
What is the law of partition in tamil
பாகப்பிரிவினை சட்டம் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்தியாவில் மக்களின் நலன் கருதி எல்லா பிரச்சனைகளுக்கும் சட்டங்கள் உள்ளது சட்டங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு சட்டத்தினை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்.
உங்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும், ஏனென்றால் பல முக்கிய பிரச்சினைகள் இந்த சட்டம் தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது.
நம் நாட்டின் சட்டத்தினை பற்றி உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு பணம் என்பது சேமிப்பாகும் அதுமட்டும் இல்லாமல் ஏதாவது பிரச்சினை என்றால் எளிமையாக தீர்த்து விடலாம்.
சட்டம் என்பது ஒரு சமூகத்தில் வாழும் மக்களுக்கு, ஒவ்வொருவருக்கும், நன்மதிப்பையும், சமத்துவத்தையும், கொடுப்பதற்கு, உறுதுணையாக இருப்பதுதான் சட்டத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.
அந்தவகையில் நாம் இந்த கட்டுரையில் பாகப்பிரிவினை சட்டம் என்றால் என்ன.
இந்த சட்டம் எதற்கு பயன்படுகிறது, என்னென்ன சட்டங்கள் உள்ளன, என்பதை விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாகப்பிரிவினை சட்டம் என்றால் என்ன
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகளின் முழு சம்மதத்தோடு சமமாக தந்தையின் பூர்வீக சொத்தைப் பிரித்துக் கொள்ளலாம்.
ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுகளுக்கு பூர்வீகச் சொத்தை சமமாக பிரித்துக் கொடுப்பதில் ஏதேனும் உடன்பாடு இல்லை எனில் பாகப்பிரிவினை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.
உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் நான்கு வாரிசுகள் இருக்கிறது, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பூர்வீக சொத்து பிரிக்கப்பட்டு ஒரு வாரிசுக்கு மட்டும் சொத்து கிடைக்கவில்லை.
எனில் அந்த பாகப்பிரிவினை செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.
தான பத்திரம் என்றால் என்ன
தன் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துக்களை மாற்றம் செய்வதற்கு பயன்படுவதுதான் தான பத்திரம்.
ஒருவர் தங்களுடைய பண தேவைகளுக்காக சொத்தை மாற்றம் செய்யும் பொழுது அது சொத்து விற்பனை என்று கருதப்படுகிறது.
ஆனால் தான பத்திரம் மூலம் சொத்தை மாற்றுவதன் மூலம் அது விற்பனையாக கருதப்படுவதில்லை.
அதாவது தந்தை இறந்த பிறகு சகோதரர் அந்த சொத்தை அவரின் தங்கை அல்லது அக்காவிற்கு தானமாக கொடுக்கலாம்.
ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் ஆன பிறகு சொத்தை தனது கணவனுக்கு தானமாக கொடுக்கலாம்.
சொத்துக்களை தன பத்திரம் மூலம் கொடுப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் சொத்தை உரிமம் செய்துகொள்ளலாம்.
ஆனால் இதை பதிவதற்கு கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1% அல்லது ரூ.10,000/- செலுத்தவேண்டும்.
இதுதவிர பதிவு கட்டணம் ரூபாய் 20,000/- கட்டாயம் கட்ட வேண்டும்.
பெண்ணின் சொத்துரிமை
தந்தை அல்லது தாயின் வழிவரும் பூர்வீகச் சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமை பங்கு இருக்கிறது.
ஒரு வேளை குடும்பத்தில் உள்ள அந்தப் பெண் சொத்து வேண்டாம் என தெரிவித்தால், அதனை மற்ற வாரிசுகள் பகிர்ந்து கொள்ள முடியும்.
தந்தை இறந்த பிறகு ஒரு பெண் பூர்வீக சொத்தில் உரிமை கேட்க முடியும் இந்த சட்டம் 2005ல் கொண்டு வரப்பட்டது.
25.03.1989 ஆண்டிற்கு முன்னர் திருமணம் ஆன பெண் தனது தாய் வீட்டு சொத்தில் பங்கு கேட்க முடியாது.
25.03.1989 ஆண்டிற்கு பின்னர் திருமணமான பெண் தனது தாய் வீட்டு சொத்தில் பங்கு கேட்க முடியும்.
அதேபோல் 25.03.1989 பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் அப்போது பாகப்பிரிவினை உரிமை கேட்க முடியாது.
சொத்து விற்கப்படாமல் அல்லது பாகம் பிரிக்கப்படாமல் இருந்தால் உரிமை கேட்க முடியும்.
பாகப்பிரிவினை சட்டம் உயில்
தந்தை தனிப்பட்ட முறையில் சேர்த்து வைத்த சொத்துக்களை தனது குடும்ப வாரிசு அல்லது பிற மனிதர்களுக்கு அல்லது பிடித்தவர்களுக்கு அல்லது அரசாங்கத்திற்கு எந்த விதமான பிரச்சனை இல்லாமல் தனது சொத்துக்களை எழுதி வைக்க பயன்படுவதுதான் உயில்.
உயில் எழுதவில்லை எனில் அந்த சொத்து குடும்ப வாரிசுகளுக்கு சொந்தமாகிவிடும், மேலும் பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.
மது அருந்தி இருந்தால் அல்லது சுய நினைவு இல்லாமல் எழுதப்படும் உயில் செல்லாது.
18 வயது நிரம்பாத ஒரு நபர் உயில் எழுதப்படும் போது அவருக்கு ஒரு பாதுகாப்பு இருக்க வேண்டும்.
வாரிசு சான்றிதழ் பாகப்பிரிவினை சட்டம்
தந்தை எதிர்பாராமல் இறந்து விட்டால் அப்போது வங்கியில் சேமிக்கப்படும் பணம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பணம், மியூச்சுவல் ஃபண்ட், போன்றவற்றை நாமினியிடம் ஒப்படைக்கப்படும்.
ஒருவேளை நாமினி இல்லாமல் இருந்தால் அல்லது வாரிசுகள் நாமினி மீது வழக்கு தொடர்ந்தால், அப்போது வாரிசு சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் நீதிமன்றம் வழங்கப்படும் இறங்குரிமை சான்றிதழ் மூலம் சொத்துக்கள் பிரிக்கப்படும்.
ஒரு ஆணின் முதல் மனைவி உயிருடன் இருக்கும் பொழுது 2வது திருமணம் செய்து கொண்டால், 2வது மனைவிக்கு கணவனின் சொத்தில் உரிமை கிடையாது.
ஏனென்றால் இந்து திருமண சட்டம் 2வது திருமணத்தை அங்கீகரிக்கப்படுவதில்லை ,2வது மனைவிக்கு கணவனின் பூர்வீக சொத்தில் உரிமை இல்லை, ஆனால் கணவனின் தனிப்பட்ட சொத்தில் உரிமை இருக்கிறது.
7 types of foods can affect your kidneys
கணவனின் முதல் மனைவி உயிருடன் இல்லாத போது ஒரு ஆண் 2வது திருமணம் செய்து கொண்டால், அது சட்டப்படி செல்லும் இதனால் 2வது மனைவிக்கு பூர்வீக சொத்தில் பங்கு சேரும்.