செய்திகள்

அந்த 20 நிமிடங்களில் என்ன நடந்தது கோரமண்டல் கொடூர விபத்திற்குwhat caused Odisha train accident

what caused Odisha train accident

what caused Odisha train accident

அந்த 20 நிமிடங்களில் என்ன நடந்தது கோரமண்டல் கொடூர விபத்திற்கு என்ன காரணம் எப்ஐஆர் பதிவு சிபிஐயிடம் இந்த வழக்கு ஏன் சென்றது..!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நம் நாட்டை அதிர வைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து இப்பொழுது காவல்துறையினர் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

நாட்டில் போக்குவரத்து துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் எடுக்கப்பட்டு வருகிறது அதுவும் குறிப்பாக பாதுகாப்பான பயணத்திற்கு தேவையான நடவடிக்கை.

தொழில்நுட்பம்,புதிய விதிகளை அமல்படுத்துதல், போன்றவை கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே இந்த நடவடிக்கையால் விமானம் மற்றும் ரயில் போன்ற விபத்து மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்பொழுது ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற இந்த ரயில் விபத்து மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து எதனால் நடைபெற்றது என்பதற்கான முழு காரணம் இன்னும் வெளிவரவில்லை ஆனால் எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இங்கு இந்த ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட் தவறு செய்யவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மொத்தம் மூன்று ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியது இதில் 270 நபர்கள் உயிரிழந்த நிலையில் மேலும் 1000க்கு மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளார்கள் இவர்களில் பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த மாபெரும் ரயில் விபத்திற்கு உலகெங்கும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ரயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் ரயில்வே துறை அல்லது மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.

இருப்பினும் இன்டர்லாக்கிங் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது இருப்பினும் விசாரணைக்குப் பின்னரே முழுமையான உண்மைகள் தெரிய வரும்.

அதாவது கோரமண்டல் ரயில் பலசோர் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது அந்த ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அது மெயின் லைனை விட்டு லூப் லைனில் சென்றுள்ளது அங்கு சரக்கு ரயில் இருந்த நிலையில் அதன் பின்புறம் கோரமண்டல் ரயில் மோதி உள்ளது.

இந்த விபத்தில் தான் மொத்தம் ஏசி பெட்டிகள் சுமார் 10 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன இந்த விபத்து சுமார் 7 மணி அளவில் நடந்துள்ளது.

அதில் சில பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது இப்போது சில நிமிடங்கள் கழித்து வந்த மற்றொரு ரயிலும் அதில் மோதியுள்ளது.

இந்த விபத்து சுமார் 7 மணி 20 மணியளவில் நடந்துள்ளது முதல் விபத்து நடந்து இருவது நிமிடங்களுக்கு பின்னர்அடுத்த விபத்து நடந்துள்ளது ஆனால் இது குறித்து ஹவுரா ரயில் ஓட்டுநருக்கு தெரிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இப்படி மூன்று ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியதே மோசமான விபத்தாக மாறி உள்ளது.

சிக்னல் அமைப்பில் இடையூறு ஏற்பட்டு அதன் காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே விபத்து குறித்து இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த ரயில் விபத்து தொடர்பாக காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது மொத்தம் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள்

ரயில் விபத்து சிறிய குறைபாடு தான் காரணமா

Top 10 electric scooters sales in india

செட்டிநாடு முட்டை கிரேவி மசாலா செய்வது எப்படி..!

ஜூன் மாத ராசிபலன் எந்த ராசிக்கு பணமழை

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் தொழிலில்

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
1