
What are the foods should don’t keep in fridge
குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாத உணவு பொருட்கள் என்ன..!
எல்லோருடைய வீட்டிலும் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம், இதனால் அந்த பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் புதிதாக இருக்கிறது.
கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து உணவு பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாது.
உங்களுடைய உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு முதலில் செய்யக்கூடியது, இயற்கையில் கிடைக்கக்கூடிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வது மட்டுமே.
இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை முறை சூழ்நிலை காரணமாக பல உணவுப் பொருட்களை வீட்டில் இருக்கும் பெண்மணிகள் பல நாட்கள் பிரிட்ஜில் வைத்து அதனை பயன்படுத்துவதால் பல்வேறு வகையான உடல் உபாதைகள் குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படுகிறது.
பிரிட்ஜில் கட்டாயம் வைக்க கூடாத சில உணவுப் பொருட்கள் இருக்கிறது, அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பூண்டு
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது அப்படி வைத்தால் அது பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும், அதனை காற்றோட்டமான சூழலில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
பூண்டுகளை வாங்கியதும் அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து காற்றோட்டமான இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
முலாம்பழம்
கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது, அவ்வாறு வைத்தால் முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது.
அதனால் நறுக்கிய முலாம்பழத்தை, டப்பாவிலோ, பாலிதீன் பையிலோ, போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.
தேன்
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான், ஆனால் நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன்.
சுவை கூட்டுவதற்கு பல்வேறு விதமான நஞ்சு பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது, எனினும் தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.
பூசணிக்காய்
பூசணிக்காயை எப்பொழுதும் நன்கு காற்றோட்டமான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும், இதேபோன்று கிவி பழம், பிளம் பழம், மாங்காய், அண்ணாச்சி பழம், தர்பூசணி, போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
வாழைப்பழம்
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் சுருங்கி விடும், எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கவே கூடாது.
உருளைக்கிழங்கு
உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது, அதேபோல அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது, உருளைக் கிழங்குகளில்.
பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும், காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும் பாலிதீன் பையில் வைக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் டாப் 10 பணக்காரர்கள் யார் யார் அதன் முழு விவரம்..!
வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும், பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தை வாங்கியவுடன், வீட்டுக்கு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக இருக்கும் சூழலில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
countries with lower currency value than Indian rupee
பலாப்பழம்
பொதுவாக பலாப்பழம் இயற்கையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் வளரக்கூடியவை பலாப்பழத்தை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் உங்களுடைய பல்லுக்கு அதிகமான தீங்கு ஏற்படுத்தும்.
முருங்கைக்கீரை
முருங்கைக்கீரை இயற்கையில் அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது இதில் தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது முருங்கைக்கீரையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் அதனுடைய உறுதித்தன்மை இழக்க நேரிடும்.