
What is the benefit of LIC Jeevan Akshay plan
மாதம்தோறும் பென்ஷன் வேண்டுமா எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்தான் அதற்கு சரியானது அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
எல்ஐசி ஜீவன் அக்சயா திட்டம் உடனடி வருடாந்திர திட்டமாகும், இது ஒரு முறை மட்டும் பிரிமியம் செலுத்த கூடிய ஒரு திட்டமாக இருக்கிறது.
இது ஒரு சிறந்த ஓய்வு ஊதிய முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது, இது ஒற்றை பிரீமியம் கொண்ட ஒரு சிறந்த பாலிசியாக இந்த திட்டத்தின் தொடக்கத்தில் உங்களின் விருப்பத்திற்கு, ஏற்ப நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதன் மூலம் நீங்கள் உங்களது வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பான தொகையை பெற்று விட முடியும், அதோடு நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ அதற்கேற்ப மாதம்தோறும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 30 வயது இருக்க வேண்டும் அதிகபட்சம் 85 வயதாகும், அதேபோல் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் அதிக பட்சம் என்பது வரம்பு இல்லை.
அதோடு இந்த பாலிசியின் சலுகைகளை நீங்கள் மணிபேக் பெற்றுக்கொள்ளமுடியும், மொத்தத்தில் சீரான ஓய்வு ஊதியம் கிடைக்கும், இதில் பங்குச்சந்தை அபாயங்கள் முற்றிலும் இல்லை.
ஓய்வூதிய முறைகள்
உங்கள் ஓய்வூதியம் ஆனது ஒருமுறை பிரீமியம் செலுத்தி உடன் தொடங்கிவிடும், ஓய்வூதியத்தை செலுத்தும் முறையில் நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்கள் அதை சார்ந்திருக்கும் இந்த திட்டத்தில்.
உங்களால் வருடாந்திர ஓய்வூதியம், காலாண்டு, மாதம், என்று பெற்றுக்கொள்ளமுடியும் குறைந்தபட்சம் ஓய்வூதிய தொகை ஆண்டுக்கு ரூபாய் 12 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.
அதாவது மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் உங்களுக்கு தொகையாக இதில் கிடைக்கும் அதிகபட்ச வரம்பு என்பது இல்லை.
எல்ஐசியின் ஜீவன் அக்ஷயா திட்டத்தில் மற்ற பாலிசிகளை போலவே வருமான வரி சலுகைகள் இருக்கிறது.
இதில் இருக்கும் சலுகைகள் என்ன
நீங்கள் பிரீமியம் செலுத்திய பின்னர் உடனடியாக உங்களுக்கான ஓய்வு ஊதியம் தொடங்கிவிடுகிறது, இந்தத் திட்டத்தில் நீங்கள் இறந்தபிறகும்.
ஆப்ஷன் A
நீங்கள் ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்கலாம் பிறகு உங்களது துணைக்கு ஓய்வூதியம் கிடைக்கும், இந்த திட்டத்தில் ஆண்டு தொகைக்கான தேர்வானது 7 வகையானது இருக்கிறது.
வாழ்க்கை முழுவதும் ஓய்வு ஊதியம் பாலிசிதாரர் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருக்கிறார் அதுவரை ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.
BCDEல் என்ன சலுகைகள் இருக்கிறது
5 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் இருக்கிறது
10 ஆண்டுகளுக்கும் உத்தரவாதம் இருக்கிறது
15 ஆண்டுகளுக்கும் உத்தரவாதம் இருக்கிறது
20 ஆண்டுகளுக்கும் உத்தரவாதம் இருக்கிறது
மேற்கண்ட இந்த திட்டங்களில் குறிப்பிட்ட காலங்களுக்கு வருமானம் கிடைக்கும் அது பாலிசிதாரர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிடைக்கும் அதன்பிறகு முதலீட்டு தொகை கிடைக்காது.
ஆப்ஷன் F
பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு ஓய்வூதியம் கிடைத்துக்கொண்டே இருக்கும் அவர் துரதிஷ்டவசமாக உயிர் இழுத்துவிட்டால்.
இடையில் அவருடைய நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும் அல்லது செலுத்திய முழு தொகையையும் பெற்றுக் கொள்ளும் வசதி இதில் இருக்கிறது.
ஆப்ஷன் G
இதனைப் பொருத்தவரையில் வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும் அதுவும் ஆண்டுக்கு 3 சதவீத வட்டி உயர்வுடன்.
ஆப்ஷன் H
வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் பாலிசிதாரருக்கு 50% அவருடைய நாமினிக்கு 50% பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறது.
கடனா முதலீடா வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை தர வேண்டும்.
ஆப்ஷன் I
இந்த திட்டத்தில் வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் 100% நாமினிக்கு 100% ஓய்வூதியம் கிடைக்கும்.
LIC Jeevan Lakshya child plan full details
ஆப்ஷன் J
இந்த திட்டத்தில் வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் 100% நாமினிக்கு 100% ஓய்வூதியம் கிடைக்கும். வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் அதன் பிறகு கட்டிய தொகை திரும்ப கிடைக்கும்.
மேலும் இதனை பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள அருகில் உள்ள உங்களுடைய எல்ஐசி ஏஜென்ட் அணுகவும்.