
What are the low BP symptoms in tamil
குறைந்த ரத்த அழுத்த அறிகுறிகள் என்ன..!
நீங்கள் என்ன மாதிரியான பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலை செய்கிறீர்கள், என்பதை பொறுத்து உங்களது.
உடலில் உள்ள இரத்த அழுத்தமானது ஏற்ற இறக்கத்துடன் அவ்வப்போது காணப்படும்.
ஆனால் உடலில் ரத்த அழுத்தத்தின் அளவானது குறைய தொடங்கும் போது மயக்கம், தலைசுற்றல், கண் பார்வை குறைதல், போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
சில சமயங்களில் குறைந்த ரத்த அழுத்தம் உயிருக்கு ஆபத்தை கூட ஏற்படுத்திவிடும்.
சரி இந்த பதிவில் உடலில் ரத்த அழுத்தம் குறைந்தால், என்ன மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படும், அதற்கான அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மயக்கம் அல்லது தலைசுற்றல் ஏற்படும்
உடலில் குறைந்த ரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறியாக முதலில் இருப்பது தலைசுற்றல் பிரச்சினைதான்.
உடலில் ரத்த அழுத்தம் சரியான அளவில் இல்லாமல் மிகவும் குறைந்த அளவில் காணப்படும் அந்த நபருக்கு தலைசுற்றல், மயக்கம், கண் பார்வை குறைதல், போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
மங்கலான கண் பார்வை தென்பட ஆரம்பிக்கும்
ரத்த அழுத்தம் உடலில் குறையும்போது உங்களால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாது அல்லது கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகிவிடும்.
பக்கத்தில் இருக்கின்ற பொருளை கூட உங்களால் சரியாக பார்த்து எடுக்க முடியாது, என்ற அவலநிலை இந்த ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் ஏற்படும்.
உடல் நிலை மாற்றம் அடைதல்
ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது உடலில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படும்.
குறைந்த ரத்த அழுத்தம் உங்களுடைய உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும், சில நேரங்களில் இதயத்துடிப்பு மாறி மாறி காணப்படும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்
குறைந்த ரத்த அழுத்த பிரச்சினை மற்றும் நீரிழிவுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உடலில் ரத்த அழுத்தத்தின் அளவானது அதிக அளவில் குறையும்போது, உடலில் வறட்சி தன்மை அதிகரித்து விடும்.
பலவீனமாக இருத்தல்
உடலில் குறைந்த ரத்த அழுத்தம் காணப்படும் போது அதிக சோர்வுடன் இருக்கமுடியும், எதிர்பாராதவிதமாக திடீரென்று உடலில் ரத்த அழுத்த வீழ்ச்சி ஏற்பட்டால், உங்களால் சரியாக நடப்பதற்கு கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
ரத்த அழுத்தத்திற்கான மேலும் சில அறிகுறிகள் என்ன
உடலில் தடிப்புகள் ஏற்படுதல்
உடல் முழுவதும் இறுக்கமான ஒரு சில உணர்வுகள்
மயக்கம் அல்லது குழம்பிய மனநிலை ஏற்படும்
எந்த செயலிலும் நிதானமாக செய்ய முடியாது
இதயத்துடிப்பு அதிகமாக இருத்தல்
உடலில் நடுக்கம் ஏற்படுதல்
மிருதுவான தோல் காணப்படுதல்
உணவு சாப்பிடுவதில் பல்வேறு சிக்கல்கள்
வாய், நாக்கு, தொண்டை, மற்றும் இதர பகுதிகளில் வீக்கம் காணப்படுதல்
அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்சனை
மேற்கூறிய இந்த அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி தென்பட்டால் குறைந்த இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியாக இருக்கலாம்.
உடனடியாக உங்கள் மருத்துவரை பார்த்து சோதனை செய்து, அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள், உணவு முறைகளையும் பின்பற்றுங்கள்.
குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வீட்டு வைத்தியம் என்ன
கண்டிப்பாக மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சத்தான மற்றும் சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறைந்த ரத்த அழுத்தத்தை வீட்டில் எளிமையான முறையில் தடுப்பதற்கு, நீங்கள் முதலில் அதிகமாக எப்பொழுதும் தண்ணீர் குடிக்கவேண்டும்.
What is criminal procedure identity New Act 2022
உடலில் ஓடுகின்ற ரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கு, படுக்கையிலிருந்து தூங்கி எழுவதற்கு முன்பு, கால்களுக்கு சிறிது நேரம் அசைவு கொடுக்கவேண்டும்.
ஊட்டச்சத்து சார்ந்த பானங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.