செய்திகள்

ஜாமீன் என்றால் என்ன ? எப்படி பெறுவது முழு விவரம்..! What is bail How to get full details in tamil

What is bail How to get full details in tamil

What is bail How to get full details in tamil

ஜாமீன் என்றால் என்ன ? எப்படி பெறுவது முழு விவரம்..!

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் போது அல்லது வழக்கு நிலுவையில் இருக்கும் விசாரணை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும்.

வழக்கமான ஜாமீன், முன்ஜாமீன், இடைக்கால ஜாமின் என 3 பிரிவுகள் இருக்கிறது.

குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்காலிகமாக சிறையில் இருந்து விடுவிப்பது பிணை அல்லது ஜாமீன் என்றழைக்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் காவல்துறை பாதுகாப்பு அல்லது நீதிமன்ற காவலில் இருக்கும்போது வழக்கறிஞர் உதவியுடன் 2 நபர்கள் உத்தரவாதம் அளித்து வெளியே அழைத்து வருவது ஜாமின்.

அதன் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் விசாரணையில் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும்.

வழக்கமான ஜாமீன், முன்ஜாமீன், இடைக்கால ஜாமீன், என மூன்று பிரிவுகள் இருக்கிறது.

முன்ஜாமீன் என்றால் என்ன?

ஏதாவது ஒரு பிரச்சனையில் அல்லது எதிராளிகளின் பிணையில் வெளியில் வர முடியாத வகையில் ஒரு பொய்யான வழக்கு ஒன்றை தொடர்ந்து அந்த வழக்குகளில் எப்போது வேண்டுமானாலும் அந்த நபர் கைது செய்யப்படும் சூழல் இருக்கும் பட்சத்தில்.

பாதிக்கப்பட்டவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடலாம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடரலாம், சி.ஆர்.பி.சி சட்டப்பிரிவு 432படி அவருக்கு சரியான விசாரணை நடத்தி ஜாமீன் வழங்கப்படும்.

இடைக்கால ஜாமீன் என்றால் என்ன?

இடைக்கால ஜாமீன் என்பது முன்ஜாமீன் மற்றும் வழக்கமான ஜாமீன் குறித்து முடிவு எடுப்பதற்கு நீண்ட காலம் அல்லது நீண்ட மாதம் தேவைப்படும் போது இடைக்கால ஜாமீன் நீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது.

ஜாமீன் ஏன் சில வழக்குகளில் வழங்கப்படுவதில்லை?

மிகக்கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டு அல்லது தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும், ஒரு நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போதுமான ஆதாரம் சரியாக இருந்தால் அந்த நபருக்கு நிச்சயம் ஜாமீன் வழங்கப்படுவதில்லை.

குற்றம்சாட்டப்பட்ட நபர் வெளியில் சென்றால்,வழக்கு தொடர்பான சாட்சியங்களை அழித்துவிடுவார்,வழக்கு தொடர்ந்த நபருக்கு ஆபத்தை ஏற்படுத்துவார் என்ற சூழ்நிலை இருந்தால்.

ஏற்கனவே அவர் வேறு ஏதேனும் ஒரு வழக்கில் தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெற்று இருந்தால், குறைந்தது 7 ஆண்டுகள் அதற்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இருந்தால்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களில் ஏற்கனவே அந்த நபர் தண்டிக்கப்பட்டு இருந்தால்,அது போன்ற நபருக்கு ஜாமின் வழங்கப்படுவதில்லை.

ஜாமீன் ரத்து செய்வதற்கு என்ன காரணம்?

பிணை அல்லது ஜாமீனை எந்த நேரமும் ரத்து செய்வதற்கான முழு அதிகாரம் நீதிமன்றத்திடம் மட்டுமே உள்ளது,ஜாமீன் பெற்ற நபர் வழக்கில் இருந்து விடுதலை அடைந்ததுபோல் நடந்து கொள்ளக்கூடாது.

வழக்கு தொடர்ந்த நபரை மிரட்டுவது, சாட்சியங்களை அழிப்பது போன்ற அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வழங்கப்பட்ட ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும்.

குற்றவியல் சட்டப் பிரிவு 437(5),4399(2) ஆகிய பிரிவுகளின் படி ஜாமினை ரத்து செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ய காவல்துறை நீதிமன்றம் உடனடியாக உத்தரவிட முடியும்.

கைதியை எவ்வளவு நாட்கள் சிறையில் அடைக்க முடியும்?

குற்றவியல் சட்டம் 436ஏ படி விசாரணைக் கைதி நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அதிகபட்ச தண்டனை காலம் சிறையில் கழித்து இருந்தால், நீதிமன்றம் ஜாமீனில் விடுவிக்க முடியும்.

ஒருவேளை வழக்கில் தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை போங்க மிஞ்சிய தண்டனை அனுபவிக்க நேரிடும்.

ஜாமீன் எதை பொறுத்து வழங்கப்படும்?

ஜாமினில் வெளிவர முடியாத கொடூரமான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமினில் வெளி வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்ட நபர் செய்த குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து, நீதிமன்றம் ஜாமீன் குறித்து முடிவெடுக்கும், அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கக் கூடிய அதிகாரத்தை பெற்றுள்ளது.

ஜாமீன் குறித்து எங்கு முறையிட வேண்டும்?

ஜாமின் வழங்கக்கூடிய வழக்கு என்றாலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.

ஜாமீன் வழங்கக் கூடிய வழக்காக இருந்தால், குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தை சில நேரங்களில் அணுகத் தேவையில்லை, காவல்துறையின் உயர் அதிகாரியை ஜாமீன் வழங்கலாம்.

முன்ஜாமீன் ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?

முன் ஜாமீன் வழங்கும் போது நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபரின் குற்றத்தைப் பொறுத்து சில நிபந்தனைகள் முன்ஜாமீன் கோரிய நபருக்கு வழங்கும்.

அந்த நிபந்தனைகளை முறையாக கடைபிடிக்காத போது அல்லது மீறினால் முன்ஜாமீன் ரத்து செய்யப்படும்.

புகார்தாரர் அல்லது விசாரணை தரப்பு முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையிட்டு அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால்,முன்ஜாமீனை நீதிமன்றம் உடனடியாக ரத்து செய்யும்.

ஏற்கனவே ஜாமீனில் இருந்தால் மற்றொரு ஜாமீன் எடுக்க முடியுமா?

ஏற்கனவே ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீனில் இருந்தால் நீதிமன்ற நடைமுறைகள் தொடரும் வரை வழக்கமான ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய தேவைஇல்லை.

ஒருவேளை நீதிமன்றம் முன்ஜாமீனை ரத்து செய்யாதபோது மட்டுமே இது பொருந்தும், சில வழக்குகளில் முன்ஜாமின் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to get token for magalir urimai thogai..!

Health Benefits of triphala Suranam in tamil..!

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
0