Uncategorized

Use these 9 tips to whiten teeth in tamil

Use these 9 tips to whiten teeth in tamil

Use these 9 tips to whiten teeth in tamil

மஞ்சள் பல் வெள்ளையாக மாற என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு குறிப்புகள்..!

மஞ்சள் நிற பற்கள் வெள்ளையாக மாற என்ன செய்வது, ஒரு நபரின் முக அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான்.

ஒருவர் சிரிக்கும் போது அவரின் பற்களில் மஞ்சள் கரை இருந்தால் உங்களை பார்க்கும் நபர்களின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்களை உருவாக்கக்கூடும்.

அதுமட்டுமின்றி பற்கள் மஞ்சளாக மிகவும் கறையுடன் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட, நீங்கள் தயங்குவீர்கள்.

பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு காரணம் என்னவென்றால் வயது, பரம்பரை காரணங்கள், முறையற்ற பராமரிப்பு, தினமும் அதிக அளவில் டீ, காபி குடிப்பது.

சிகரெட் பிடிப்பது மற்றும் போதைப்பொருள் எடுத்துக்கொள்வது அந்த இடத்தில் இருக்கும் தண்ணீரின் தன்மை மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவைகள்.

பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளது, எனவே சரியான பராமரிப்பு இருந்தால், போதும் என்றும் பல் வெள்ளையாக இருக்கும்.

பற்கள் பராமரிப்பு குறிப்பு 1

தினமும் இரண்டு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும், நன்றாக மென்ற பின் அவற்றை துப்பி விட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து இந்த முறை செய்துவர பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி பல் வெள்ளையாக மாறும், இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

பற்கள் பராமரிப்பு குறிப்பு 2

சோற்றுக்கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், பல் வெள்ளையாக மாறும் மற்றும் ஈறுகளும் வலிமை பெறும்.

பற்கள் பராமரிப்பு குறிப்பு 3

டீ ஸ்பூன் வெள்ளை வினிகரில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து தினமும் இருமுறை அந்த தண்ணீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி பல் வெள்ளையாக மாறிவிடும்.

பற்கள் பராமரிப்பு குறிப்பு 4

பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்குவதற்கு பெரிதும் உதவி புரிகிறது.

இந்த பேக்கிங் சோடாவை 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு குளிர்ந்த நீரில் 1/2 கப் கலந்து கொண்டு தினமும் மூன்று முறை கட்டாயம் வாய் கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கிவிடும் பல் வெள்ளையாக மாறிவிடும்.

பற்கள் பாதுகாப்பு குறிப்பு 5

எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து பின்பு குளிர்ந்த நீரில் வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கும் பல் வெள்ளையாக மாறிவிடும்.

பற்கள் பாதுகாப்பு குறிப்பு 6

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் வலுவடையும், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கி, ஈறுகள் வலுப்பெறும்.

பற்கள் பாதுகாப்பு குறிப்பு 7

உப்பைக் கொண்டு தினமும் பற்களை தேய்த்து வர பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

அதேசமயம் உப்பை சிறிய அளவு பயன்படுத்த வேண்டும், ஏனெனில் உப்பை அதிகம் பயன்படுத்தினால் ஈறுகளையும் எனாமலையும் அரித்துவிடும்.

பற்கள் பாதுகாப்பு குறிப்பு 8

தினமும் பற்களை சரியாக துலக்க வேண்டும் பேஸ்டில் சிறிது அடுப்புச் சாம்பல் சேர்த்து பின் பற்களை துலக்கினால் பற்கள் வெண்மையாக மாறி விடும்.

அதிலும் இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், விரைவில் உங்களுடைய பற்கள் வெண்மையாக மாறும் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

உங்களுக்கு ஏற்ற நாட்டுக்கோழி வளர்ப்பு

பற்கள் பாதுகாப்பு குறிப்பு 9

இரவில் படுக்கும் போது ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள்.

7 types of foods can affect your kidneys

இதனை அதில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்தானது வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து பற்களை வலுவாக்கும் வெண்மையாகும் வைத்துக்கொள்ளும்.

What is your reaction?

Excited
1
Happy
3
In Love
0
Not Sure
1
Silly
0