
what are the causes female infertility in tamil
குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன..!
திருமணம் நடந்து குறிப்பிட்ட கால அளவை தாண்டியும் குழந்தை பாக்கியம் இல்லாத பட்சத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகிறது.
ஆய்வின் முடிவில் பெண்ணுக்கு சில குறைபாடுகள் உள்ள சூழலில் பெண் கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது.
கருவுறாமை என்றால் இயற்கையாக கருவுற முடியாததை குறிக்கும் அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைபடும்.
இது இப்பொழுது அதிகமாக நிகழ்கிறது, என்று தமிழ்நாடு மருத்துவத் துறை ஒரு கவலையான விஷயத்தை தெரிவித்துள்ளது.
இது பொதுவாக 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிக ஏற்படக்கூடும், மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றால் கரு வளர்ச்சி ஏற்படாமல், ஒரு காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்படுவது, மற்றொரு சோகமான விஷயம்.
இந்த கருவுறாமை பிரச்சனை ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் வெவ்வேறு பல்வேறு வகையான காரணங்களால் ஏற்படுகிறது.
கருவுறாமை என்னும் பிரச்சனை இப்பொழுது பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது, பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
எனினும் அவற்றை குணப்படுத்த இப்பொழுது அதிநவீன பல்வேறு சிகிச்சைகளும் நடைமுறையில் இருக்கிறது.
இந்தக் காரணங்களை கண்டறிந்து அந்த நபர்களுக்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
இந்தவகையில் பெண்கள் கருவுருவாவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து உள்ளது, என்றால் அது உண்மை.
ஏன் இந்த கருவுறாமை பிரச்சனை ஏற்படுகிறது
கர்ப்பப்பை வாயில் சில பிரச்சினைகள்.
கர்ப்பப்பை குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சினைகள்.
அண்டவிடுப்பின் போது ஏற்படும் சிக்கல்கள்.
மற்றொரு மிக முக்கியமான காரணம்
மாதவிடாய் ஒழுங்கற்ற காலங்களிலும் ஏற்படுவது கருவுறாமைக்கு மிக முக்கிய காரணமாக மருத்துவர்களால் கருதப்படுகிறது, அதாவது மாதவிடாய் முன்கூட்டியே வருவது அல்லது தாமதமாக நிகழ்வது.
மாதவிடாய் சமயங்களில் இடுப்பு பகுதியில் அதிக வலி இருப்பதும் கருவுறாமை பிரச்சனையின் முக்கிய அறிகுறியாகும்.
நாள் தவறிய மாதவிடாய் பிசிஓடி பிரச்சனைக்கான முக்கியமான அறிகுறியாக மருத்துவர்களால் கருதப்படுகிறது.
கடினமான வலியுடன் கூடிய மாதவிடாய் எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான, முக்கிய அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது, ஆகவே உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லதாக அமையும்.
வயது ஒரு முக்கியமான காரணம்
அதிக வயதாகிய பெண்களுக்கு கருத்தரிப்பது சற்று கடினமாக இருக்கிறதே, பொதுவாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப் பேறு அடைய முயல்களில் கருத்தரித்தல், பல்வேறு வகையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உடல் எடை முக்கியமான காரணம்
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த குழந்தையின்மை பிரச்சினை ஏற்படும்.
எனவே பெண்கள் பொதுவாக அவர்களது உடல் எடையை சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
நோய் தொற்று மற்றொரு காரணம்
பாலியல் ரீதியான உறவுகள் மூலம் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், தொற்று நோய்கள், ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் என்ன..!
ஆனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சையை மேற்கொள்வது சிறந்ததாக அமையும் பெண்களுக்கு.
Top 10 vastu herbal plants in tamil
குழந்தையின்மைக்கான காரணம் சுரப்பிகள்
கருவுறுதல் நிகழ சுரப்பிகள் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது, உடலில் சீரான வகையில் செயல்படாத போது கருவுறுதலுக்கு தேவையான சுரப்பிகள் ரத்தத்தில் கலந்து இருக்காது.
இதுவே குழந்தையின்மை ஏற்பட்டுவிடும், இந்தப் பிரச்சினை தீர மாத்திரைகள், மருந்துகள், பரிந்துரைக்கப்படுகிறது.