
Writing a land occupation complaint letter
நில ஆக்கிரமிப்பு புகார் மனு எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுபோல் புகார் கடிதம் எழுதினால் எளிமையாக நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.
நம் மாநிலத்தில் பல்வேறு வகையான முறைகேடுகள் நடைபெறுகிறது அதில் எப்போதும் முதன்மையாக இருப்பது நில அபகரிப்பு முறைகேடு தான்.
அசையா சொத்து மீது அதிக அளவு இப்பொழுது மக்களுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் தீராத ஆசை எழுந்துள்ளது.
100 கணக்கான ஹெக்டேர் கோயில் நிலங்களை தமிழ்நாடு அரசு இப்போது மீட்டு வருகிறது அந்த செய்தி தினம்தோறும் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
உங்களுடைய நிலத்தை ஒரு நபர் அபகரிக்க முயற்சி செய்யும்பொழுது அதற்கு எப்படி புகார் கடிதம் எழுதுவது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் நன்றாக அமையும்.
ஒருவேளை புறம்போக்கு நிலத்தை சில நபர்கள் அபகரிக்க முயற்சி செய்தால் அதற்கு நீங்கள் எளிமையாக புகார் கடிதம் எழுதி புகார் தெரிவிக்கலாம்.
உங்கள் கண் முன்னாடி ஒரு புறம்போக்கு நிலத்தை அல்லது வேறு ஒரு இடத்தையோ அரசியல்வாதி அல்லது தனிப்பட்ட நபர்கள் அல்லது அங்கு வசிக்கும் நபர்கள் அந்த இடத்தை அபகரிப்பு செய்துள்ளார்கள் என்றால்.
அந்த இடத்துக்கு சொந்தமானவர்கள் அல்லது அரசாங்கம் சொந்தமாக இருந்தால் முதலில் செய்ய வேண்டியது என்ன என்று முதலில் அந்த பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
இருப்பினும் நீங்கள் அந்த காவல் நிலையத்திற்கு ஒரு நில அபகரிப்பு புகார் கடிதம் எழுதி கொடுக்க வேண்டும் உங்களுக்கு அந்த நில அபகரிப்பு புகார் கடிதம் எழுத தெரியாது என்றால்.
இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும், சரி இந்த பதிவில் நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
நில அபகரிப்பு புகார் கடிதம் மாடல்
அனுப்புநர்
உங்களுடைய பெயர்
உங்களுடைய முகவரி
தங்கள் கைபேசி எண்
பெறுநர்
காவல் ஆணையர்
மாவட்ட காவல்துறை அலுவலகம் முகவரி
பொருள்
நில ஆக்கிரமிப்பு குறித்த வாத செய்தி
மதிப்பிற்குரிய அய்யா அல்லது அம்மா
இக் கடிதத்தின் வாயிலாக தங்கள் துறையிடம் நான் சமர்ப்பிக்கும் புகார் என்னவென்றால் எனது சொந்த நிலத்தில் சட்டவிரோதமாக ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இது உடனடியாக காவல்துறையினர் கையாளப்பட விட்டால் பாதகமான நிலைக்கே சென்று விடும்.
தொலைதூர கிராம / நகர் பகுதியான (நிலத்தின் விவரங்கள்) முகவரி பயிரிடப்படாத நிலம் ஒன்றை வாங்கி இருந்தேன், அந்த நிலம் வாங்கி ஒரு வருடம் கழித்த நிலையில் நான் வெளிநாட்டிற்கு சென்று விட்டேன்.
ஆதலால் பராமரிப்பின்றி இருந்த அந்த நிலத்தில் யாரோ ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார், மேலும் அந்த நிலத்தில் விவசாயம் அல்லது வேறு ஒரு வணிகம் செய்து வருகிறார்.
இவ்விவகாரம் குறித்து காவல்துறையிடம் முறையாக புகார் அளிக்க உரிய காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் புகாரின் அடிப்படையில் எனது நில உரிமை பத்திரமும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின், புகைப்படங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
மேலும் இப்புகாரின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எனது முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.
பிறகு உங்களுடைய கையொப்பம் நாள் இடம் போன்றவற்றை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணங்கள்
அந்த நிலத்தை வாங்குவதற்கு முன்பு அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது, யார் யார் அந்த நிலத்திற்கு உரிமையாளர் அந்த நிலத்திற்கு வில்லங்கச் சான்று, பட்டா, சிட்டா, பத்திரம், போன்றவை, சரியாக இருக்கிறதா என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நீங்கள் நிலம் வாங்கும் பஞ்சாயத்தில் அந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் அந்த நிலம் குறித்து தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
நிலத்தை வாங்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் அந்த நிலம் 20 வருடங்கள் யார் பெயரில் இருந்திருக்கிறது மற்றும் அந்த நிலத்தில் என்ன பயிர் செய்கிறார்கள் அல்லது வணிகம் செய்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் நீங்கள் வைத்துக் கொள்வது நல்லது.
நீங்கள் நிலம் வாங்கிய பிறகு அந்த நிலத்தின் முழு உரிமை பத்திரம், சிட்டா, பட்டா, போன்றவற்றை முழுவதும் உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் வாங்கிய நிலத்தில் பராமரிப்பு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டால்.
அந்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து நிலம் யார் பெயரில் இருக்கிறது, அதனுடைய எண் போன்றவற்றை பேனர் கொண்டு நிலத்தில் நட்டு விடுங்கள்.
வாங்கிய பிறகு வெளிநாட்டிற்கு சென்று விட்டாள் உங்களுடைய நண்பர் அல்லது உறவினரிடம் நிலத்தை இரண்டு மாதம் அல்லது மாதம் ஒருமுறை சென்று பார்த்து வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள் இது நிலத்தை மேலும் பாதுகாப்பாக வைக்க உதவும்.
அல்லது அதுபோன்ற சூழ்நிலை இல்லாமல் இருந்தால் கூகுள் மேப் மூலம் உங்களுடைய நிலத்தை தோராயமாக நீங்கள் வெளிநாட்டிலிருந்து கண்காணிக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை உங்களுடைய நிலத்தின் பட்டாவை புதிதாக ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், ஒருவேளை ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் இது உங்களுக்கு உதவும்.
புகார் செய்த பிறகு என்ன செய்ய வேண்டும்
நிலம் சம்பந்தமான உங்களுடைய அனைத்து ஆவணங்களையும் நீங்கள் சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பத்திர பதிவு செய்யும் பொழுது உங்களுக்கு நிலம் யார் விற்பனை செய்தார் அந்த நபரிடம் ஒரு கடிதம் வாங்கி கொள்ளுங்கள் இந்த நிலத்தை நான் விற்பனை செய்கிறேன் என்று.
அதுமட்டுமில்லாமல் ஒரு வீடியோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் நிலம் சம்பந்தமாக.
காவல்துறை அதிகாரிகள் நிலத்தை பார்வையிட வரும் பொழுது நீங்கள் அந்த கிராம நிர்வாக அதிகாரி, ஒரு வழக்கறிஞர், நிலம் விற்பனை செய்தவர், என அனைவரையும் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஒருவேளை ஆக்கிரமிப்பு செய்த நபர் உங்களை போன்ற போலியான ஆவணங்கள் மற்றும் நபர்களை அழைத்து வந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்.
குழந்தை திருமண தடுப்பு சட்டம் என்றால்
போலியான பட்டா சிட்டா பத்திரம் போன்றவற்றை எப்படி தெரிந்து கொள்வது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வது நல்லதாகும்.
Bitter gourd health benefits list in tamil
எப்பொழுதும் நிலத்தை நீங்கள் பார்வையிட்டுக் கொள்வது இது போன்ற ஒரு பிரச்சனையை எளிதாக தவிர்த்துவிடலாம்.