
What are the Kidney failure reason in tamil
சிறுவயதில் சிறுநீரகம் செயலிழக்க காரணம் என்ன தெரியுமா..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்முடைய இணையதள பதிவில் சிறுவயதில் சிறுநீரக செயல் இழக்க காரணம் என்ன என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கப்போகிறோம்.
பொதுவாக மனித உடலில் உருவாகும் நோய்களுக்கு நாம் தான் முக்கிய காரணமாக இருக்கிறோம்.
அது எப்படி நாம் காரணமாக இருக்கலாம் என்று சிந்திக்கத் தோன்றும், அது நாம் எடுத்துக்கொள்ளும் உணவு.
உணவு நல்லதாக இருந்தால் அது அனைத்து வகையான நன்மைகளும் உடலுக்கு தரும்.
ஏதோ ஒரு வகையில் பிரச்சனை வருகிறது, என்றால் உணவு மிக முக்கிய காரணமாக இருக்கிறது, அந்த வகையில் இன்று சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் மற்றும் அதற்கான முக்கிய காரணம்,என்ன என்பதை பற்றி முழுமையாக பார்க்க போகிறோம்.
சிறுநீரகம் செயலிழப்பு அதற்கு என்ன காரணம்
மனித உடலில் அதிகமாக செயல்படுவது சிறுநீரகம், மனித உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவது சிறுநீரகம் தான், குறிப்பாக ரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியில் கொண்டுவருவது சிறுநீரகம் தான்.
நம் உடலில் ரத்த அழுத்தம், ஹார்மோன் சுரப்பு, ரத்த உற்பத்தி, எலும்புகளின் உறுதி, நம் உடலின் உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், இந்த சிறுநீரகம் முழுவதும் உதவுகிறது.
முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே இந்த சிறுநீரக செயலிழப்பு இருக்கும்,இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் போல் சிறுநீரக கோளாறுகள் இருந்து கொண்டே இருக்கிறது.
சிறுநீரகம் செயலிழக்க முதல் காரணம் சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது கால சூழ்நிலைக்கு ஏற்ப தண்ணீரை குடிக்காமல் இருப்பதே.
கோடை காலத்தில் தண்ணீர் தாகம் அதிகம் எடுக்கும் அப்போது தண்ணீர் குடிக்காமல் அதிக அளவில் செயற்கை முறையில் ரசாயனங்கள் கலக்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது மிகவும் தவறு.
இதுவே சிறுநீரகம் செயலிழக்க முதல் காரணமாக அமைந்துவிடுகிறது.
அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் தேக்கி வைக்கக் கூடாது அது உங்களுக்கு மிகவும் பாதிப்பை தரும் அதில் அதிக அளவில் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான்.
தொடர்ந்து மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கை கால் வலி, மூட்டு வலி, சளி பிடித்தால், உடம்பு வலி, தலை வலி, போன்றவைகளுக்கு அடிக்கடி மாத்திரை எடுத்துக்கொள்வது ஒரு காரணம்.
ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் அளவை கட்டுக்குள் வைக்காமல் இருந்தால் அது சிறுநீரக செயலிழப்பு முக்கிய காரணம்.
சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டால் உடனே அதற்கான காரணத்தை கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்காமல் இருந்தால் அதனால் முதலில் பாதிப்படைவது சிறுநீரகம் தான்.
அதிகம் உப்பு சேர்த்து சாப்பிடுவது, அதிக உப்பு உள்ள பொருட்களை சாப்பிட்டால் அது இரத்த அழுத்தத்தை பல மடங்கு அதிகரிக்கும், சிறுநீரக செயலிழப்பு வழிவகை ஏற்படும்.
உடலில் நச்சுக்கள் அதிகரித்தால்
சிறுவயதில் புகைபிடித்தால் ரத்த நாளங்கள் கடினமாகும் இதனால் ரத்த நாளங்கள் அளவு குறைந்து சிறுநீரகத்துக்கு செல்லக்கூடிய இரத்த ஓட்டம் குறையும் இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் தூக்கம் என்பது மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது.
How to reduce heart attack risk in tamil
அதற்கு முதன்மையாக இருப்பது செல்போன் இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் தூக்கமின்மை பிரச்சினை காரணமாக அதிக ரத்த அழுத்தத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
தரமற்ற போலி மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகம் பாதிப்படையும், நாட்டில் தரமற்ற பொருட்கள் அதிகமாக இருக்கிறதே, அதனை உட்கொண்டால் சிறுநீரக செயலிழப்பு கோளாறுகள் ஏற்படும்.