
what are the worst foods list in shop in tamil
நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் இந்த வார்த்தை இருந்தால் அதை தெரியாமல் கூட வாங்கி விடாதீர்கள்..!
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், ஒருவர் தங்கள் உடலுக்கு செய்யக்கூடிய மிகச்சிறந்த சரியான செயல் என்னவென்றால் உடலுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குவதுதான்.
சரியாக சாப்பிடுவது, தவறான உணவுகளை தவிர்ப்பது வாழ்க்கையில் மிக முக்கிய அங்கமாக அமைகிறது.
நீங்கள் கடைகளில் வாங்கும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை பெரும்பாலும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடுவீர்கள் அதில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது.
அது உங்களுக்கு ஆரோக்கியமானதா, குறைந்தபட்சம் அதன் காலாவதி தேதி என்ன என்பதைக்கூட சரியாக பார்க்காமல் வாங்கி வாங்கிவிடுவீர்கள்.
அதில் சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தால், அந்த பொருட்களை வாங்குவதை தவிர்த்து விட வேண்டும், என்று உணவு கட்டுப்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது, அது என்ன என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்த உணவும் இல்லை உடல் அதன் சொந்த வழியில் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்க்கிருமிகளை சமாளிக்க வேண்டும்.
மற்றும் குறிப்பிட்ட பொருட்களை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை எந்த ஒரு வகையிலும் பாதிக்காது, இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.
உங்களுக்கு அரவணைப்பை வழங்கும், ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற எதுவும் உணவும் இல்லை.
இயற்கையான உணவு
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது எப்போதும் ஒரு சிறந்த யோசனை தான், ஆனால் இந்த சொல்லை பயன்படுத்துவதற்கு எந்த அரசாங்க ஒழுங்கு முறையும் இல்லை.
இயற்கையான உணவுகள் என்றால் பூச்சிக்கொல்லி இல்லை, சேர்க்கைகள் இல்லை, மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இயற்கையான உணவுகளை நீங்கள் வாங்குவது நல்லது ஆனால் நீங்கள் வாங்குவது, இயற்கையானதா என்பதை உறுதிப்படுத்த அந்த உணவுப் பொருட்களின் லேபிளை கவனமாக நீங்கள் படிக்கவேண்டும்.
சர்க்கரை இல்லாத உணவுகள்
உணவுகளில் சார்பிடால், சைலிட்டால் மற்றும் மன்னிடோல் போன்ற எளிய சர்க்கரைக்கு பதிலாக ஆல்கஹால் நிறைந்துள்ளது.
சர்க்கரை, ஆல்கஹால் உங்களுக்கு இனிமையான சுவையை தரும், ஆனால் இது உடலால் உறிஞ்சப்படுவது இல்லை, அதனால் இது வயிற்றுப்போக்கு வழிவகை ஏற்படும்.
கொழுப்புச் சத்து இல்லாதது
உணவுப் பொருட்கள் பேக்கேஜிங், பொதுவாக நுகர்வோரை எளிதில் ஏமாற்றும் வகையில், பல முன்னணி நிறுவனங்களால் செய்யப்படுகிறது.
இப்பொழுது இருக்கும் மக்கள் அதிக அளவில் கொழுப்பு சத்து இல்லாத உணவு மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை விரும்புகிறார்கள்.
ஒரு வேளை உணவு பொருட்களில் கொழுப்புச் சத்து அதிகமாக இருந்தால், அதனால் உடல் உபாதைகள், உடல் எடை கூடுவது, மற்றும் தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வது.
அதனால் உடல் அசிங்கமாக தோன்றுவது, போன்ற காரணத்தால் மக்கள் கொழுப்புச்சத்து இல்லாத உணவு மற்றும் நார்ச்சத்து, புரதச்சத்து, மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை மக்கள் அதிக அளவில் விரும்புகிறார்கள்.
மக்கள் எளிதில் உணவு பொருட்களை வாங்கும் வகையில் உணவு பொருட்களில், கொழுப்புச் சத்து இல்லாதது என்று முத்திரை குத்துவது, ஒரு சந்தைப்படுத்துதல் தந்திரமாக இப்பொழுது பல முன்னணி நிறுவனங்களால் பார்க்க முடிகிறது.
கொழுப்புச்சத்து விலங்கு பொருட்களில் மட்டுமே காணப்படுகிறது மற்றும் அதில் இருந்து அகற்ற முடியாது.
அனைத்து பால் பொருட்களிலும், கொழுப்புச்சத்து இருக்கும், அதேசமயம் பழங்கள், தானியங்கள் மற்றும் காய்கறிகளில் கொழுப்பு சத்துக்கள் இல்லை.
எனவே நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்களின் லேபிளை கவனமாக படிக்கவேண்டும், அதில் என்னமாதிரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
அந்த உணவுப் பொருட்களின் காலாவதி தேதி, அந்த உணவுப் பொருட்கள் எந்த மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது, என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
காளானின் அற்புத மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
அதிக அளவில் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை.
top 9 health benefits list in vasambu
நீங்கள் வாங்குவதை முற்றிலும் தவிர்த்தால், உங்களுடைய பணம் மற்றும் உங்களுடைய உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறையும்.