Uncategorized

What is the cause of student Priya death

What is the cause of student Priya death

What is the cause of student Priya death

காலில் வழிந்த திரவம் அப்படியே இரத்தத்தில் கலந்து மாணவி பிரியா உயிரிழந்தது எப்படி முழு விவரம்..!

நிர்வாகம் தெரியாத அரசு இருந்தால் மக்கள் எப்படி கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தமிழ்நாடு.

இப்போது இருக்கும் அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை இதனால் நாள்தோறும் மக்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

17 வயதான மாணவி ஒருவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்து உள்ளார் இதற்கு யார் பொறுப்பு.

அரசாங்கம் அந்த குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்ல போகிறது, எனப் பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் மக்கள் கேட்டு வருகிறார்கள் திமுக அரசை நோக்கி.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மாணவி பிரியா 17 வயதான இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

கால்பந்து வீராங்கனையான இவர் மாணவிகளிடையே மிகவும் பிரபலம் சிறப்பாக கால்பந்து விளையாடும் நபர் என்பதால் மாணவிகளிடையே ரோல்மாடல் போல் இவர் வலம் வந்துள்ளார்.

காலில் ஏற்பட்ட வலி காரணம்

இந்த நிலையில் தான் கால்பந்து விளையாடும் போது இவரது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது அதில் தான் அவருக்கு தசைபிடிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

காலில் தசைப்பிடிப்பு இருப்பதால் இந்த பிரச்சனையை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார் சவ்வு அவருக்கு விலகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய அவருக்கு பரிந்துரை செய்துள்ளார்கள் மருத்துவர்கள்.

அதன்படி அறுவை சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிப்பு சரி செய்யப்பட்டது ஆனால் தொடர்ந்து அவருக்கு வலி இருந்துள்ளது தொடர்ந்து வலி அதிகமாக இருந்துள்ளது.

அதன் பிறகு மீண்டும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் அங்கு பரிசோதனை செய்யப்பட்டபோது கால் அழுகியது கண்டுபிடிக்கப்பட்டது.

திசுக்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது இதனால் காலை உடனே அகற்ற வேண்டும் இல்லை என்றால் மற்ற பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

காலை விட உயிர் தான் முக்கியம்

காலை விட உயிர் முக்கியம் என்பதால் அவருக்கு அவசரமாக சிகிச்சை வழங்கப்பட்டது பிரியாவின் அனுமதியோடு அவருடைய கால் அகற்றப்பட்டது.

மாணவி பிரியா இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பலியானார் அவர் மரணம் அடைந்தது எப்படி என மருத்துவத் துறை தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் அவர் பலியாகி உள்ளார் என்பது நன்கு தெரிந்துள்ளது.

கால் நீக்கப்பட்ட பின் அதில் கட்டு போட்டு உள்ளார்கள் இந்தக் கட்டை மிக மிக இறுக்கமாக மருத்துவர்கள் போட்டுள்ளார்கள்.

இந்த இறுக்கம் காரணமாக ரத்தம் உடலில் கட்டி கட்ட தொடங்கியுள்ளது.

உச்சக்கட்டத்தில் காற்று மாசு நுரையீரலை பாதுகாக்க என்ன வழிகள் இருக்கிறது..!

கட்டுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று மருத்துவர்கள் சரியாக கவனிக்காமல் இருந்ததால் இதையடுத்து காலில் இருந்த ஒரு வகை திரவம் கசியத் தொடங்கி உள்ளது.

இந்த திரவம் பின்னர் ரத்தத்தில் கலந்து சிறுநீரகம் கல்லீரல் இதயத்தை பாதிப்படையச் செய்துள்ளது.

Tamil Nadu government bans online gambling

இதனால் உடல் உள் பாகங்கள் ஒவ்வொன்றாக செயலிழந்து கடைசியாக மாணவி பிரியா உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட 2 மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0