
What is criminal procedure identity New Act 2022
புயலைக் கிளப்பும் குற்றவியல் நடைமுறை அடையாளம் மசோதா தனிநபர் உரிமையை பறிக்கிறதா ஏன் இவ்வளவு கடுமையான எதிர்ப்பு..!
சிறைக்கைதிகள் குற்றவாளிகளின் கைரேகை மட்டுமின்றி உயிரியல் அடையாளங்களை அவர்களின் அனுமதியின்றி சேகரித்து வைக்கும் குற்றவியல் நடைமுறை அடையாளம் என்றால் என்ன.
அதற்கு ஏன் இவ்வளவு கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது என்பதை விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சிறைக்கைதிகள், குற்றவாளிகளின், கருவிழி, ரத்தம், உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரித்து வைக்கும் புதிய குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா மீது மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று உரையாற்றினார்.
கடந்த வாரம் திங்கட்கிழமை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்மிஸ்ராவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றவியல் நடைமுறை சட்ட மசோதாவுக்கு.
அப்போது கடுமையான எதிர்ப்புகளை எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர், இதற்கு மனித உரிமை செயலாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும், வழக்கறிஞர்களும், என பல முனைகளிலிருந்து இதற்கு எதிர்ப்புகள் தற்போது கிளம்பியுள்ளன.
மிகப்பழமையான மசோதா நீக்கப்படும்
102 ஆண்டுகள் பழமையான கைதிகள் அடையாள சட்டம் 1920-ஐ நீக்கிவிட்டு தான் தற்போது மத்திய அரசு புத்தம்புதிதாக குற்றவியல் நடைமுறை அடையாளமோ மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறது.
பழைய சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட நபர்களின் கை விரல் ரேகைகள், கால் விரல் ரேகைகளை மட்டும் பதிவு செய்து சேகரித்து வைத்துக்கொள்ள முடியும்.
அதுவும் கைது செய்யப்பட்ட அனைத்து நபரிடமும் சேகரிக்க முடியாது.
பாஜக கொண்டுவரும் புதிய சட்டம்
இதற்கு மாற்றாக தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வர முயலும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவின்படி சிபிஐ,என்ஐஏ மற்றும் காவல்துறை போன்ற விசாரணை நிறுவனங்கள்.
கைது செய்யப்படுபவர்கள் குற்றவாளிகளின் கால் விரல் மற்றும் கைவிரல் ரேகைகள் மட்டுமின்றி உடம்பில் இருக்கும் அனைத்து வகையான உயிரியல் மாதிரிகளையும் சேகரிக்க முடியும்.
புதிய சட்டம் என்ன சொல்கிறது
இந்த மசோதா இந்த ஆண்டு மக்களவை, மாநிலங்களவையில், நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றால் சட்டமாக நம் நாட்டில் இயற்றப்பட்டுவிடும்.
அதன் பிறகு குற்றவாளிகள், கைதுசெய்யப்பட்டவர்களின் ரத்தம், எச்சில், வியர்வை, தலைமுடி, விரல் நகங்கள், டிஎன்ஏ மாதிரிகளை, சேகரிக்க முடியும்.
அதுமட்டுமின்றி மருத்துவரின் உதவியுடன் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அதனுடைய தரவுகளை சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த சட்டம் என்ன சொல்கிறது
யார் யாருடைய மாதிரிகளை சேமிக்க முடியும் என்று இந்த சட்ட மசோதா தெளிவாக விளக்கிச் சொல்கிறது.
அதில் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யது வருபவர்களின் இந்த உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும்.
தற்போது நம் நாட்டில் நடைமுறையில் உள்ள 102 ஆண்டு பழமையான சட்டத்தின் கீழ், ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற, நபர்களிடம் மட்டுமே கைரேகை மற்றும் கால்ரேகை மாதிரிகளை சேகரிக்க முடியும்.
அனைத்து விவரங்களை வழங்க மறுக்கலாமா
குற்றவாளியோ சிறைத்தண்டனை பெற்ற நபரோ காவல்துறை கேட்கும் அனைத்து உயிரியல் அடையாளங்களை வழங்க மறுத்தால் அவர்களிடம் அனுமதியின்றி சேகரிக்கலாம் என இந்த சட்ட மசோதா சொல்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் இல்லாமல் வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்றவர்களிடம்.
உயிரியல் விவரங்களை மறுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று பலதரப்பட்ட வல்லுநர்களால் மறுக்கப்படுகிறது.
எத்தனை ஆண்டுகள் சேகரிக்கப்படும் விவரங்கள்
இவ்வாறு சேமிக்கப்படும் குற்றவாளிகளின் உயிரியல் மாதிரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் சேமிக்கப்படும்.
இந்த மாதிரிகள் சேமிக்கப்படும் நாளிலிருந்து அவைகள் சுமார் 75 ஆண்டுகள் அவை பாதுகாக்கப்படும் என இந்தச் சட்டம் சொல்கிறது.
Treatment for Heart palpitations and their causes
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழக்கு விசாரணைக்காக இந்த மாதிரிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதே நேரம் முதல் முறை குற்றம் செய்பவர்களிடம் சேகரிக்கப்படும் மாதிரிகள் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்தபின்னர் அழிக்கப்படும் என இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.