
Vastu Shastra for house construction in tamil
வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள்..!
வணக்கம் நண்பர்களே எல்லோருடைய வாழ்க்கையில் எல்லோருக்கும் சொந்தமாக வீடு கட்டுவது தான் ஒரு முக்கியமான பெரிய ஆசை அல்லது கனவாக இருக்கும்.
அப்படி பார்த்து பார்த்து கட்டிய வீடு அழகாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் வாஸ்து, சாஸ்திரம், பார்ப்பது மிக முக்கியம்.
அப்போதுதான் நீங்கள் வீட்டில் சகல கலா செல்வமும் கிடைக்கும், வீடு கட்டுவது என்ற பேச்சு எடுத்தால் கூட, நம் முன்னோர்கள் பஞ்சாங்கம் நல்ல நாட்கள் போன்றவற்றை பார்ப்பார்கள்.
வீடு கட்டுவதற்கு என்று பல மொழிகள் இருக்கிறது, எடுத்துக்காட்டாக வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள்.
ஒரு வீடு கட்டுவது என்றால் சுலபமான வேலை இல்லை அதற்கென்று 10 முக்கிய விஷயத்தை முதலில் கவனிக்க வேண்டியதாக இருக்கும், அதனை இந்த பதிவில் முழுமையாக நீங்கள் காணலாம்.
வீடு கட்டுவதற்கு உகந்த தமிழ் மாதம்
வீண் செலவு ஏற்படும் சித்திரையில் வீடு கட்டினால்.
வீடு கட்டுவது வெற்றி பெறுவதற்கு வைகாசியில் வீட்டைக் கட்டுவது நல்லது.
மரணத்தைப் பற்றி பயம் வரும் ஆனியில் கட்டுவது நல்லது அல்ல
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு நோய் பிரச்சனைகள் வரும் ஆடியில் வீடு கட்டினால்.
குடும்ப உறவு பல மடங்கு மேன்மையடையும் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும் ஆவணி மாதத்தில் வீடு கட்டினால்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் உபாதைகள் வந்து நீங்கும் இதனால் மன நிம்மதி இல்லாமல் போகும் புரட்டாசியில் வீடு கட்டினால்.
உறவுகளுக்கு இடையே பிரச்சினைகள் அதனால் கழகம் வரும் ஐப்பசியில் வீடு கட்டினால்.
கடவுள் அருள் கிடைக்கும் லட்சுமி தானம், லாபம்பெருகும் கார்த்திகையில் வீடு கட்டினால்.
மார்கழி மாதத்தில் வீடு கட்டத் தொடங்கினால் வீடு வீண் செலவுகள் ஏற்படும், வீடு கட்ட தடை ஏற்பட்டு கட்ட முடியாத நிலைக்கு சென்றுவிடும்.
அதாவது தை மாதத்தில் வீடு கட்ட தொடங்கினாள் கடன்பட்டு வீடு கட்ட நீண்ட மாதங்களாகும்.
சௌபாக்கியம் பெற்று வீடு கட்ட மாசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் நல்லதாக முடியும்.
பொன் பொருள் மனை பணம் தொழில் லாபம் கிடைக்கும் மாதம் பங்குனியில் வீடு கட்டத் தொடங்கினால்.
என்று நம் முன்னோர்கள் பல்வேறு இலக்கியங்கள் மற்றும் நூல்களில் இதனை பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
முதலில் கவனிக்க வேண்டிய அறை
முதலில் கவனிக்க வேண்டியவை பூஜை அறை, அந்த பூஜை அறையை வட கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது, சுவாமி படங்கள் கிழக்கு திசையை பார்க்கும்படி இருப்பது மிக நல்லது என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.
துளசி மாடம் வாஸ்து எப்படி இருக்க வேண்டும்
பெரும்பாலோனோர் வீட்டில் இதனை வைப்பதில்லை, வளர்ப்பதும் இல்லை, இது ஒரு அற்புதமான மூலிகை செடி என்று சொல்லலாம்.
துளசி செடி வீட்டில் இருப்பது மிகவும் நல்லது, அதுவும் கிழக்கு திசை பார்த்தபடி இருப்பது மிக மிக நல்லது.
இதனை வளர்ப்பதால் நிறைய மருத்துவ குணமும், சுத்தமான காற்றையும் நமக்கு அளிக்கும்.
அதுமட்டுமில்லாமல் துளசி செடி இருக்கும் இடத்தில் மிகவும் அமைதியாக இருப்பதால், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும் மனமும் அமைதி பெறும்.
விளக்கு ஏற்றும் திசை எப்படி
விளக்கு ஏற்றுவது பாரம்பரியம் என்பதால் மட்டுமே இதனை செய்வதில்லை, விளக்கு ஏற்றுவதால் வீட்டில் உள்ளவர்களின் பலவிதமான எண்ணங்களை மாற்றி.
ஒருமித்த யோசனைகள் அமைதி சந்தோசத்தை வெளிப்படுத்தும் என்பதற்காக விளக்கு ஏற்றுவார்கள், கிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவது நல்லது.
படுக்கை அறை வாஸ்து எப்படி இருக்க வேண்டும்
படுக்கை அறை எவ்வளவு முக்கியமோ அதேபோல் மனிதர்கள் தூங்கும் போது அதற்கென்று சில திசையில் தூங்கினால் மட்டுமே நன்மை கிடைக்கும்.
கிழக்கு திசையில் தலைவைத்துப் படுத்தால் நேர்மறை ஆற்றல், ஞாபகசக்தி அதிகரிக்கும்.
அதேபோல் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது, தூக்கமின்மை, மனச்சோர்வு வரும்.
இதனால் வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது என்பார்கள் முன்னோர்கள்.
சமையலறை வாஸ்து எப்படி இருக்க வேண்டும்
வீடு கட்டத் தொடங்கினால் முதலில் வீட்டில் இருக்கும் பெண்கள் சொல்லுவது சமையல் அறை பெரிதாக அழகாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
கீழாநெல்லி மருத்துவ பயன்கள் என்ன..!
வாஸ்து பார்த்து அந்த திசையில் வையுங்கள் என்று சொல்வார்கள், சமையலறை என்றால் தென்கிழக்கு பகுதியில், கிழக்கு நோக்கி சமையல் செய்வது போல் அமைப்பது மிக மிக நல்லது.
How to apply personal loan in tamil
பூஜை அறைக்கு அருகில் இருப்பது நல்லது, கழிப்பறைக்கு அருகில் இருப்பது சரியானதாக இருக்காது.
படிக்கட்டு வாஸ்து எப்படி இருக்கலாம்
வீட்டில் படிக்கட்டுகள் அமைக்கும் போது மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டுவது நல்லதாகும், வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டு கட்டக்கூடாது.