
what are the treatment of numbness in tamil
கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
இன்று நாம் நம்மளுடைய இணையதள பதிவில் கை கால் மரத்துப் போவது ஏன் அதற்கான காரணங்கள் மற்றும் இந்த கை கால் மரத்துப் போவதை சரிசெய்ய பாட்டி வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து இருக்கும் போது கை கால் மரத்துப் போவது என்பது ஒரு சாதாரண விஷயம் தான் இருந்தாலும் இந்த மரத்துப்போகும் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக்கிறது.
மரத்துப் போவது என்பது நோயல்ல என்றாலும் நோய் ஏற்படுவதற்கான ஒரு அறிகுறியாக இருக்கிறது.
இந்த பிரச்சினையை நாம் சாதாரணமாக நினைக்காமல் வீட்டிலிருந்தபடி அல்லது மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று இதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அதற்கான பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கை கால் மரத்துப் போவதால் காரணங்கள் பற்றி முழுமையான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
அடிக்கடி கை கால் மரத்துப் போவதற்கான காரணங்கள்
உடலிலுள்ள உறுப்புகள் மரத்துப்போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.
குறிப்பாக உங்கள் உடலில் எங்காவது மரத்துப்போவது அது நம் மூளையை முதுகு தண்டுவடத்தில் ஏதேனும் பிரச்சினை என்று அறிகுறியாகும்.
அதுவே உங்கள் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்க்கான முதல் அறிகுறி அதாவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அளவுக்கு அதிகமாக உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
அதுவே ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்ந்து இருந்தால் அது மரபணுக்களின் கோளாறு கூட இருக்கலாம்.
அதே போல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் மாத்திரையை என்று நீங்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டு இருந்தாலும் கை கால்கள் அடிக்கடி மரத்துப்போகும் பிரச்சினை ஏற்பட்டுவிடும்.
மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை கால்கள் மரத்துப் போகும் பிரச்சினைகள் ஏற்படும்.
உடல் எடை அதிகரித்து உடலில் அதிக அளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த மரத்துப்போகும் பிரச்சினையை ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை முறையாக செய்தால் இந்த மரத்துப்போகும் பிரச்சனையை எளிதில் சரி செய்துவிட முடியும்.
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஒரு அறிகுறி
சிலருக்கு தலை ஒருபக்கம் மட்டுமே மரத்துப் போய்விடும் அது பக்கவாதத்துக்கான அறிகுறிகள் எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்.
கை கால்கள் மரத்துப் போதல் சரியாக குறிப்புகள்
இப்பொழுது அனைவரும் சந்திக்கின்ற முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் கை கால்கள் மரத்துப் போதல்.
இந்த பிரச்சினையை எளிமையான முறையில் நாம் வீட்டிலிருந்தபடி சரிசெய்துவிட முடியும், இதற்கு வேப்ப எண்ணெய் மிக சிறந்த ஒன்றாக விளங்குகிறது.
உங்களுக்கு பரம்பரை நோய் வரக் கூடாதா
50 மில்லி வேப்ப எண்ணெயில் இரண்டு அல்லது மூன்று கற்பூரத்தை பொடி செய்து கலந்து இரவு முழுவதும் ஊறவைக்கவும், பின் மறுநாள் காலை அவற்றை எடுத்து கை கால்களில் மரத்துப் போகும் இடங்களில் தடவி.
Types of foods that affect masculinity in tamil
சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும், இந்த முறையை தொடர்ந்து செய்து வர இந்த கை கால் மரத்துப்போதல் பிரச்சனை முற்றிலும் சரியாகிவிடும்.