
what are the sugar wound treatment in tamil
சர்க்கரை நோயாளிகள் புண் குணமாகும் மருந்துகள்..!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் புண்களை அவ்வளவு எளிதாக குணப்படுத்த முடியாது என்ற நிலை இன்றும் இருக்கிறது.
அதிலும் குழிப்புண் என்றால் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நிலைமை மேலும் பரிதாபம்.
என்னதான் மருத்துவம் வளர்ந்து இருந்தாலும் சில நோய்களுக்கு சிகிச்சை பலனளிப்பதில்லை சில நேரங்களில்.
ஆனால் நமது பாரம்பரிய வைத்தியம் சில நோய்களுக்கு கை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்த பாட்டி வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஏன் புண் ஏற்படுகிறது
பொதுவாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண் எளிதில் குணமாகாது அதற்கு என்ன காரணம் என்றால்.
சர்க்கரை நோய் பாதிப்பின் காரணமாக கால்கள் மரத்துப்போகும், மேலும் நரம்புகள் பாதிப்படைவதால்,அவற்றின் செயல் திறன் குறைந்து கால்களில் உணர்வு குறைந்து விடும்.
ஆரம்ப கட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் இதை உணர முடியாது ஆனாலும் காலப்போக்கில் கால்கள் விரைத்து போன்ற உணர்வு தோன்றும் இன்னும் சொல்லப்போனால் ஏதோ மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
கால்களில் மாட்டிய செருப்பு கழன்றால் கூடத் தெரியாது, இப்படிப்பட்ட நிலையில்தான் கால் முள் அல்லது ஆணி குத்தினால் கூட, அதை உணர முடியாது, காரணம் கால்கள் மரத்துப் போகும் போது காயம் ஏற்பட்டால் வலி தெரியாது.
அது உணரப்படாத பட்சத்தில் காயம் பட்ட இடத்தில் மேலும் அழுத்தி அழுத்தி நடப்பதால் தான் புண் மேலும் அதிகரித்துக் கொண்டே போகும்.
அதேபோல் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரத்த குழாய்கள் சுருங்குவதால் காலிலுள்ள திசுக்களுக்கு போதிய ரத்தம் கிடைக்காமல் போகும்.
அப்போது காயமோ ஏற்பட்டால் போதிய ரத்தம் கிடைக்காமலும், புண் குணமாவதற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல், இதுபோன்ற சூழ்நிலை நிகழ்ந்துவிடும்.
இதுதவிர புண்களில் கிருமி தொற்று ஏற்படவும், கிருமி பெருகவும் அதிக வாய்ப்புகள் உள்ளது, எனவே ரத்த சர்க்கரையின் அளவு எப்பொழுதும் சரியான அளவில் பார்த்துக் கொள்வதோடு புண்கள் ஏற்படாமல் இருப்பது மிக மிக அவசியம்.
புண் குணமாவதற்கான நாட்டு மருந்துகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் குணமாவதற்கு ஆவாரம் பூ, இலை மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது.
அதாவது நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ஆவாரம் பூ, இலை பொடியை வாங்கி கொள்ளுங்கள்.
அவற்றை ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் ஆவாரம் இலையின் பொடி சேர்த்து அடுப்பில் நன்றாக சூடு படுத்தவும்.
அதற்கு பின்பு அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைக்கவேண்டும், பின் இந்த கலவையை ஒரு துணியில் வைத்து நன்றாக மடித்து பாதிக்கப்பட்ட இடத்தில்.
வைத்து இறுக்கமாக கட்டி விட வேண்டும், அதற்கு பின்பு ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும், இவ்வாறு தினமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் புண் விரைவில் ஆறிவிடும்.
புண் குணமாக மருந்துகள்
சர்க்கரை நோய் புண்கள் குணமாக இயற்கை மருத்துவம் நீர்முள்ளிச் செடியின் இலை மற்றும் விதையினை பறித்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் இவற்றை ஒரு துணியில் வைத்து நன்றாக மடித்து கொள்ளவும்.
அம்மை தழும்பு மறைய இயற்கை வைத்தியம் என்ன..!
புண்களால் பாதிக்கப்பட்ட இடத்தை நன்கு சுடு தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும், அதன் பிறகு மடித்து வைத்துள்ள காட்டன் துணியை புண்களின் மீது வைத்து நன்றாக கட்டவும்.
Kodanadu murder and robbery case investigation
பின் ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும், இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோய் விரைவில் குணமாகிவிடும்.