
What are the symptoms of diabetes in tamil
உடம்பில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன..!
சர்க்கரை நோய் பெரும்பாலான மக்களை அவதிப்படும் கொடிய நோய்களில் ஒன்றாக இருக்கிறது, சர்க்கரை நோய் என்பது கணையத்தில் இன்சுலின் குறைபாடு ஏற்படுவதே.
இந்த நோய் உடலில் வருவதற்கான முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள், அதேபோல் பரம்பரை பரம்பரையாக என்று சொல்லலாம்.
அதாவது உங்களுடைய தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, ரத்த, வழி உறவினர்களுக்கு,சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த சர்க்கரை வியாதி உலகில் குறைந்தது 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நான்கில் ஒருவருக்கு சர்க்கரை உள்ளதாகவும் இந்தியாவில் அதிகம்.
அதாவது மூன்றில் ஒரு நபருக்கு இந்த சர்க்கரைநோய் உறுதியாக இருக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.
இந்த நீரிழிவு நோய் வயதானவர்களை அதிகம் பாதிக்கும் என்ற நிலைமாறி, சிறிய குழந்தைகளுக்கும் இப்போதெல்லாம் சர்க்கரை நோய் ஏற்பட்டு விடுகிறது.
இருந்தாலும் தனக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்று பல நபர்களுக்கு புரிவதில்லை, தெரிவதில்லை, ஆறாத புண்களுக்காக மருத்துவரை அணுகும்போது தான் தனக்கு சர்க்கரை நோய் உள்ளதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த சர்க்கரை நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை முறையாக மேற்கொண்டால் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்து விடலாம்.
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் மிக முக்கியமாக மற்றும் கொடுமையான நோய் என்றால் அது சர்க்கரை நோய், பெரும்பாலான மக்கள் இந்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
குறிப்பாக வயதான பிறகு இந்த நோயினால் ஏற்படும் தாக்கம் என்பது அவ்வளவு கொடுமையாக இருக்கும், உடல் எப்பொழுதும் பல்வேறு வகையான சிரமங்களை சந்திக்கும்.
சர்க்கரை நோய் உடலில் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆறாத புண்கள்
சர்க்கரை நோய் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவரின் உடலில் ஏற்படும் புண்கள் அவ்வளவு எளிதாக விரைவில் ஆறாது.
புண்கள் ஆறுவதற்கு குறிப்பிட்ட சில மாதங்கல் எடுத்துக்கொள்ளும் இது சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறியாக இருக்கிறது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
ஒருவருக்கு அதிக அளவு ரத்தத்தில் சர்க்கரை இருந்தால் அந்த நபர் அடிக்கடி சிறுநீர் கழிப்பார், இதனை வைத்து அந்த நபருக்கு சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
தாகம் மற்றும் உலர்ந்த வாய்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பதால், இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும், இருந்தால் நாக்கு வறட்சியாகவும் மற்றும் தாகம் அடிக்கடி ஏற்படும்.
பிறப்புறுப்பில் கட்டி உருவாகுதல்
குறிப்பாக ஆண்களுக்கு தங்களுடைய பிறப்புறுப்பில் வரும் சிறு கட்டிகள் அல்லது புண்கள், அரிப்பு மற்றும் பிறப்பு உறுப்பு விரைப்புத் தன்மை குறைதல், போன்றவை சர்க்கரை நோய் உடலில் இருப்பதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கிறது.
மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2022..!
பசி
ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர் சாப்பிட்ட பிறகும் தொடர்ச்சியாக பசி எடுத்துக்கொண்டே இருக்கும், இவ்வாறு தொடர்ச்சியாக பசி ஏற்பட்டால், அந்த நபருக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது.
How to make samosa recipe in tamil
பாதங்களில் வலி
ஒருவருக்கு பாதங்களில் கூச்சம் வலி மற்றும் உணர்வில்லாத தன்மை கொண்டதாக இருந்தால் அந்த நபருக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.