
what are the PAN card new rules in tamil
பான் கார்டு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
10 வருடங்களுக்கு முன்பு பான்கார்டு என்றாலே தொழில்துறையினர் அல்லது வரி கட்டும் நபர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தது.
ஆனால் இப்பொழுது அதன் நிலைமை முற்றிலும் மாறி விட்டது நீங்கள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும், என்றால் கூட இப்பொழுது பான் கார்டு கட்டாயம் அவசியமாகி உள்ளது.
முன்பெல்லாம் அதிகமாக பணம் சம்பாதிக்கக்கூடிய நபர்கள் மட்டுமே பான்கார்டு என்பதைப் பயன்படுத்தி இருந்தார்கள்.
இப்போது ரேஷன் கார்டு போல பான் கார்டையும் பயன்படுத்தக்கூடிய நிலை வந்துள்ளது.
வருமான வரித்துறை பான்கார்டுக்கு உரிய விதி முறைகளை மாற்றிக் கொண்டு இருக்கிறது.
அதுவும் தற்போது பான் கார்டுக்கு முக்கிய விதிமுறைகளை மாற்றியுள்ளது மேலும் வங்கியில் 50,000/-ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யவேண்டும் என்றால் இப்பொழுது பான் கார்டு கட்டாயம்.
பான் கார்டு என்பது மிகவும் அவசியமாக உள்ளது, என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சட்டத்திருத்தங்கள் செயல்முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகிறது.
இந்திய அரசால் வழங்கப்படும் முக்கிய சான்றிதழ்களில் பான் கார்டு மிக மிக முக்கியம்.
ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், போன்ற பல்வேறு ஆவணங்கள் எல்லா இடங்களிலும் இப்பொழுது கேட்கப்படுகிறது.
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, கல்லூரியில் சேர்ப்பது, வேலையில் சேர்வது, வெளிநாடுகளுக்கு செல்வது, அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை பெறுவதற்கு.
வருமான வரித்துறை பூர்த்தி செய்வதற்கு, நிலம் வாங்குவதற்கு, விற்பனை செய்வதற்கு, வாகனம் வாங்குவதற்கு, என அனைத்திற்கும் பான் கார்டு மிக மிக முக்கியம்.
பான் கார்டு விதிமுறை 1
முன்பெல்லாம் நாம் அடிக்கடி அதாவது எப்போது வேண்டும் என்றாலும் பான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ஆனால் தற்போது அதற்கு ஒரு அதிரடி விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது பான் கார்டு வேண்டும் என்றால் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் அதேபோல் விண்ணப்பித்து விட உடனே பலன் கிடைத்துவிடாது.
குறிப்பிட்ட காலத்திற்குள் தான் பான் கார்டு வழங்கப்படும் இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு மேல் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.
பான் கார்டு விதிமுறை 2
இந்த பான் கார்டை யாரெல்லாம் முக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் கட்டாயம் நிறுவன இயக்குனர், பங்குதாரர், நிர்வாக இயக்குனர்.
நிறுவன தலைமை செயல் அதிகாரி, முதன்மை அதிகாரி, நிர்வாகிகள், என்று பொறுப்பில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த பான் கார்டை உடன் வைத்திருக்க வேண்டும்.
பான் கார்டு விதிமுறை 3
மேலும் மொத்த விற்பனை, மொத்த வருமானம், ஆகிய இடங்களில் நிதி ஆண்டில் 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தாலும் கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
PM-Kisan 12 வது தவணை பணம் வரும் தேதி அறிவிப்பு..!
பான் கார்டு விதிமுறை 4
கணவரை பிரிந்து வாழ்கின்றவர்கள் பிள்ளைகள் பான் கார்டில் தங்களது தந்தையின் பெயரை குறிப்பிட தேவையில்லை அவர்களது அன்னையின் பெயரைக் குறிப்பிடலாம் என்றும் அறிவித்துள்ளார்கள்.
How to download masked Aadhar in tamil
பான் கார்டு விதிமுறை 5
வங்கிக் கணக்கு தொடங்க வருமானவரித்துறை பூர்த்தி செய்யவும் கட்டாயம் பான் கார்டு அவசியம் தேவை என்று அறிவித்துள்ளார்கள்.