
What are the symptoms of HIV AIDS in Tamil
ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு நோய் பரவிக்கொண்டிருக்கிறது அதற்கு பல மருந்துகளும் மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டாலும்.
ஆனால் ஒரு சில கொடிய நோய்களுக்கு மட்டும் இன்னும் மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
அந்த வகையில் மிகவும் கொடிய நோயான எய்ட்ஸ் பற்றி தான் இன்றைய கட்டுரையில் முழுமையாக பார்க்க போகிறோம் இதற்கு என்ன காரணம்.
அதன் அறிகுறிகள் மற்றும் அதை தடுப்பதற்கு வழிமுறைகள் என்ன அதுமட்டுமில்லாமல் இந்த நோய் தாக்கினால்.
நீண்ட நாட்கள் உயிருடன் வாழ்வதற்கு என்ன மாதிரியான மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும், போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
எச்ஐவி நோயின் அறிகுறிகள்
எச்ஐவி என்பது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்க தொடங்கும்,ஆரம்ப நிலையாகும் HIV என்பதன் விரிவாக்கம் HUMAN IMMUNE DEFICIENCY VIRUS ஆகும்.
எயிட்ஸ் என்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை முழுவதும் குறைத்து ஒரு நபரை உயிரிழப்பு நிலைக்கு கொண்டு செல்லும் AIDS என்பதன் Acute Immune Deficiency Dyndrome விரிவாக்கம்.
இந்த நோய் எப்படி உருவாகிறது
எயிட்ஸ் உருவாவதற்கான முக்கிய காரணம் எச்ஐவி உள்ள மனிதர்களுடன் உடலுறவு கொள்வது, பாதுகாப்பு இல்லாத வாய்வழி உடலுறவு, தகாத உறவு,இவையெல்லாம் எய்ட்ஸ் உருவாவதற்கான காரணமாக இருக்கிறது.
இவை இல்லாமல் தொற்று உள்ள கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து குழந்தைக்கு பரவுவது,எய்ட்ஸ் உள்ள நபரின் ரத்தத்தை பெற்றுக் கொள்வது, அவர் உபயோகித்த ஊசி பயன்படுத்துவது, ஓரின சேர்க்கை மூலம் எய்ட்ஸ் ஒருவருக்கொருவர் பரவுகிறது.
எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் என்ன
எய்ட்ஸ் உள்ளவர்களின் முக்கிய அறிகுறியே அவர்களின் உடலில் ஏற்படும் கடுமையான மாற்றம் தான்.
முதலில் அவர்களது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும் பல நோய்களால் பாதிக்கப்பட்டு கடைசி நிலையில் எய்ட்ஸ் ஆகும்.
வழக்கமான உடல் எடையைவிட சற்று அதிகமாக உடல் எடை குறைய தொடங்கும், மூச்சுவிட முடியாத அளவிற்கு தொடர்ச்சியாக இருமல் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.
எய்ட்ஸ் வருவதற்கான அறிகுறிகள்
வாந்தி மற்றும் புற்றுநோய் போன்றவை எய்ட்ஸ் நோயின் அறிகுறியாகும்.
எச்ஐவி உள்ளவர்களின் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால், நகத்தில் நிறம் மாறுவது மற்றும் நகம் சொத்தையாக மாறுவது இருப்பது எச்ஐவி நோயின் அறிகுறியாகும்.
உடலில் ஆற்றல் குறைந்து காணப்படும் அதாவது எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் சோர்வாக மற்றும் மந்தமாக காணப்படுவது எய்ட்ஸ் நோயின் அறிகுறியாகும்.
எப்பொழுதும் உடலில் இருக்கும் வலியே தவிர உடம்பில் தசைவலி, மூட்டுவலி, மற்றும் தலைவலி, அதிகரித்து காணப்பட்டால் அது எய்ட்ஸ் நோயின் அறிகுறியாகும்.
உடலில் இரத்தத்தின் அளவு குறைந்து தோல் சுருங்குவது சொரசொரப்பாக மாறுவது அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவது எய்ட்ஸ் நோயின் அறிகுறியாகும்.
எச்ஐவி / எய்ட்ஸ் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன
பாதுகாப்பான உடலுறவு ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு ரத்தத்தை பெறும்போது அந்த ரத்தத்தை முழுமையாக சோதனை செய்து பார்க்க வேண்டும் மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை பயன்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க முடியும்.
தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதை தகுந்த சிகிச்சை மூலம் தடுக்க முடியும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும் 8 அதிசய மூலிகைகள் என்ன..!
எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி தடுப்பதற்கான உலக அளவில் எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
Cholesterol control food list in tamil
இந்த வைரஸ் உடம்பில் நுழைந்து குறைந்தபட்சம் 2 அல்லது 3 மாதங்கள் கழித்து பின்னரே இதனுடைய அறிகுறிகள் மெதுவாக தென்பட ஆரம்பிக்கும்.