
what is heat wave and how to protect your body
வெப்ப அலை என்றால் என்ன இந்த ஆண்டு வெப்ப அலையால் மக்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..!
கோடைக்காலம் என்றாலே 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மக்களுக்கு விடுமுறை நாட்கள்.
அதுமட்டுமில்லாமல் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தேவையான நேரம் கிடைக்கும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கோடை காலத்தை விரும்பினார்கள்.
இப்போதெல்லாம் கோடைக்காலம் என்றாலே மக்களுக்கு சோதனை காலம் தான் கடும் குளிரையும் கூட தாங்கிக்கொள்ளும் மக்களால் கடுமையான வெயிலை ஒருபோதும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.
காரணம் உலக வெப்பமயமாதல் காரணமாக ஆண்டுதோறும் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே கணிப்புகள் தெரிவிக்கப்பட்டது.
45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இந்தியாவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தியாவின் பெரும்பகுதிகளில் சூரியன் நெருப்பு மழையாக பொழியும் போது அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே செல்வதை முற்றிலும் தவிர்ப்பதே நல்லதாக அமையும்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் டெல்லி உட்பட பல மாநிலங்களுக்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மிக அதிக வெப்பநிலை அதிகரிக்கும்
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கடுமையான வெப்பம் நாடு முழுவதும் நிலவி வருகிறது, குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில்.
அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் மே மாதத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும்.
நாடு முழுவதும் மக்கள் இந்த ஆண்டு வெப்பத்தால் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
வடமேற்கு இந்தியாவில் கடந்த வாரம் மார்ச் மாதத்தில் இருந்த இயல்பை விட அதிக வெப்பநிலை இயல்பை விட பதிவாகி வருகிறது.
வானிலை வல்லுனர்கள் இந்த ஆண்டின் இந்த நேரத்தில் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை இல்லாததால் மோசமான வெப்பநிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.
வெப்ப அலை என்றால் என்ன
அனல் காற்று என்ற வார்த்தை பல ஆண்டுகளாக பொதுவாக பேச்சுவார்த்தையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
பொதுவாக மிகவும் வெப்பமான நாட்களை குறிக்கும் இருப்பினும் இந்த வானிலை நிகழ்வு ஒரு தொழில்நுட்ப வரையறை உள்ளது.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அறிவிக்க இந்திய வானிலை ஆய்வு துறை பல அளவுகோலை அமைத்துள்ளது.
வெப்ப அலைகள் எவ்வாறு பாதிக்கும்
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெப்பநிலை உடல் செயல்பாடுகளை மட்டும் பாதிக்கும், ஆனால் துரதிருஷ்டவசமாக ஒருவேளை மரணம் நிகழ்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ஒரு நபர் அதிக வெப்பநிலையில் நீண்டகாலம் இருக்கிறார் அவரது உடலில் மோசமான விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது ரத்த நாளங்களும் திறக்கப்படுகின்றன, ரத்த அழுத்தம் குறைவதற்கு வழிவகைகளை ஏற்படுத்தி விடுகிறது.
இதனால் உடல் முழுவதும் ரத்தத்தை சுற்றுவதற்கு இதயம் கடினமாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
குறைந்த ரத்த அழுத்தத்தின் விளைவுகளால் தலை சுற்றல், தலைவலி, மற்றும் குமட்டல் மூலம் அறிகுறிகள் தென்படும்.
நீரிழப்பு ஏற்படும்
வெப்பத்தை எதிர்த்து போராட உடலில் அதிகமாக வியர்வை வழிய தொடங்கிவிடும் மேலும் உடலில் உள்ள உப்பு மற்றும் திரவங்களை இழப்பதற்கு வழிவகை செய்கிறது.
இதனால் நீர் இழப்பு ஏற்படுகிறது, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு, தசைப்பிடிப்பு, குழப்பம் மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் ரத்த அழுத்தமும் குறைந்து மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்திவிடும்.
பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்
உடலில் திரவம் மற்றும் உப்பு சமநிலையை பராமரிக்க தண்ணீர் சரியான அளவில் குடிக்க வேண்டும்.
மூளை காய்ச்சல் அறிகுறிகள் என்ன..!
அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் வெயிலில் செல்லும் போது வெள்ளை நிற ஆடைகளை அணியுங்கள், கருப்பு நிற ஆடைகளை கோடை காலத்தில் அதிகமாக அணிவதை குறைத்துக்கொள்ளுங்கள்.
Avarampoo health benefits list in tamil
முடிந்தவரை நிழலில் இருக்க முயற்சி செய்யுங்கள்,முடிந்தவரை நெடுந்தூர பயணத்தையும் கடுமையான உடற் பயிற்சியும் குறைப்பது நல்லது.