
What are the symptoms and cure methods of chest cold
நெஞ்சு சளி அறிகுறிகள் மற்றும் அதனை குணப்படுத்தும் எளிய வழிமுறைகள்..!
பொதுவாக நமது உடல் சூட்டை சமாளிக்கவும், தேவையற்ற கழிவு மற்றும் நச்சுப் பொருட்களை தடுக்கவும், வெளியேற்றவும், உடல் தனது பாதுகாப்பு தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே நீர் என்னும் மூலக்த் திரட்சியாகும்.
இது சளி இயல்பாக முறையாக வெளியேறும் போது உடலில் எந்த ஒரு பிரச்சினைகளையும் ஏற்படுத்தாது.
ஆனால் நமது அறியாமையால் பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறை மாற்றங்களும் உடல் இயற்கைக்கு எதிராககும்போது இந்த சளி அளவு அதிகமாவதாலும் இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு போகிறது.
இதனால் உடல் அதை வெளியேற்ற கடுமையான பல்வேறு முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது, கட்டிபட்டுபோன சளியை வெளியேற்றும் முயற்சியின் விளைவே.
இருமல், தும்மல், ஈளை, இளைப்பு, என பல்வேறு வகையான உடல் உபாதைகள் தோன்றும்.
சரி இந்த கட்டுரையில் நெஞ்சு சளி அறிகுறிகள் மற்றும் அதனை குணப்படுத்தும் எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
நெஞ்சு சளி அறிகுறிகள் என்ன
பொதுவாக நெஞ்சு சளி அதிகமானால் அதிக சளி, வறட்டு இரும்பல், இருமல், நெஞ்சு எரிச்சல், தும்மல், தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு, ஈளை நோய், இளைப்பு, காய்ச்சல் வருவது, போல் உணர்வு.
தலைபாரம், தலைவலி, மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், உடல் சோர்வு, என்று பல வகையான அறிகுறிகள் தோன்றும்.
சரி இந்த நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம் என்ன உள்ளது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
நெஞ்சு சளி குணமாக இயற்கை வைத்தியம்
நெஞ்சு சளி குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை கொஞ்சம் கொஞ்சமாக தான் இந்த நோயை குணப்படுத்த முடியும்.
இதற்கு சிறந்த இயற்கை வைத்தியம் எலுமிச்சை சாறினை இதமான சூட்டில் உள்ள நீரில் கலந்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி கொஞ்சம் கொஞ்சமாக குணமாகிவிடும்.
மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூளை பாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சுங்கள், இந்த பாலை மிதமான சூட்டில் குடிக்க வேண்டும், இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் சளி பிரச்சனை முற்றிலும் குணமடையும்.
இஞ்சி சாறு, துளசிச் சா,று தேன், மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் போன்றவை முற்றிலும் குணமாகிவிடும்.
தொண்டை கரகரப்புக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி, ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
மிளகையும், வெல்லத்தையும், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் நீர் கோர்த்துக் கொள்வது ஆகியவை குணமாகும்.
புதினா இலை, மிளகு, இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சளி இருமல், நுரையீரல் கோளாறுகள், முற்றிலும் நீங்கும்.
நெஞ்சு சளி விரைவாக குணமடைய, தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து, நன்கு சுடவைத்து, ஆர வைத்து நெஞ்சில் தடவினால் விரைவில் குணமாகிவிடும்.
நெல்லிக்காய் சாற்றில், மிளகு தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி மூக்கடைப்பு பிரச்சனை தீர்ந்து விடும்.
Agni Natchathirathil enna seiyalam 2022
பச்சிளம் குழந்தைகளுக்கு தூதுவளை இலை சாற்றினை சூடுபடுத்தி குடித்து வந்தால், சளி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
ஒரு நபருக்கு சளி பிடித்தால் குறைந்தது 15 நாட்களுக்கு குணமாகாது.