Schemes

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன அதில் எப்படி முதலீடு செய்வது..! What is mutual fund and how to investment 2023

What is mutual fund and how to investment 2023

What is mutual fund and how to investment 2023

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன அதில் எப்படி முதலீடு செய்வது..!

பொதுவாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் அதிகமான லாபம் பெறக்கூடிய நபர்களை நாம் நேரில் அல்லது டிவி மூலம் அறிந்து இருப்போம் அல்லது பார்த்திருப்போம்.

ஆனால் பங்குச்சந்தையை பற்றி அதிகம் அறியாதவர்களுக்கு அவற்றில் முதலீடு செய்வது எப்படி, அதில் லாபம் பெறுவது எப்படி, என்று சில முக்கிய தகவல்கள் தெரிவதில்லை.

இதன் காரணமாக பல நபர்கள் பங்குச் சந்தையில் அதிகமான தொகையை முதலீடு செய்வதற்கு தயங்குகிறார்கள்.

பங்குச்சந்தை பற்றி ஒன்றும் தெரியாத நபராக நீங்கள் இருந்தால், இருப்பினும் ஏதாவது ஒரு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும்.

அவற்றின் மூலம் கணிசமான லாபம் பெற வேண்டும், என்று சிந்தனையில் நீங்கள் இருந்தால், அப்படி என்றால் அதற்கு உருவானதுதான் மியூச்சுவல் ஃபண்ட்.

சரி இந்த கட்டுரையில் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன, மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி, முதலீடு செய்வது நன்மைகள் என்ன, போன்ற சில முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்  என்பது முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் அல்லது ஒரு அமைப்பிடம் முதலீட்டு தொகையை கொடுத்து.

நீங்கள் பங்குகளில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தை எங்களுக்கு பிரித்துக் கொடுங்கள் என்று சொல்வது.

அந்த அமைப்பு அப்படிப்பட்ட முதலீடுகள் குறித்து விவரம் தெரிந்த அனுபவம் உள்ள ஒரு நபரை வேலைக்கு அமர்த்தி பலரும் கொடுத்த பணத்தை முதலீடு செய்ய சொல்வார்கள்.

அவர் முதலீடு செய்வார் ஆண்டு இறுதியில் லாபம், நஷ்டம், கணக்கு பார்த்து லாபத்தை பிரித்துக் கொடுப்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முறை.

இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்ன?

மிச்சர் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம் Expense Ratio, இது எவ்வளவு இருக்கிறது என்பதை முதலில் நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான் நீங்கள் அந்த திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும்.

Expense Ratio என்பதை புரிந்துகொள்ளுங்கள் 0.1 சதவீதம் முதல் 3% வரை வேறுபாடுகள் இருக்கும்.

அதுவும் நீங்கள் முதலீடு செய்யும் திட்டத்தில் இந்த Expense Ratio அளவு எவ்வளவு குறைவாக இருக்கிறது, அவ்வளவுக்கு அவ்வளவு லாபம் அதிகமாக கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் சில திட்டங்கள் என்ன?

Index Fund

Solution Oriented Mutual Fund

Hybrid Mutual Fund

Equity Mutual Fund

Debt Fund

அதிக வருமானம் தரும் திட்டங்கள் என்ன?

பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அதிக அளவில் பெரும் தொகை தேவைப்படும்.

ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய அவ்வளவு பணம் தேவைப்படாது.

குறைந்த அளவு 500 ரூபாய் இருந்தால்கூட போதும் மாதம்தோறும் (SIP) மூலம் முதலீடு செய்து வருமானத்தையும் பெற முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் உங்களுடைய பணத்திற்கு அதிக ஆபத்து வேண்டாம் என்றால் குறைந்த வருமானம் போதும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு ஏற்ப முதலீட்டு திட்டங்கள் நிறைய இருக்கின்றன.

அதேபோல உங்களால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியுமோ என்றாலும் அதற்கேற்ப முதலீடு திட்டங்களும் இருக்கின்றன.

உங்களுக்கு அதிகமான லாபம் வேண்டும், அதிகமான வருமானம் வேண்டும், அதிக ரிஸ்க் எடுக்க நீங்கள் தயார் என்றாலும், அதற்கு ஏற்ப சில திட்டங்களும் இதில் இருக்கின்றன.

எனவே உங்களால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியுமோ அந்த அளவிற்கு முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகமாக நிறைந்திருக்கின்றன.

இதுமட்டுமின்றி வருமான வரி விலக்கும் பெறுவதற்கு என்று தனியாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன.

80சி பிரிவின் கீழ், ஒரு நிதி ஆண்டுக்கு, அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை இதில் வருமான வரி விலக்கு உங்களால் பெற முடியும்.

எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்?

உங்களுக்கு உடனடியாக பணம் தேவை என்றால் ஓராண்டு காலத் தேவைக்கு Short Term Fund,Liquid Fund,Income Fund,Ultra Short Term Fund.போன்றவற்றில் எளிமையாக முதலீடு செய்யலாம்.

சிறிது கால இடைவெளிக்கு பணம் தேவை என்றால்,அதாவது சுமார் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையில் தேவைக்கு Medium Term Fund, Balanced Fund, Hybrid Fund ELSS Short and Medium Term Fund,போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

நீண்ட காலத் தேவைக்கு அதாவது குறைந்தது 3ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு, Sector Funds, Equity,Diversified Mutual Fund, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது இப்போது மிக மிக எளிமையாகிவிட்டது, 5 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நேரடியாக அந்த அலுவலகத்திற்கு சென்று சில வகையான ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டியதாக இருக்கும்.

ஆனால் இப்பொழுது அப்படியால்லாம் இல்லை,அதிகபட்ச ஆவணம் தேவை இல்லாமல்.

ஒருவர் எத்தனை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வேண்டுமானாலும் எளிமையாக முதலீடு செய்யமுடியும்.

இதற்காக இணையதளத்தில் பலவகையான சிறப்பம்சங்கள் நிரம்பி உள்ளன.

அவற்றில் உங்களுக்கு பிடித்த வசதிகளை பயன்படுத்தி நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம்.

இருந்தாலும் நீங்கள் முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவராக இருந்தால் KYC செயல்முறையை பூர்த்தி செய்ய வேண்டும்.

அது ஒருமுறை மட்டுமே சரிபார்ப்பு நிறைவு செய்ய வேண்டும் அல்லது முதலீட்டு ஆலோசகரின் உதவியை நீங்கள் நாடலாம் அல்லது நீங்கள் இணைய தளத்தில் KYC சரிபார்ப்பு செய்யலாம்.

KYC என்பது மியூச்சுவல் ஃபண்ட் உலகத்திற்கு, திறவுகோல் போன்ற அது சரிபார்ப்பு செய்துவிட்டால்.

ஒவ்வொரு முதலீட்டுக்கும் KYC சரிபார்ப்பு அடுத்த முறைக்கு தேவை இல்லை.

நீங்கள் எந்த ஃபண்டுகளில் வேண்டுமானாலும், தேர்வு செய்து உங்கள் விருப்பத்திற்கேற்ப முதலீடு செய்துகொள்ளலாம்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Morning drinks to lower bad cholesterol

How to change Passport photo in tamil

How to renew your old Passport in online 2023

tn rs 1000 scheme how to get form in tamil

How Check PAN card Misuse in tamil 2023

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
1
Not Sure
0
Silly
0