செய்திகள்

வீடு கட்ட போகிறீர்களா? காலி மனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் போது..!Very careful if you are buying vacant land 2023

Very careful if you are buying vacant land 2023

Very careful if you are buying vacant land 2023

வீடு கட்ட போகிறீர்களா? காலி மனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் போது..!

இந்த விஷயங்களை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்,அப்பொழுதுதான் பத்திரப்பதிவு உங்களுக்கு செல்லுபடி ஆகும்.

உங்கள் கனவு இல்லத்தை கட்டுவதற்கு சென்னை உள்பட தமிழகத்தில் எந்தப் பகுதியில் நீங்கள் காலி மனை வாங்கினாலும் சில விஷயங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

என தமிழ்நாடு அரசு புதிய ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது, இல்லாவிட்டால் உங்கள் வாழ்நாளில் சேமிப்பு வீணாகிவிடும் குறிப்பாக பெரும் நிறுவனங்களிடம் இருந்து.

இடம் வாங்கும் போது நீங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், உள்ளிட்ட பெரு நகரங்களில் வீடு விலை சற்று வெகுவாக அதிகரித்துள்ள நிலையில்.

காலிமனை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் அதிக அளவில் இந்த ஆண்டு.

குறிப்பாக பிரதான நகரங்களில் வெளியில் காலிமனை வாங்கினால் எதிர்காலத்தில் வீடு கட்டி குடியேறலாம் என்று மக்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், உள்பட அதாவது விமான போக்குவரத்து, மெட்ரோ ரயில், வந்தே பாரத் ரயில், சேவைகள் உள்பட பல்வேறு வசதிகள் நிறைந்துள்ள.

குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி (smart city) நகரங்களில் சிறிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முதல் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வரை.

கவர்ச்சிகரமான பல்வேறு விளம்பரங்களை வெளியிடுகிறது மக்கள் பலரும் வீடு கட்ட இந்த கவர்ச்சிகரமான விளம்பர மூலம் ஏமாந்து போகிறார்கள்.

அப்படி வாங்கும் போது மக்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை முழுமையாக பார்க்கலாம்.

நிலம் சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள்

முதலில் நீங்கள் வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நம்பகத் தன்மை உடையதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தெரியாத அல்லது உங்கள் ஊருக்கு புதிதாக வரும் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை அவர்களிடம் நீங்கள் நிலம் வாங்குகிறீர்கள் என்றால்.

கண்டிப்பாக கூடுதல் விழிப்புணர்வு அதிகப்படியான தகவல்களை நீங்கள் சேகரிக்க வேண்டும்.

இடம் அமைந்துள்ள பகுதிக்கு டிடிசிபி (DTCP Approval) அங்கீகாரம் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.

சென்னையில் புறநகர் பகுதி என்றால் சிஎம்டிஏ அனுமதி (CMDA Approval) வேண்டும்.

எங்கு வாங்குகிறீர்கள் அங்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா, நகர்புற வளர்ச்சி எப்படி இருக்கும், என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இடம் வாங்கும் பகுதியில் தார் சாலை, கழிவுநீர் கால்வாய், வசதி அமைந்துள்ளதா, பூங்கா அமைக்க இடம் கொடுத்துள்ளார்களா அல்லது அரசின் தேவைக்கு நிலம் ஒதுக்கி உள்ளார்களா அல்லது புறம்போக்கு நிலமோ.

புஞ்சை நிலமா, நன்செய் நிலமா, மேட்டு நிலமா, பாதை 25 அடிக்கு குறையாமல் பார்த்து இடம் வாங்குங்கள்,30 அடி பாதை இருந்தால் தான் வாகனங்கள் உள்ளே செல்ல முடியும்.

எனவே அதனை உறுதி செய்யுங்கள், மெயின் ரோட்டில் இருந்து மனை எவ்வளவு தூரம் உள்ளது.

நீங்கள் அலுவலகம் செய்யும் இடம் எவ்வளவு தூரம் எவ்வளவு நேரம் பயணம் ஆகியவற்றை கணக்கிடுங்கள்.

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் சென்னை

சென்னை பொறுத்தவரை சில விஷயங்களை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும்.

சிலர் தரமணியில் வேலை பார்த்துக்கொண்டு திருவாரூரில் இடம் வாங்கி வீடு கட்ட குடியேறுவார்கள் அவ்வளவு தூரம் தினமும் பயணிப்பது மிகவும் சிக்கலானது.

அதேபோல் சிலர் செங்கல்பட்டுக்கு அருகே 8 கிலோமீட்டர் தூரம் இருக்கும் அங்கிருந்த ரயிலில் ஏறி தரமணி அல்லது வேளச்சேரியில் வேலை பார்க்க ரயில், பேருந்து, என மாறி மாறி பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

அப்படி வந்து சென்றால் உங்கள் பயணம் நேரம் மிக அதிகம் அதற்கு செலவும் அதிகம் எனவே சென்னையின் புறநகர் பகுதியில் இடம் வாங்குகிறீர்கள் என்றால்.

ரயில் நிலையம், பேருந்து நிலையம், அருகில் இருப்பதை பார்த்து வாங்குவது மிக சிறந்தது.

அப்படி முடியாவிட்டால் நீங்கள் வேலை செய்யும் பகுதியில் லீசுக்கு வீடுகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம், அது உங்களுக்கு இன்னும் பல மணி நேரம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும்.

பத்திர பதிவில் மிகவும் கவனம் தேவை

நீங்கள் வாங்கும் காலிமனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றிற்கு பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பு என்றால் அந்த நிலம் உண்மையில் யார் பெயரில் இருக்கிறது.

எவ்வளவு தொகைக்கு அரசாங்கம் அதனை நிர்ணயம் செய்துள்ளது, என்பதை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு அந்த நிலம் சம்பந்தமாக வில்லங்கச் சான்று 20 வருடங்களுக்கு நீங்கள் இணையதளத்தில் பதிவு இறக்கம் செய்து அதனை அனுபவம் வாய்ந்த.

ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அல்லது வழக்கறிஞர்களிடம் காண்பித்து அதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை முழுவதும் நீங்கள் தெரிந்து கொண்டு.

அதன்பிறகு நீங்கள் அந்த நிலத்தை வாங்குவதற்கு திட்டமிட்டால் உங்களுடைய பணமும் சேமிக்கப்படும்,பத்திர பதிவு சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது.

அடுக்குமாடி குடியிருப்பு என்ன செய்ய வேண்டும்

அடுக்குமாடி குடியிருப்பு என்றால் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

முக்கியமாக அந்த நிலம் சம்பந்தமான தகவல்களை நீங்கள் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கட்டப்பட்டுள்ள கட்டிடம் மிகவும் உறுதியானதா என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் பணத்தை மிச்சப்படுத்துவதற்கு கட்டிட உரிமையாளர்கள் தரமற்ற கட்டிடங்களை கட்டி விடுகிறார்கள்.

இதனால் குறுகிய காலத்தில் அந்த கட்டிடம் முழுவதும் மண்ணுக்குள் புதைந்து அல்லது இடிந்து விழுந்து மிகப்பெரிய ஒரு விபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அரசாங்கம் மின்சாரம், குடிநீர், கழிவு நீர் கால்வாய், மழை நீர் சேகரிப்பு, உள்ளிட்ட திட்டங்களுக்கு என்ன மாதிரியான விதிமுறைகளை நிர்ணயம் செய்துள்ளது.

அந்த விதிமுறைகள் அனைத்தையும் அந்த கட்டுமான நிறுவனம் சரியாக பின்பற்றி உள்ளதா என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அந்த கட்டுமான நிறுவனம் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு எத்தனை ஆண்டுகள் பாதுகாப்பு அல்லது இந்த குடியிருப்பு இதனை ஆண்டுகள் உறுதி தன்மையுடன் இருக்கும் என்பதையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

TN rs 1000 திட்ட விண்ணப்ப சரிபார்ப்பு செயல்முறை

MI INDEPENDENCE DAY FESTIVAL BEST OFFERS

Ather 450S Electric Scooter Specifications Price

How to apply new ration card in tamilnadu

New SP 160 Honda Unicorn Bike Specifications Price

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
1