
what are the tomato fever symptoms in tamil
தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் சிகிச்சை முறை என்ன தமிழகத்தில் அச்சம் வேண்டாம்..!
கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனும் வைரஸ் புதிதாக பரவி வருகிறது, தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் என்ன தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..!
கொரோனா வைரஸ் 4வது அலைக்கு மத்தியில் தற்போது குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கேரளாவில் தற்போது இதுவரை 82 நபர்களுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக இந்த நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது தற்போது வரை இந்த வைரஸ் பரவல் முழுமையாக தடுக்கப்பட முடியவில்லை.
தடுப்பூசி பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பாதிப்பை இப்போதுதான் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்கள்.
இதற்கிடையில் கேரளாவில் சில மாவட்டங்களில் தக்காளி வைரஸ் என்றும் அழைக்கப்படும், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
கேரளாவில் சில மாவட்டங்களில் தக்காளி வைரஸ் என்றழைக்கப்படும், வைரஸ் பாதிப்பு குழந்தைகளை குறிவைத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறார்கள்.
அதேநேரம் அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்த தக்காளி காய்ச்சல் பரவ கூடாது என்று தமிழ்நாடு அரசும் கடுமையான முன்னெச்சரிக்கை ஏற்படுத்தி வருகிறது.
அது மட்டுமில்லாமல் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது தமிழக அரசு.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் வைரஸ் பற்றி யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?
தக்காளி காய்ச்சல் என்பது மிகவும் அரிதாக அறியப்படாத ஒரு காய்ச்சலாகும்.
இருப்பினும் இந்த நோய் வைரஸ் காய்ச்சலால் ,சிக்கன்குனியா அல்லது டெங்கு காய்ச்சலால் வந்ததா என்பது தெளிவாக இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்கள்.
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் கிட்டத்தட்ட தக்காளி அளவு சொறி வெளியேறும் தோலில் எரியும் உணர்வு ஏற்படலாம்.
உடலில் நீர் இழப்பு அறிகுறிகள் நாக்கில் உலர்ந்த வாயுடன் சேர்ந்து தோன்றும்.
சில நோயாளிகள் தங்கள் உடலில் உருவான தக்காளி போன்ற சொறி முதலில் புழுக்கள் வெளியேறி கொதிப்பை உருவாக்கியது என்று தெரிவித்துள்ளார்கள்.
இதன் சில அறிகுறிகள் என்ன
முழங்கால்களில் நிறமாற்றம்
சோர்வு தக்காளி
வடிவில் சொறி
கைகளில் நிறமாற்றம்
மூட்டுகளில் வீக்கம்
உடலில் வலி
அதிக காய்ச்சல்
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் என்ன
குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக திரவங்களை உட்கொள்ளவேண்டும்.
உங்கள் கல்லீரல் நலமாக இருக்கிறதா?
குழந்தைகளை தொற்றுநோய் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
what are the cancer symptoms of men in tamil
நோயாளிக்கு அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் தூய்மை பராமரிப்பு கட்டாயம் தேவை .
பல சமயங்களில் காய்ச்சல் ஒரு வாரம் வரை நீடிக்கும் என்பதால் சரியான ஓய்வு உறக்கம் உணவு தேவை.