
What is really happening in Manipur against women
நிர்வாணமாக்கி ஊர்வலம் கூட்டு பாலியல் பலாத்காரம் உண்மையில் என்ன நடந்தது பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்கள் பரப்பரப்பு பேட்டி..!
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,அந்தப் பெண் சில தகவல்களை தெரிவித்துள்ளார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்கடங்காத வன்முறை தொடர்ந்து வருகிறது.
அங்கு குக்கி மற்றும் மைத்தேயி இன மக்கள் இடையே நிலவி வரும் கடும் மோதல் மணிப்பூர் பற்றி எரிய முக்கிய காரணமாக இருக்கிறது.
அங்கு பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எதற்காக இந்த கடுமையான மோதல்
இருப்பினும் மைத்தேயி மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்களுக்கு உரிமை பாதிக்கப்படும் என குக்கி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதன் காரணமாகவே அங்கு இரு தரப்பினருக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகிறது,இதனால் அங்கே பல வாரங்களாக இணைய சேவையும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மணிப்பூர் கலவரம் குறித்து சில பகீர் தகவல்கள் கசிந்துள்ளது ஒரு இளம் பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட புகைப்படம் மே மாதம் முதல் வாரம் பரவியது.
அங்கு அப்போதுதான் கலவரம் தொடர்ந்தது குக்கி இன ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட மைத்தேயி.
பெண்ணின் புகைப்படம் என்று கூறி இந்த படம் பரவியது அங்கே கலவரம் அடுத்த கட்டத்திற்கு செல்ல இதுவே முக்கிய காரணமாகும்.
இருப்பினும் அந்த படம் போலியான படமாகும் இதில் இருக்கும் அந்தப் பெண் டெல்லியை சேர்ந்த ஆயுசு சாஸ்திரி ஆகும் இவர் கடந்த நவம்பர் 2022ல் பெற்றோரால் கொலை செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் இவரது படத்தை பகிர்ந்த மணிப்பூர் நர்சிங் மாணவி என்றும் அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக.
போலியான தகவல்கள் பரவியது இது குக்கி இன பெண்கள் மீது மிகப் பெரிய வன்முறையை ஏற்படுத்திவிட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களில் குக்கி இன மற்றும் மைத்தேயி இன மக்களிடையே மிக மோசமான இன மோதல் ஏற்பட்டது.
இதில் மொத்தம் 150 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் இந்த இனக் கலவரத்தால் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் பெண்கள் எதிரான பாலியல் வன்முறைகள் மிக அதிகமாக நடந்தது.
உண்மையில் என்ன நடந்தது மணிப்பூரில்
மணிப்பூரில் மது போதையில் இருந்த சில இளைஞர்கள் 40 வயதான குக்கி இன பெண்ணையும் ஒரு டீன் ஏஜ் பெண்ணையும் வயலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட சிலருக்கு வெறும் 15 வயது தான் உள்ளது முன்பு சொன்னது அந்த போலியான படம் பரவிய மறுநாள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
குற்றவாளிகள் சிலர் அப்போது எங்கள் பெண்களுக்கு உங்கள் ஆண்கள் என்ன செய்தார்களோ அதையேதான் நாங்கள் திருப்பி செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே தான் இந்த கொடூரத்தை செய்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன தெரிவித்துள்ளார்கள்
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒரு பொய் செய்தி தான்.
சம்பவத்திற்கு பழி வாங்குவதாக கூறி அவர்கள் இப்படி செய்யலாம் செய்தார்கள் ஆனால் உண்மையில் சுராசந்த்பூர் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்னால் அப்போது எதையும் புரிந்து கொள்ள முடியாது.
அங்கே ஆண்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தார்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது என்று நான் நினைக்கிறேன்.
என்றும் கூறும் அவரது கைகள் இன்னும் நடுங்குகிறது அங்கே மிக மோசமான சூழல் நிலவுகிறது என்றும் பெண்கள் குறிவைத்த பலாத்காரம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இருப்பினும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அந்த பெண் புகார் எதுவும் கொடுக்கவில்லை.
பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ பொது வெளியாகி உள்ள நிலையில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.