
What are the reason cancer cells developing body
எச்சரிக்கை உங்கள் உடம்பில் இந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் புற்றுநோய் செல்கள் வளர ஆரம்பித்துவிடும்..!
உலக அளவில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய் முந்தைய காலத்தில் இதற்கு சரியான மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் இல்லை.
ஆனால் இப்பொழுது மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றத்தினால் புற்றுநோய்க்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் இருக்கிறது மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
எனவே ஆரம்பத்தில் ஒருவர் புற்றுநோய் கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம்.
புற்றுநோய் என்பது உடலில் செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பிரிந்து சுற்றி உள்ள திசுக்களில் பரவும் போது ஏற்படும் ஒரு நோய் எனலாம்.
புற்றுநோயானது உடம்பில் இருக்கக்கூடிய (டிஎன்ஏ-வில்) ஏற்படும் அதிதீவிர மாற்றங்களினால் ஏற்படுகிறது.
ஒருவருக்கு புற்றுநோய் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் அதில் முக்கிய காரணங்கள் பரம்பரை மற்றும் சுற்றுச்சூழல் அல்லது நடத்தை தூண்டுதல் ஏற்படுகிறது, சிலருக்கு புற்று நோய் மரபியல் காரணமாகவும் ஏற்படலாம்.
இதைத் தவிர குறிப்பிட்ட சில ஊட்டச்சத்து குறைபாடுகளினால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்பொழுது எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வைட்டமின் ஈ ஊட்டச்சத்து
இன்றைய காலகட்டங்களில் உடலில் வைட்டமின் அல்லது கனிமச்சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பது நோய்கள் உடலில் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அதேபோல் உடலில் வைட்டமின் ஈ குறைபாட்டால் ஏற்படும் பல ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்று.
வைட்டமின் ஈ குறைபாட்டின் அறிகுறிகள்
கண்களில் படபடப்பு
சரியான செரிமானம் இல்லாமை
தலைமுடி தொடர்ந்து உதிர்வது
தொடர்ச்சியாக உடல் பலவீனம்
தசை பலவீனம்
பார்வை குறைபாடு
வைட்டமின் ஈ குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்
வைட்டமின் ஈ குறைபாடு புற்றுநோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.
இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து இரத்த சோகையின் அபாயத்தை அதிகரித்துவிடுகிறது.
உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுகிறது.
தலைமுடி உதிர்தல், முடியின் அடர்த்தி குறைதல், மற்றும் வழுக்கை ஏற்படுதல், போன்றவை வைட்டமின் ஈ குறைபாட்டால் வரக்கூடியது.
சரும வறட்சி, சருமம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.
வைட்டமின் ஈ குறைபாடு உடலை பலவீனமாக்கி விடும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலும் குறைத்து விடும்.
தேவையான ஊட்டச்சத்து என்ன
வைட்டமின் ஈ குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு பாதாம், வேர்கடலை, பசலைக்கீரை, சோயா பீன்ஸ், சூரியகாந்தி விதைகள், வால்நட்ஸ், சாப்பிட வேண்டும் இதனால் விரைவில் வைட்டமின் ஈ குறைபாடு உடலில் சரி செய்யப்படும்.
மக்னீசியம் ஊட்டச்சத்து
மனித உடலுக்கு தேவையான நான்காவது மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து தான் மக்னீசியம், இது உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
இந்தச் சத்து உடலின் எலும்புகள் 60 சதவீதமும் மீதி எஞ்சியவை தசைகள் மென்மையான திசுக்கள் மற்றும் ரத்தம் போன்றவற்றில் இருக்கிறது.
சொல்லப்போனால் இது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கக்கூடிய ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து.
புற்றுநோய் நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து
ஜேர்ணல் செல் நாளிதழ் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின்படி டி செல்கள் சரியாக செயல்படுவதற்கு போதுமான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு தற்போது புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
இந்த சிகிச்சையில் புற்றுநோய் செல்களை கொள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து சைட்டோடாக்ஸிக் டி செல்களைப் பயன்படுத்தப்படுகிறது.
அதுவே கட்டிகளில் மக்னீசியம் சரிவை அதிகரித்து புற்றுநோய் செல்களுக்கு எதிராக டீ செல்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தப்படுகிறது என்பது மருத்துவ நிபுணர்களால் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்
மக்னீசியம் குறைபாடு புற்றுநோய்களுக்கு ஆபத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல் நாள்பட்ட வயிற்றுப்போக்கு, சர்க்கரை நோய், தைராய்டு குறைபாட்டை, ஏற்படுத்திவிடும் உடலில்.
திருக்கை மீனின் ஆரோக்கிய நன்மைகள்
ஒவ்வொரு நபரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகளான குமட்டல், வாந்தி, பசியின்மை, உடல் பலவீனம், போன்றவை, இந்த சத்து குறைபாடு தீவிரமான ஒரு பாதிப்பை உடலில் ஏற்படுத்தி விடும்.
Signs that the kidneys are not healthy in tamil
மக்னீசியம் அதிகம் நிறைந்த உணவுகள்
மக்னீசியம் குறைபாட்டைப் போக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்யானது பாதாம், பசலைக்கீரை, சோயா பீன்ஸ், உருளைகிழங்கு, கைக்குத்தல் அரிசி, முந்திரி, வெண்டைக்காய், தர்பூசணி விதைகள், துளசி விதைகள், போன்றவை.