Health Tips

செயற்கை இனிப்புகளை நீங்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் பக்க விளைவுகள் என்ன..!What are the effects of artificial sugar on the body

What are the effects of artificial sugar on the body

What are the effects of artificial sugar on the body

செயற்கை இனிப்புகளை நீங்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் பக்க விளைவுகள் என்ன..!

செயற்கை இனிப்புகள் என்பது இயற்கை சர்க்கரைக்கு பதிலாக உணவு மற்றும் குளிர்பானங்களை இனிமையாக பயன்படுத்தும் பொருள்.

அவை இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் இல்லை ஆனால் அவை வேதியல் ரீதியாக செயற்கையாக உருவாக்கப்படும் பொருள்கள்.

செயற்கை இனிப்புகள் மற்றும் புற்று நோய்க்கு இடையே உள்ள தொடர்பை பற்றி மருத்துவ ஆராய்ச்சிகளும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

சிலருக்கு தொடர்ந்து ஒற்றைத் தலைவலி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

செயற்கை இனிப்புகள் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் உடலில் செரிமானத்தை கடுமையாக பாதிக்கிறது.

வேதியல் ரீதியாக உருவாக்கப்படும் செயற்கை இனிப்புகளில் ஆஸ்பார்டேம்,சுக்ரலோஸ்,அசெசல்பேம்,பொட்டாசியம்,நீயோடேம்  மற்றும் சாக்கரின் ஆகியவை அடங்கும்.

குறைந்த கலோரி உணவுகள் உணவு பானங்கள் மற்றும் சர்க்கரை இல்லாத பசை ஆகியவற்றில் செயற்கை இணைப்புகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

செயற்கை இணைப்புகள் ஆரோக்கியத்திற்கு சிறிது நல்லது ஏனெனில் அவை கலோரி உட்கொள்ளுதலை குறைக்கிறது மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

சர்க்கரை உட்கொள்ளுதலை கட்டுப்படுத்த வேண்டிய நீரிழிவு நோயாளிகளுக்கு அவை ஒரு சிறந்த வழி,இது நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் எடை குறைக்க முயற்சிக்கு நபர்களுக்கு நன்மை பயக்கும்.

இருப்பினும் செயற்கை இனிப்புகளில் சில எதிர்மறை அம்சங்கள் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது,செயற்கை இனிப்புகளின் பிரச்சனை என்னவென்றால்.

அவை இனிப்பு சுவையுள்ள உணவு மற்றும் பானங்களுக்கு மக்களை கடுமையாக அடிமைப்படுத்துகிறது.

இது இனிமை இல்லாத ஆரோக்கியமான உணவுகளின் சுவையை குறைக்கும், கூடுதலாக சில ஆராய்ச்சிகள் செயற்கை இணைப்புகள் பசியை தூண்டலாம்.

இதனால் உடல் எடை அதிகரிக்கலாம் என்கிறது மருத்துவத்துறை, செயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் சில பொதுவான பாதிப்புகளை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.

அதிக பசி எடுத்துக் கொண்டே இருக்கும்

செயற்கை இனிப்புகள் உணவுகள் மீதான உங்கள் ஆசையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்,ஆரோக்கியமான உணவை கடைபிடிப்பதை நீங்கள் எப்பொழுது முயற்சி செய்ய வேண்டும்.

உடல் எடை பல மடங்கு அதிகரிக்கும்

செயற்கை இனிப்புகள் உண்மையில் ஆற்றல் உட்கொள்ளுதலை கட்டுப்படுத்தி உடலின் ஆற்றலை குறைப்பதால் அதன் மூலம் அதிக அளவில் உணவு சாப்பிடும் நிலை ஏற்பட்டு அதன் மூலம் உடல் எடை பல மடங்கு அதிகரிக்கிறது.

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு வழிவகை

செயற்கை இனிப்புகள் குடல் பாக்டீரியாவின் சமநிலையை சீர்குலைக்கும் இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழி நோயை உருவாக்கும் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.

செயற்கை இனிப்புகள் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது,என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

தொடர்ந்து தலைவலி ஏற்பட்டு கொண்டே இருக்கும்

செயற்கை இனிப்புகளை தொடர்ந்து அதிக அளவில் உட்கொள்வதால் சிலருக்கு மாலை நேரங்களில் ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

செரிமான பிரச்சனைகள் ஏற்படும்

செயற்கை இனிப்புகள் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் உடலில் செரிமான பிரச்சனை நிச்சயம் ஏற்படும் வயிறு உப்புதல், வீக்கம், வாய்வு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்

செயற்கை இணைப்புகள் மற்றும் புற்று நோய்க்கு இடையிலான தொடர்பை பற்றி முரண்பட்ட ஆராய்ச்சிகள் நிறைந்துள்ளது,சில ஆய்வுகள் சிறுநீர் புற்றுநோய் மற்றும் லீப்போமாவுடன் சாத்தியமான தொடர்பை பரிந்துரைக்கிறது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Ather 450S Electric Scooter Specifications Price

How to apply new ration card in tamilnadu

New SP 160 Honda Unicorn Bike Specifications Price

How to reduce cholesterol level naturally in tamil

New rules announced for getting new passport

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
1
Not Sure
1
Silly
1