
When is Tamil Nadu most likely to receive rain
இன்று வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது..!
இன்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
தமிழ்நாட்டின் வடமேற்கு மாவட்டமான கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் மலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டம் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் மலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதிகபட்ச வெப்பநிலை 35-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் இன்று வங்க கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை சுற்றிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் புதுச்சேரி,தமிழ்நாடு,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல்,தென்காசி, சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, போன்ற இடங்களில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
முக்கியமாக மதுரை, சிவகங்கை, டெல்டா, புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கடலூர், ராணிப்பேட்டை,பெரம்பலூர், தஞ்சாவூர், போன்ற மாவட்டங்களில் மழை பெய்யும்.
ஏற்காடு,கொடைக்கானலில் போன்ற மலை பிரதேசங்களில் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
தென்தமிழக கடலோர பகுதிகளில் மன்னர் வளைகுடா மற்றும் அதனை சுற்றிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Chandrayaan 3 Vikram Lander landed on the Moon 2 time
இந்தியாவில் சிறந்த 10 சேமிப்பு திட்டங்கள் 2023