Uncategorized

What is protein powder and how to use protein powder

What is protein powder and how to use protein powder

What is protein powder and how to use protein powder

புரோட்டின் பவுடர் என்றால் என்ன? யாரெல்லாம் இதை எடுத்துக்கொள்ளலாம்..!

மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து,உடலில் மிக முக்கியமான ஊட்டச்சத்து புரதச்சத்து, ஆக மொத்தம் 7 வகையான புரோட்டீன் பவுடர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இறைச்சி, முட்டை, பால், மீன், சோயா, என பல்வேறு உணவுகளில் இருந்து இயற்கையாகவே புரதச்சத்து உள்ளது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்களும் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்ளலாம்.

உணவு மூலம் சரியான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்ள முடியாத நபர்கள் புரோட்டின் பவுடர் மூலம் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

நம் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து நம் உடல் உறுப்புகள், தசைகள், எலும்புகள் உற்பத்தியாக, குணமடைய, செல்கள் வளர, புதுப்பித்துக்கொள்ள, புரதச்சத்து அவசியம் தேவைப்படுகிறது.

தினமும் தேவையான அளவு புரதச்சத்து எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும், உடல் எடை குறைப்பு மற்றும் இன்னும் பல்வேறு வகையான நன்மைகள் ஏற்படும்.

இறைச்சி, முட்டை, பால், மீன், சோயாபீன்ஸ், என பல்வேறு உணவுகளில் இயற்கையாக புரதச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

புரோட்டின் பவுடர் என்றால் என்ன

பால் முட்டை அல்லது தாவர வகைகளிலிருந்து புரதச் சத்தை மட்டும் பிரித்து எடுப்பது தான் இந்த புரோட்டின் பவுடர்.

புரோட்டின் பவுடர் வகைகள்

முட்டை புரதம் (Egg Protein)

வே புரோட்டீன் (Whey Protein)

பட்டாணி புரதம் (Pea Protein)

பழுப்பு அரிசி புரதம் (Brown Rice Protein)

தாவர புரதம் (Plant Protein)

சோயா புரதம் (Soya Protein)

பாதாம் புரதம் (Almond Protein)

கேசீன் புரதம் (Casein Protein)

சணல் புரதம் (Hemp Protein)

விலங்குகள் மூலம் 2 வகையான பால் புரோட்டின் பவுடர் தயாரிக்கப்படுகிறது.

வே புரோட்டீன் மற்றும் கேசீன் புரோட்டீன்

தாவர வகைகளின் மூலம் தயாரிக்கப்படும் புரோட்டின் பவுடர்கள்

பட்டாணி, சோயா, அரிசி, பாதாம், சணல் விதைகள் போன்றவற்றிலிருந்து புரோட்டின் பவுடர் தயாரிக்கப்படுகிறது.

பொதுவாக ஒரு ஸ்கூப்பில் 20-30 கிராம் புரோட்டின் பவுடர் இருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்றாற்போல் (உடற்பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுண, மருத்துவர்) பரிந்துரைக்கும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் தேவையான அளவு சரியான விகிதத்தில் புரோட்டின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் இதை எடுத்துக்கொள்ளலாம்

உணவு மூலம் சரியான அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஆணழகன் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் புரோட்டீன் பவுடர் மருத்துவரின் பரிந்துரை பேரில் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.

பெரும்பாலான நபர்கள் உடற்பயிற்சி செய்து தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும், புரோட்டின் பவுடர் எடுத்து கொள்ளலாம்.

DRI (Dietary Reference Intakes) அளவு படி ஒருவர் ஒரு நாளைக்கு உங்கள் உடல் எடையில் ஒரு கிலோ 0.8 கிராம் புரோட்டின் பவுடர் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால்.

10 நிமிடத்தில் பல் வலி குணமாக

சிறுநீரக பாதிப்பு, உடலில் தசைகள் வளர்ச்சி அடைவது, மற்றும் தலைசுற்றல் போன்ற பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படும்.

what are the tomato fever symptoms in tamil

எனவே புரோட்டின் பவுடர் எடுத்துக் கொள்ளும் நபர் எப்பொழுதும் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0