
What to do to cure uterine cysts in tamil
கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புகள்..!
பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இன்றைய காலகட்டத்தில் கர்ப்பப்பை நீர்க்கட்டி என்னும் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.
இதனை ஆங்கிலத்தில் (Polycystic ovarian syndrome) என அழைக்கிறார்கள் பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பப்பையில் தோன்றுவதன் மூலமாக.
இது குறிப்பாக குழந்தையின்மை பிரச்சினைக்கு பெரும் காரணமாக அமைந்துவிடுகிறது.
குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கருப்பையில் நீர்க்கட்டி பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
பெண்களுக்கு பொதுவாக கர்ப்பப்பையில் சின்ன முட்டைகள் உருவாகி அவை ஹார்மோன்களின் சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு உடைவதன் மூலம் மாதவிடாய் ஏற்படுகிறது.
முதல் மாதவிடாய் தோராயமாக 12 வயது முதல் 18 வயதிற்குள் பெண்களுக்கு ஏற்பட்டுவிடும்.
ஹார்மோன்களின் மாறுபாட்டால் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது, இந்த ஹார்மோன் சுழற்சியின் காரணமாக கர்ப்பப்பை புறணிகள் வலுவாக தொடங்குகிறது.
இந்த கர்ப்பப்பை புறணி திடத்தன்மை வயதில் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் ஆரம்ப கட்டத்தில் கர்ப்பப்பை புறணி தொடங்கும்.
இந்த நீர் கட்டிகள் எதனால் உருவாகிறது, என்பதற்கான காரணங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
சினைப்பை நீர்க்கட்டி தோன்றக் காரணம் 1
நோய்க்கான காரணத்தை இதுவரை மருத்துவ உலகம் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை, இருந்த போதும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால், இந்நோய் ஏற்படுகிறது என மருத்துவ ஆராய்ச்சிகள் தோராயமாக தெரிவிக்கிறது.
சினைப்பை நீர்க்கட்டி தோன்றக் காரணம் 2
பெரும்பாலும் இளம்பெண்களே அதிக அளவில் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக 15 வயது முதல் 28 வயதிற்குள் இருக்கும் பெண்கள் அதிகமாக இந்த நோயால் காணப்படுகிறார்கள்.
சினைப்பை நீர்க்கட்டி தோன்றக் காரணம் 3
இந்த அறிவியல் உலகத்தில் இப்பொழுது ஏற்பட்டுள்ள வாழ்க்கை மாற்றத்தால் வேலைப்பளு, அதிகப்படியான மன அழுத்தம், முக்கிய காரணமாக இருக்கிறது.
இதனால் பல பெண்கள் கருத்தரிக்க இயலாமல் போகும் குடும்பத்திலும், சமூகத்திலும், பல போராட்டங்களை சந்திக்கிறார்கள்.
கர்ப்பப்பை நீர்க்கட்டி அறிகுறிகள் என்ன
இதன் அறிகுறிகள் ஒருவருக்குகொருவர் மாறுபடுகிறது பெரும்பாலான பெண்கள் தெரிவிப்பது ஒரே அறிகுறி அசாதாரணமான மாதவிடாய் சுழற்சி.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிக ரோமம் வளர்தல், முடிகொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை மாறுதல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படுகிறது.
கர்ப்பப்பை நீர்க்கட்டி குணமாக சித்த மருத்துவம்
கருப்பை நீர்கட்டி கரைக்கும் உணவுகள் இந்த கலற்சிக்காய் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும், கலற்சிக்காய் பொடியாகவும் கிடைக்கும்.
இந்த கலற்சிக்காய் பார்ப்பதற்கு ஒரு சிறிய கோழி கூண்டு போல் இருக்கும், இவற்றின் மேல் புறம் முட்கள் நிறைந்து மிகவும் கடினமாக இருக்கும்.
இவற்றின் மேற்புற ஓட்டை ஒரு பக்கவாட்டில் உடைத்தால் அவற்றில் உள்ள ஒரு சிறிய பருப்பு இருக்கும்.
இந்த கலற்சிக்காய் ஒரு மாதம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும் இதனை சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாகத்தான் இருக்கும்.
இருந்தாலும் இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து சாப்பிட்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம்.
இவ்வாறு ஒரு மாதம் வரை நீங்கள் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணமாகும்.
இந்த மருந்தை நீங்கள் சாப்பிடும் போது வேறு எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது, என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீர்க்கட்டி கரைய சித்த மருத்துவம் குறிப்பு
கர்ப்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன்கள் சரியாக பயன்படுத்துவதில்லை.
இதனால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
இதனை குணப்படுத்த வெந்தயம், வெந்தயக் கீரையும் பயன்படுத்தப்படுகிறது.
தினமும் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
அதேபோல் மதிய உணவுக்கு குறைந்தது 5 நிமிடத்திற்கு முன் இந்த நீரை குடிக்க வேண்டும்.
அதே போல் இரவு உணவுக்கு முன் 5 நிமிடத்திற்கு முன் இந்த நீரை குடிக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் சாப்பிட்டு வர நீர் கட்டிகள் பிரச்சினை முழுவதும் குணமாகிவிடும்.
நீர்க்கட்டி கரைய நெல்லிக்காய்
நீர்க்கட்டி கரிய நெல்லிக்காய் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது.
எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு டம்ளர் அளவில் குடித்துவர இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது.
நீர்க்கட்டி கரைய தேன்
கர்ப்பப்பை நீர்க்கட்டி தோன்றுவதற்கு உடல் எடை முக்கிய காரணமாக இருக்கிறது.
எனவே இதை கட்டுப்படுத்த தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தினமும் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேனைக் கலந்து.
அதனுடன் எலுமிச்சை சாறு, சீரகம், இஞ்சி, கலந்து,ஒரு டம்ளர் அளவு குடிக்க வேண்டும்.
இவ்வாறு குடிப்பதன் மூலம் உடல் எடை குறைக்கப்படும், உடலில் தேவையற்ற கொழுப்பு கரைக்கப்படும், இதனால் கர்ப்பப்பை நீர் கட்டி கரைந்து விடும்.
மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2022..!
நீர்க்கட்டி கரைய துளசி
கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் 10 துளசி இலையை மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது துளசியை கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்கலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் நீர்க்கட்டி முழுவதும் குணப்படுத்த படும்.
Gramathu Nethili karuvadu kulambu seivathu eppadi
நீர்க்கட்டி கரைய லவங்கப்பட்டை
கர்ப்பப்பை நீர்க்கட்டி முழுவதும் கரைய தினமும் அதிக அளவு லவங்கப்பட்டை உணவில் சேர்த்துக் கொண்டால், பெண்களுக்கு நீர்க்கட்டி பிரச்சினைகள் சரி செய்யப்படுகிறது.
அதனால் தினமும் லவங்கப் பட்டையை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.