ஆன்மீகம்

Vaikasi Month Rasi Palangal in tamil

Vaikasi Month Rasi Palangal in tamil

Vaikasi Month Rasi Palangal in tamil

வைகாசி மாத ராசி பலன் 12 ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம் பணவரவு எப்படி இருக்கும்..!

சூரிய பெயர்ச்சியை நம் தமிழ் மாதங்களாக கடைப்பிடித்து வருகிறோம் அதில் ரிஷப ராசியில் சூரியன், சஞ்சரிக்கும் களத்தை வைகாசி மாதமாக கணக்கிட்டு வருகிறோம்.

இந்த மாதத்தில் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட நற்பலன்கள் கிடைக்கும் என்பதை முழுமையாக பார்க்கலாம்.

நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் ஆரோக்கியம், ஆளுமை, உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடியவர், இவரின் அமைப்பு ஒரு தனிநபருக்கு மட்டுமில்லாமல் நாடு, உலகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

தற்போது சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசியில் சூரியன், சஞ்சரிக்க உள்ளார்,இதனால் 12 ராசிகளுக்கு பொருளாதார நிலையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.

மேஷ ராசி வைகாசி மாத ராசி பலன்

மேஷ ராசியில் உச்சத்தில் இருந்த சூரியன் தற்போது உங்கள் ராசிக்கு 2ம் வீடான தனஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார்,உங்களின் பணிகளில் சுறுசுறுப்பு பல மடங்கு அதிகரிக்கும்.

கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது, உங்கள் வார்த்தைகளை நீங்கள் சரியாக தேர்வு செய்ய வேண்டும், இல்லையெனில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும்.

உங்கள் வேலையில் பிரச்சனைகள் திடீரென்று, நீங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்புகள் அதிகரிக்கும், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷப ராசி வைகாசி மாத பலன்

சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிக்க கூடிய இந்த மாதத்தில் நீங்கள் சிறப்பான பல்வேறு வகையான நற்பலன்களை பெற முடியும்.

உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் உத்தியோகத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும் அதை தவிர்க்க முயற்சி செய்யவும்.

நிதிநிலை சீரான முன்னேற்றம் இருக்கும் குடும்ப விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்க கூடும்.

மிதுனம் ராசி வைகாசி மாத பலன்

குடும்பத்தில் மகிழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கும், உடன் பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்ற வாய்ப்புகள் கிடைக்கும், இருப்பினும் வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது தகராறுகள் ஏற்படலாம்.

அரசு துறையில் நல்ல பணம் வரவு கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது,நிதிநிலை முன்னேற்றம் இருக்கும்,மாணவர்கள் மற்றும் வேலை தேடும் நபர்கள் சுயத்தொழில் செய்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள் முன்னேற்றத்திற்கு உரிய வழிகளை கண்டறிவீர்கள்.

கடக ராசி வைகாசி மாத பலன்

உங்களின் குடும்ப உறவில் கருத்து வேறுபாடு திடீரென்று ஏற்படலாம், உங்கள் உறவினர்கள் நண்பர்கள் செயலில் அவசரம் நீங்கள் காட்ட வேண்டாம்.

குடும்பத்துடன் வெளியே சென்று வரும் திட்டம் திடீரென்று நிறைவேறும், உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

பணியிடத்தில் வேலை சிறப்பாக முடியும் ஆரோக்கியம் அதிகரிக்கும் உங்களுக்கு இந்த மாதம் நிதிநிலை சிக்கல்கள் ஏற்படாத வாய்ப்புகள் இருக்கிறது.

சிம்மம் ராசி வைகாசி மாத பலன்

குடும்ப வாழ்க்கையில் நீங்கள் மன அழுத்தத்தை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும், உடன் பிறந்தவர்களுடன் உங்கள் உறவு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்களுடைய தொழில் நன்றாகமுன்னேறும் இதனால் பண வரவு நன்றாக இருக்கும்.

அரசு வேலை தேடும் நபர்களின் விருப்பங்கள் நிறைவேறும், உங்களுக்கு தடைபட்டு வந்த பணி சம்பந்தமான சில தடைகள் நீங்கும், நீங்கள் வேகமாக செயல்பட தொடங்குவீர்கள்.

கன்னி ராசி வைகாசி மாத பலன்

வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து எதிர்காலத்திற்கான சிறந்த திட்டங்களை செயல்படுத்துவீர்கள் பெற்றோருடன் நல் உறவு உருவாகிய பணம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும்.

வீடு மனை அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்று எண்ணம் முயற்சி நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

உங்களுடைய முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும் தொழில் வேலை தொடர்பாக நீங்கள் வகுத்த திட்டங்கள் நிறைவேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

துலாம் ராசி வைகாசி மாத பலன்

உங்களது ராசிக்கு அதிர்ஷ்டமான ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நடக்கிறது,வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பிள்ளைகளில் முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள் வியாபாரத்தில் முன்னேற்றத்தால் பொருளாதார நிதி நிலைமை சீரடையும் பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதாயங்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு சிறப்பாகவும் பெரிய பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் நிறைந்துள்ளது.

விருச்சிக ராசி வைகாசி மாத பலன்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் தாயின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்,நீண்ட காலத்திற்கு பின் உங்களின் பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த மாதத்தில் எந்தவித பெரிய பண பரிவர்த்தனைகள் செய்ய வேண்டாம் இதனால் நீதி இழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் நிறைவேறும் சில பெரிய நபர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், அதனால் உங்களின் எதிர்காலம் மேம்பட வாய்ப்புகள் இருக்கிறது.

தனுசு ராசி வைகாசி மாத பலன்

தனுசு ராசிக்கு நோய் எதிரி ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நடக்கிறது உங்களின் ஆரோக்கியம் பல மடங்கு மேம்படும் குடும்பத்தின் ஆரோக்கியத்ம் அதிகரிக்கும்.

ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும் நிதிநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் செலவுகள் கவனம் இருக்க வேண்டிய மாதம்.

உத்தியோகம் தொழில் எதுவாக இருந்தாலும் பணியிடத்தில் எந்த ஒரு விவாதங்களிலும் விலகி இருப்பது நல்லது, கவனமாக வேலை செய்து முடிப்பது நல்லது.

மகர ராசி வைகாசி மாத பலன்

மகர ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் கலவையான பலன்களை கொடுக்கும்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு

கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு விட்டுக் கொடுத்து செல்வது நல்லது விடாமுயற்சியுடன் சிறப்பான பலனை தரும்.

நிதி நிலைமை பல மேம்படும் குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்படும்,வாழ்க்கை துணையுடன் தேவையற்ற விவாதம் ஏற்படலாம்,நண்பர்களின் ஆதரவு எப்பொழுதும் இருக்கும்.

கும்பம் ராசி வைகாசி மாத பலன்

குடும்பத்தில் உங்கள் துணையின் உறவு வலுவாக இருக்கும் குடும்பத்தின் நல்ல ஆதரவு கிடைக்கும் உங்களின் செயல்பாடுகள் நல்ல லாபம் கொடுப்பதாக இருக்கும்.

முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும் உங்களுக்கு வரவேண்டிய பணம் சரியான நேரத்தில் வரும் கூட்டு வியாபாரத்தில் சில பிரச்சனைகள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள் மற்றும் கல்லீரலில் இருக்கக்கூடிய Liver Protection Foods in tamil

எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்தும் சரியான திட்டமிடலுடன் செயல்படுத்தவும்.

மீனம் ராசி வைகாசி மாத பலன்

மீனம் ராசிினருக்கு இந்த மாதம் திருமண யோகம் ஏற்படும் குடும்ப பிரச்சினைகள் உங்கள் மனதை தொந்தரவு செய்வதாக இருக்கும் மாணவர்கள் படிப்பில் அனுகூலம் ஏற்படும்.

நிதி நிலைமை மேம்படும் சிந்தித்து செலவு செய்வது நல்லது உங்கள் இலக்குகளை அடைவதில் கவனமாக இருக்க வேண்டும் வருமானம் அதிகரிப்பதற்கான வேலை வாய்ப்புகள் ஏற்படும்.

 

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
1
Not Sure
0
Silly
0