாக தெரிவிக்கிறது.
ஆனால் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலின் போது இந்தியாவுக்கு இந்த நாடுகள் எந்த ஒரு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் காஷ்மீர் விஷயம், லடாக் எல்லையில் கல்வானில் சீனாவின் திட்டமிட்ட தாக்குதலின் போது இந்த நாடுகள் வாய் பேசாமல் இருந்தது நன்கு தெரியும்.
இந்தியா கவனமாக இருக்கிறது
சர்வதேச உறவுகளை பொருத்தமட்டில் நிரந்தர நண்பர்களாகவும் எதிரிகளாகவும் எந்த ஒரு நாடுகள் இருக்க முடியாது.
2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 சிறு தொழில் பட்டியல்கள்..!
அதே நேரத்தில் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் என்பது ரஷ்யாவின் விருப்பம்.
How to make samosa recipe in tamil
இதனால் தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், வலியுறுத்தியும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை.
மேலும் ரஷ்யாவுடன் நல்ல உறவுக்கு எந்த ஒரு பங்கம் ஏற்பட கூடாது என்பதில் இந்தியா கவனமாக உள்ளது.