
Vikram lander is traveling very close to the moon
வெறும் 25 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நிலவை மேலும் நெருங்கிய விக்ரம் லேண்டெர் இனி தரையிறங்குவது மட்டுமே அடுத்த கட்ட வேலை..!
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு இந்தியா அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டெர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட நிலையில்.
இறுதி கட்டமாக அதன் தூரம் நிலவுக்கு நெருக்கமாக குறைக்கப்பட்டு இருக்கிறது,அடுத்த கட்டமாக நிலவில் லேண்டெர் தரையிறங்க இருக்கிறது.
நிலவில் இருக்கும் இயற்கை வளங்களையும் நிலவின் பகுதிகளையும் யார் ஆக்கிரமிக்க போகிறார்கள் என்ற போட்டி உலக நாடுகளில் தற்போது தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக நிலவின் தென் துருவப்பகுதியில் இருக்கும் நீர் அமெரிக்காவின் நாசாவே இதை கண்டுபிடிக்க தவறிய நிலையில் இந்தியா இதை வெற்றிகரமாக கண்டுபிடித்து.
உலகிற்கு தெரிவித்தது இந்த நிலையில் நிலவில் சிறிய ரோபோட்டை இறக்கி அதன் மூலம் ஆய்வு செய்ய சந்திராயன்-2 திட்டத்தை இந்திய செயல்படுத்தியது.
இஸ்ரோ இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப கோளாறால் சந்திராயன்-2 நிலவில் வேகமாக மோதி உடைந்தது,இருப்பினும் கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
எனவே மீண்டும் மற்றொரு சிறிய ரோபோட்டை அனுப்ப முடிவு செய்தது,இதற்கு சந்திராயன்-3 என்ற பெயரும் சூட்டப்பட்டது ஏற்கனவே நடந்த தவறுகளில் இருந்து.
பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் அந்த தவறு நடக்காதுவாறு இந்திய விஞ்ஞானிகள் இந்த ரோபோட்டை செயல்படுத்தி வருகிறார்கள்.
கடந்த ஜூலை 14ஆம் தேதி பூமியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம் பூமியின் சுற்றுவட்ட பாதையை கடந்து தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக பயணிக்கிறது.
கடந்த சில நாட்களாக இதன் தூரம் படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது நிலவுக்கு நெருக்கமாக இதனை விஞ்ஞானிகள் கொண்டு சென்றுள்ளார்கள்.
இதன்பிறகு 17ஆம் தேதி விண்கலத்தில் இருந்து லேண்டெர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது,இது வரும் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்க இருக்கிறது.
எனவே படிப்படியாக அதன் தூரம் குறைக்கப்பட்டு வருகிறது,இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம் மிகவும் குறைக்கப்பட்டது.
தற்போது 25 கிலோமீட்டர் தொலைவிலும் அதிகபட்சம் 134 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவை சுற்றி வருகிறது.
சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம்லேண்டர் தனியாக பிரிந்த பின்னர் அதன் தூரம் 2வது முறையாக படிப்படியாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த கட்டமாக நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுவது மட்டுமே இறுதிக்கட்ட பணியாக இருக்கிறது, வரும் 23ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு இது நிலவில் தென் துருவத்தில் மெல்ல தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
PM e Bus sewa scheme details in tamil 2023..!