Uncategorized

what is the reason murder and robbery online Rummy

What is the reason murder and robbery online Rummy

What is the reason murder and robbery online Rummy

இணையதள ரம்மிக்கு அடிமையாவது ஏன் கொலை கொள்ளை தொடர்வதன் பின்னணி என்ன காரணங்கள்..!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் தற்கொலை, கொள்ளை, கொலை, என குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

சூதாட்டங்களுக்கு எதிரான வலுவான சட்டம் இயற்றுவதில் தமிழ்நாடு அரசு எப்போதும் உறுதியாக இருக்கிறது என்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் என்ன நடக்கிறது உண்மையில்.

ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுவதால் பல நபர்கள் ஆயிரம் ரூபாய் முதல் கோடிக்கணக்கான ரூபாய் வரை பணத்தை இழந்துவிட்டு தங்களுடைய குடும்பத்தையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இது போன்ற செய்திகள் அடிக்கடி சமூக வலைதளம், யூடூப், செய்தித்தாள், இணையதளம், போன்றவற்றில் கேள்விப்பட்டிருப்போம்.

இதற்கு ஒரு சரியான தீர்வு காண வேண்டும் அல்லது இதை முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற ஒரு வலுவான கோரிக்கை அனைத்து தரப்பு மக்களிடமும் இருக்கிறது.

ஆனால் இதற்கு ஏன் இன்னும் முழுமையான ஒரு தீர்வு எட்டப்படவில்லை, என்பதை இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

What is the reason murder and robbery online Rummy

சம்பவம் 1

சென்னை பெருங்குடி பெரியார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார், இவர் போரூரில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு தாரா என்ற மனைவியும் பத்து மற்றும் ஒரு வயதில் இரண்டு மகன்களும் இருந்தனர், கொரோனா வைரஸ் முதல் அலை காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்த மணிகண்டனுக்கு.

ஆன்லைன் ரம்மி மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக நண்பர்கள், உறவினர்கள், என அனைத்து தரப்பினரிடமும் பல ஆயிரக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி விளையாடியுள்ளார்.

அந்த வகையில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் குடும்பத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

கடன் நெருக்கடி காரணமாக இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடைந்துள்ளார் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மோதல் வலுவாக மனைவி, குழந்தைகளை, கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் விவரங்கள் வெளிவந்துள்ளன.

What is the reason murder and robbery online Rummy

சம்பவம் 2

சென்னை திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திங்கட்கிழமை அன்று நடந்த கொள்ளை சம்பவம் ரயில்வே போலீசாருக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அங்கு டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டீக்காராம் அதிகாலையில் 3 பேர் துப்பாக்கி முனையில் தன்னைக் கட்டிப்போட்டு 1.25 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டதாக தெரிவித்தார்.

திருவான்மியூரில் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முடிவில் தனது மனைவியோடு சேர்ந்து டீக்காராம் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றிய போலீசாருக்கு தெரிய வந்துள்ளது ஆன்லைன் ரம்மியில் அதிகப்படியான பணத்தை இழந்ததால் கடனை அடைப்பதற்காக இப்படி ஒரு வழியை தேர்வு செய்ததாக தெற்கு ரயில்வே டிஐஜி தெரிவித்தார்.

மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் மட்டுமில்லை கடந்த இரண்டரை வருடங்களாக ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடி கொண்ட நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

அந்தவகையில் தற்போது வரையில் 25ற்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளார் என காவல்துறை தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரம்மி மோகத்தால் கடன் வாங்கப்படுவதால் பல்வேறு பிரச்சனைகள் சிக்கிக் கொள்வதால் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்வது என்ற நிலை மாறி.

தங்கள் குடும்பத்தில் இருக்கும் நபர்களையும், கொலைசெய்வது, கொள்ளை அடிப்பது, என அடுத்த நிலைக்கு செல்வதாக காவல்துறை வட்டாரங்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருமனதாக ஒரு குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவசர சட்டம் ஒன்றை அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கொண்டு வந்தது ஆனால் ஆன்லைன் சூதாட்டத்தை.

தடை செய்வதற்கு சரியான காரணத்தை அரசால் நிரூபிக்க முடியவில்லை, என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்துவிட்டது.

இப்பொழுது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதை விட அதனை முறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவித்த நிலையில்.

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்ற குரல்கள் தற்போது தீவிரமாக தொடங்கியுள்ளன.

அனைத்துமே புரோகிராம்தான்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சைபர் தொழில்நுட்ப வல்லுநர் வழக்கறிஞருமான கார்த்திகேயன் ஆன்லைனில் உள்ள சாதாரண விளையாட்டுகளின் பணத்தை இழக்க வேண்டிய தேவை இல்லாததால் விளையாட்டை மட்டும் மக்கள் ஆடி வந்தனர்.

இதன் அடுத்த கட்டமாக ஆன்லைன் ரம்மி வந்தது இதற்காக சொந்த பணத்தை வைத்து ஆடியவர்கள் ஒரு கட்டத்தில் கடன் வாங்கி விளையாடத் தொடங்கி விடுவார்கள்.

இதனால் அவர்கள் மட்டுமல்ல அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது என்கிறார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஒரு விளையாட்டை விளையாடும் போது ஆர்வம் மட்டுமே இருக்கும் ஆனால் சூதாட்டத்தில் உங்கள் கணக்குக்கு பணம் வரும்.

அதனை உங்கள் வங்கியின் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ள முடியும் நாம் 5000 ரூபாய் முதலீடு செய்தால் பத்தாயிரம் ரூபாய் வரும்.

ஒரு கட்டம் வரையில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் அதன்பிறகும் பணத்தை எடுக்க முடியாது விளையாட்டில் நாம் செய்த தவறால்தான் பணம் போய்விட்டது.

என நினைப்போம் ஆனால் உண்மையில் அப்படி கிடையாது இது வடிவமைக்கப்பட்ட ஒரு புரோகிராம்.

நீங்கள் உங்களுடைய நண்பர்களை சேர்த்து விட்டாலும் உங்களுக்கு போனஸ் பணம் கிடைக்கும் இதில் இதுபோன்ற ஆப்ஷன் இருக்கிறது.

அதில் உரையாடும்போது மற்றவர்களையும் விளையாடுவதற்கு ஊக்குவிக்கும் இதில் எளிதாக பணம் சம்பாதித்து பணக்காரன் ஆகலாம் என சில நபர்கள் தவறாக நினைக்கிறார்கள்.

தங்களுடைய மொத்த பணத்தையும் இழந்த பிறகு எப்படியாவது மறுபடியும் அந்த பணத்தை சம்பாதித்து விடலாம் என நினைக்கும் பொழுது.

கொள்ளையடித்த பணம் போடுகிறார்கள், இது தனிநபரின் குற்றமாக இருந்தது, தற்போது நம் சமூகத்திற்கு எதிராக மிகப்பெரிய குற்றமாக மாறிவிட்டது என்கிறார் விதிமுறைகளை சரியாக படிக்காத 99 சதவீத நபர்கள்.

சில நபர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் இழப்பு ஏற்பட்டால் வழக்கு போடலாம் என நினைக்கிறார்கள் சம்பந்தப்பட்ட கம்பெனி மீது வழக்குப் போட வேண்டுமென்றால் விதிமுறைகளில் வெளிநாட்டில் உள்ள நீதிமன்றத்தின் பெயரைத்தான் தெரிவித்துள்ளார்கள்.

அங்கு நம்மால் வழக்கு தொடர முடியாது பாதிக்கிணறு தாண்டிய பிறகுதான் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டதை உணர முடியும் சேரும் பொழுது உங்களுக்கு போனஸ் பணம் கிடைக்கும்.

அது சில ஆயிரங்களை கொடுப்பார்கள் உங்களுக்கு காசு வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம் நீங்கள் தற்காலிக வெற்றியால் மூளையில் சுரக்கும் டோபோமைன் ஒரு காரணமாக உள்ளது.

இதன் காரணமாக பல நபர்கள் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

தமிழக அரசால் இதனை தடுக்க முடியுமா

சூதாட்டம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது தமிழ்நாடு அரசு அடுத்து என்ன செய்யவேண்டும்.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை செய்வதை விட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் ஆராய வேண்டும்.

சில நாடுகளில் ஆன்லைன் ரம்மி முழுவதும் தடை செய்துள்ளார்கள் சில நாடுகளில் அதற்கு ஒரு விதி முறைகளை வகுத்துள்ளார்கள் குறிப்பாக சீனாவில் இதே மக்கள் தொகை தான் உள்ளது.

அங்கே செயலியை பதிவிறக்கம் செய்ததும் காலை 6 மணிக்கு மேல் தான் செயல்பட தொடங்கும் இரவு 10 மணிக்கு மேல் அந்த செயலை செயல்படாது.

இரவு முழுவதும் விளையாட முடியாது இதன் காரணமாக ஒருவர் அந்த விளையாட்டுக்கு அடிமையாக முடியாது ஒரு நாளைக்கு 10 டாலர்கள் செலவிட முடியும்.

பணம் நேரம் ஆகியவற்றை சரியான முறையில் அதற்கு ஒதுக்கி விடுகிறார்கள் இதனை பூர்த்தி செய்யாத நிறுவனங்களை தடை செய்துவிடுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு மட்டுமே அனுமதி அதுபோன்ற ஒரு வரைமுறை இங்கே கொடுக்கப்பட வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் தடை செய்வதற்கு சரியான காரணங்கள் சொல்லவில்லை.

அரசுக்கு குறிப்பிட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது

இதை செயல்படுத்த முனைந்தாலும் தமிழ்நாடு அரசுக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்கள் மட்டுமே இருக்கிறது, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இந்த செயலியை முழுமையாக நீக்க முடியாது.

சட்டம் வந்த பிறகு மற்றவர் விளையாடுவதாக புகார் கொடுத்தால் மட்டுமே இதன் மீது நடவடிக்கை எடுக்க முடியும், தேசிய அளவில் இதற்கென தனி சட்டம் வந்தால் தான் முழுமையான தீர்வு கிடைக்கும்.

முருங்கை பிசின் மருத்துவ பயன்கள்

தெலுங்கானா, சீக்கியம், ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் தடை சட்டம் கொண்டு வந்துள்ளார்கள் ஆனால் இதனை முறைப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

What is the benefit of LIC Jeevan Akshay plan

மேலும் சைபர் சூழல் என்பது மாறிக்கொண்டே இருக்கும் புதுப்புது வடிவங்களில் அது வரும், தேசிய அளவில் உறுதியான இதற்கென தனி வரைமுறைகள் கொண்டு வரும்பொழுது தான் இதனை கட்டுப்படுத்த முடியும்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0