
What are the important symptoms elephantiasis
கொசுவால் ஏற்படும் நோய் யானைக்கால் நோயின் 5 முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்ன..!
டெங்கு, மலேரியா, மற்றும் சிக்கன்குனியா மட்டுமில்லாமல் கொசுவினால் பரவும் மற்றும் யானைக்கால் நோயின் 5 முக்கிய அறிகுறிகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
கொசுவால் பரவும் நோய்கள் என்ன
யானைக்கால் நோயின் முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்ன
ஆண்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான விபரீதங்கள் என்ன
கொசு தொல்லை தாங்க முடியவில்லை என்பது ஒரு சிரிப்பாக சொல்லும் வார்த்தையாக இருந்தாலும் அது மிகவும் ஆழமானது.
கொசுக்கள் கடிப்பது என்பது அந்த நேரத்தில் பிரச்சினையாக தோன்றினாலும் உண்மையில் மிகப் பெரிய அளவிலான நோய்களை கொசுக்கள் பரப்புகிறது அல்லது ஏற்படுத்துகிறது.
டெங்கு, மலேரியா,ஜிகா மற்றும் சிக்கன்குனியா யானைக்கால் என பல நோய்களை கொசுக்கள் பரப்புகின்றன.
கொசுவினால் பரவும் யானைக்கால் நோயின் முன்னெச்சரிக்கை அறிகுறிகள் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கலாம்.
நிணநீர் ஃபைலேரியாசிஸ் (lymphatic filariasis) என்றழைக்கப்படும் யானைக்கால் நோய் பெண் கொசுக்களால் பரப்பக்கூடிய ஒட்டுண்ணி புழுக்கள் ஏற்படுகிறது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் யானைக்கால் நோயின் அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட நிலை வரை கண்டுபிடிக்க முடியாது எனவே இந்நோயைக் கண்டறிவது மிக கடினம்.
இருப்பினும் யானைக்கால் நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
கால்களில் வீக்கம் ஏற்படுதல்
கைகள் மற்றும் கால்கள் காரணமே இல்லாமல் திடீரென வீங்குவது யானைக்கால் நோயின் முக்கிய அறிகுறி களில் ஒன்று.
உடலில் திரவம் சேர்வதன் காரணமாக கால்கள் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படலாம்.
ஒரு கை அல்லது கால் அதன் வழக்கமான அளவைவிட பல மடங்கு வீங்கியது போல் காணப்படும்,எனவே இந்த நோயை யானைக்கால் நோய் என்று அழைக்கப்படுகிறது.
மார்பகங்களில் வீக்கம் ஏற்படுதல்
ஆண்களைப் போலவே யானைக்கால் நோய் பெண்களின் பிறப்புறுப்புக்களை பாதிக்கிறது இது தொடைகளுக்கு இடையில் தோலில் புண் ஏற்படுவது மார்பகத்தை பெரிதாகிறது.
நிணநீர் கணுக்கள் மற்றும் மார்பகங்களில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் நிணநீர்க் குழாய்கள் மற்றும் நிணநீர் கணுக்கள் வளர்ச்சி அடைகிறது.
சருமம் உலர்ந்து போவது
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தோல் வறண்டு தடிமனாக இருக்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு சரியான ரத்த ஓட்டம் இல்லாததால் புண் குழி மற்றும் நிறம் மாறுவது என ஹைபர்கெராடோசிஸ் (Hyperkeratosis) போன்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்.
விதைப்பை விரிவடைதல்
நோயின் பிற்பகுதியில் காணப்படும் விதைப்பையின் வளர்ச்சி யானைக்கால் நோயின் முக்கிய அறிகுறி ஆகும், ஆண்குறியின் கீழ் உள்ள தோல் பின் வாங்கப்படலாம் இது வலி மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.
நிணநீர் மண்டலத்தை சேதப்படுத்துவதால் உடலின் பல்வேறு பாகங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
உடல் நலக்குறைவு ஏற்படும்
பொதுமைப்படுத்தப்பட்ட நோய் உணர்வுடன் அசௌகரியமான உணர்வு யானைக்கால் நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நதிகளின் பட்டியல்..!
கடுமையான காய்ச்சல் மற்றும் குளிர் போன்ற அறிகுறிகள் நோய் தோன்றும் இது தொற்று மற்றும் பித்தத்தால் ஏற்படும் உடலில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படும்.
Non alcoholic fatty liver disease symptoms in tamil
இந்த நோயின் அறிகுறிகளை நீங்கள் கண்டறிந்தால் உடனடியாக இதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் இதனை முழுமையாக குணப்படுத்தி விடலாம்.