Uncategorized

What are the benefits of palm tree in tamil

What are the benefits of palm tree in tamil

What are the benefits of palm tree in tamil

பனை மரத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் பனை மரத்தின் பயன்கள் என்ன..!

தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்கும் பனைமரம் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது, நம் நாட்டில் இது அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது.

பனைமரம் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாக பல மக்கள் தொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு பலவிதங்களில் இது மனிதர்களுக்கு உதவுகிறது.

இதன் அறிவியல் பெயர் பொராசஸ் ஃபிளாபெல்லிபர் நாம் இந்த கட்டுரையில் பனைமரம் பற்றிய சில குறிப்புகளையும் அதன் நன்மைகளையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

பனை மரத்தில் ஆண் பனை மரம், பெண் பனை மரம் என இரண்டு வகைகள் இருக்கிறது,பெண் பனையை  பருவப் பனை என்றும் ஆண் பனையை அழகுப் பனை மரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மரம் 10 ஆண்டுகள் கழித்து 15 மீட்டர் உயரம் வளரும் தன்மை கொண்டது, 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ,ஆண் பனை மரமா அல்லது பெண்  பனை மரமா என்று கண்டுபிடிக்க முடியும்.

இதன் இலைகள் நீளமாகவும், பச்சை நிறத்திலும், பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

What are the benefits of palm tree in tamil

பனை மரத்தின் முக்கிய பயன்கள்

பண்டைய காலத்தில் உள்ள மக்கள் தங்கள் கருத்துக்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்ள பனையோலை பயன்படுத்தப்பட்டது.

இப்போது இருக்கும் மின்விசிறிக்கு பதிலாக பண்டைய காலத்தில் இருக்கும், மக்கள் பனை ஓலையை விசிறியாக பயன்படுத்தினார்கள் மேலும் வீட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.

குழந்தைகள் விளையாடுவதற்கு என நுங்கு வண்டிகள், பொம்மைகள், தொப்பி போன்றவற்றையும் செய்து பயன்படுத்தினார்கள்.

கைவினைபொருட்கள் செய்து விளையாடினார்கள், கை தொழில் செய்யும் பனைமரம் பயன்படுத்தப்படுகிறது, இன்றுவரை.

சிலருக்கு தொழில் புரிவதற்கு வாய்ப்புகளையும் இந்த பனைமரம் ஏற்படுத்தி கொடுக்கிறது, பனை ஓலைகள் மூலம் விசிறி, கூடைகள், போன்றவற்றையும் செய்து விற்பனை செய்யலாம்.

அதன் மூலம் கணிசமான வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறது.

பனை மரத்தின் மருத்துவ குணங்கள் என்ன

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி, போன்றவை உடலுக்கு வலு சேர்க்கும் பல நன்மைகளையும் கொடுக்கிறது.

கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் சூட்டை குறைப்பதற்கு நுங்கு சிறந்ததாக இருக்கிறது, வியர்குரு போன்றவற்றை தடுப்பதற்கும் பயன்படுகிறது, உடலுக்கு சக்தியையும் கொடுக்கிறது.

பனை வெள்ளத்தில் இருந்து கிடைக்கும் பணம் கற்கண்டு, உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கிறது, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

கண்பார்வை மேம்படுத்துகிறது.நினைவாற்றலை அதிகரிப்பது, சிறுநீரகக்கல் வராமல் தடுக்க இது பயன்படுகிறது.

கருப்பட்டி பனை வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை தேநீர் அல்லது பால் போன்றவற்றில் கலந்து குடித்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

மலச்சிக்கலை சரிசெய்யும், உடல் எடை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது,கருப்பட்டி பனை வெல்லம் எடுத்துக் கொண்டால்.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம்.

பனங்கள்ளு ஒருவிதமான போதைப்பொருள் என்றாலும்கூட இது பல்வேறு விதமான நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.

உடலுக்கு வலு சேர்க்கிறது, ஆண்மையை அதிகரிக்கவும், வயிற்றுப் புண்ணை சரிசெய்யும், இது உதவுகிறது,இதை காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

பனங்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள சூடு குறையும், உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும், பணம் கிழங்குடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் இரும்புச்சத்து உடலில் அதிகரிக்கும்.

வெள்ளை அரிசியைவிட கருப்பு அரிசி தான் சிறந்தது ஏன்.

வாய்வு பிரச்சனை சரியாகும், பணம் கிழங்கை உப்பு, மிளகு, பூண்டு, சேர்த்து சாப்பிடலாம்,பனைமரத்து பழம் ஒரு சிறந்த சத்துணவாக இருக்கிறது.

What are the benefits of palm tree in tamil

பனை மரத்தின் சிறப்புகள் என்ன

பனையோலையில் செய்த வீடு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் இதனால் கோடை காலங்களில் நோய்வாய்ப்படுவதில் இருந்து தப்பித்து விடலாம்.

Organic farming Green Chilli Cultivation Method

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், போன்ற மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பனையேற்றம் செய்யப்படுகிறது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0